search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அல்ஜாரி ஜோசப்"

    • 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
    • அல்ஜாரி ஜோசப் ரன் அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டி20 போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மேக்ஸ்வெல்லின் அதிரடி சதத்தின் மூலம் 20 ஓவர்களில் 241 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து 242 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 34 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அந்த இன்னிங்சின் 19-வது ஓவரை ஆஸ்திரேலியாவின் ஸ்பென்சர் ஜான்சன் வீசினார். அந்த ஓவரின் 3-வது பந்தை எதிர்கொண்ட அல்ஜாரி ஜோசப் பந்தை கவர்ஸ் திசையில் அடித்து விட்டு ரன் எடுக்க ஓடினார்.

    அப்போது அந்த திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த பீல்டர் பந்தை எடுத்து வேகமாக ஜான்சனிடம் வீசினார். அவரும் பந்தை பிடித்து ஸ்டெம்பில் அடித்தார். ஆனால், பந்துவீச்சாளர் உட்பட ஆஸ்திரேலிய வீரர்கள் யாரும் அதற்கு மேல்முறையீடு செய்யவில்லை. இதையடுத்து இந்த காட்சி மைதானத்தில் உள்ள பெரிய திரையில் காண்பிக்கப்பட்டது.

    அப்போது ஜான்சன் பந்தை பிடித்து ஸ்டெம்பில் அடிக்கும் போது ஜோசப் கிரிஸிற்குள் வரவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் அவர் ரன் அவுட் என நினைத்து மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் கள நடுவர் ஜோசப்பிற்கு அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த ரன் அவுட்டிற்கு மேல்முறையீடு செய்யவில்லை. இதனால் கிரிக்கெட் விதிமுறைகளின் படி அல்ஜாரி ஜோசப்பிற்கு ரன் அவுட் கொடுக்கவில்லை என நடுவர் தெரித்தார். இதையடுத்து தொடர்ந்து பேட்டிங் ஆடிய அல்ஜாரி ஜோசப் 5 பந்தில் 2 ரன்கள் அடித்தார்.

    கிரிக்கெட் விதிமுறைகளின் படி ஒரு பீல்டரால் மேல்முறையீடு செய்யப்படும் வரை, எதிரணி வீரர் சட்டத்தின் கீழ் அவுட்டாக இருந்தாலும், எந்த நடுவரும் பேட்ஸ்மேனையும் நடுவர்கள் அவுட் கொடுக்க மாட்டார்கள்.

    • வெஸ்ட் இண்டீசின் அல்ஜாரி ஜோசப் 11.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது பெங்களூரு.
    • பேட் கம்மின்ஸ், டேரில் மிட்செல் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    இந்நிலையில், வெஸ்ட் இண்டீசின் அல்ஜாரி ஜோசப்பை ரூ.11.50 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஏலம் எடுத்துள்ளது.

    ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், நியூசிலாந்தின் டேரில் மிட்செல் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.

    ×