search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமணலிங்கேஸ்வரர் கோவில்"

    • உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது.
    • கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக நாள்தோறும் அரசு பஸ்களும், விசேஷ நாட்களில் கூடுதலாக சிறப்பு பஸ்களும் இயக்குவது வழக்கம்.

    உடுமலை:

    உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது.இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா,சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் சுயம்புவாக ஒரு சேர எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார்கள். அடிவாரத்தில் இருந்து சுமார் 950 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்யவும் அருவியில் குளித்து மகிழவும் நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள்,பொதுமக்கள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.

    கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக நாள்தோறும் அரசு பஸ்களும், விசேஷ நாட்களில் கூடுதலாக சிறப்பு பஸ்களும் இயக்குவது வழக்கம்.ஆனால் நேற்று உடுமலையில் இருந்து திருமூர்த்தி மலைக்கு போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் திருமூர்த்தி மலைக்கு வருகை தந்த பக்தர்கள் உடுமலை மத்திய பஸ் நிலையத்திலேயே மணி கணக்கில் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்,

    தீபாவளி பண்டிகை விடுமுறை மற்றும் அமாவாசை விழாவை கொண்டாடுவதற்கு திருமூர்த்தி மலைக்கு வருகை தந்தோம்.ஆனால் உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து திருமூர்த்தி மலைக்கு போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் மத்திய பஸ் நிலையத்திலேயே மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது இது குறித்து நிர்வாகத்திடம் கேட்டபோது பஸ் வரும் என்றார்கள்.ஆனால் நேரம் சென்றதே தவிர பஸ் வரவில்லை.

    மேலும் அமாவாசையையொட்டி மதியம் 12 மணிக்குள் திதி,தர்ப்பணம் கொடுத்து 12 மணியில் இருந்து 1 மணிக்குள் முன்னோர்களுக்கு படையல் இட்டு வழிபாடு செய்ய வேண்டும்.ஆனால் பஸ் வசதி இல்லாததால் திருமூர்த்தி மலைக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க இயலவில்லை. ஒரு சிலர் ஆட்டோ மற்றும் வேனுக்கு நபர் ஒன்றுக்கு ரூ.200 கொடுத்து திருமூர்த்தி மலைக்கு சென்றனர். போதிய பஸ்கள் இருந்தும் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக பொதுமக்கள் அவதிக்கு உள்ளானார்கள். பொதுமக்களின் எண்ணங்கள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கே அதிகாரிகள் உள்ளனர்.ஆனால் உடுமலை போக்குவரத்து கிளை அதிகாரிகள் பொதுமக்கள் நலனில் அக்கறை காட்டாதது வேதனை அளிக்கிறது. இதனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு வருகிறது.எனவே உடுமலையில் இருந்து திருமூர்த்தி மலைக்கு போதிய பஸ் வசதி ஏற்படுத்தி தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    ஆனால் கார்,வேன்,பைக் உள்ளிட்ட வாகனங்களில் திருமூர்த்திமலைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் பஞ்சலிங்க அருவிக்கு சென்று உற்சாகத்தோடு குளித்து மகிழ்ந்தனர்.அதன் பின்னர் அடிவாரத்துக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்தனர்.ஒரு சில பொதுமக்கள் பாலாற்றின் கரையில் அமர்ந்து தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். இதனால் பஞ்சலிங்க அருவி, கோவில் மற்றும் அணைப்பகுதியில் பக்தர்கள்,சுற்றுலாபயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

    • பஞ்சலிங்க அருவி, பாலாற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
    • தாராபுரம் அமராவதி ஆற்றில் தை அமாவாசையையொட்டி பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் மலைமேல் பஞ்சலிங்கம் அருவி, அடிவாரத்தில் பாலாற்றின் கரையில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. ஆன்மீகம் மற்றும் சுற்றுலா தலமாக உள்ள திருமூர்த்திமலையில் தை, புரட்டாசி, ஆடி அமாவாசை தினங்கள் சிறப்பானதாகும்.

    இந்தநிலையில் இன்று தை அமாவாசையையொட்டி உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் பஞ்சலிங்க அருவி, பாலாற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

    உடுமலை, பொள்ளாச்சி என சுற்றுப்புற விவசாயிகள் தை பட்ட சாகுபடியை தொடங்குவதற்கு முன் அமணலிங்கேஸ்வரரை வழிபடுவதையும், வேளாண் வளம், கால்நடை செல்வங்கள் பெருக மாட்டு வண்டிகளில் குடும்பத்துடன் வந்து மும்மூர்த்திகளை வழிபடுவதை பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர். இன்று தை அமாவாசையையொட்டி சுற்றுப்பகுதியிலுள்ள விவசாயிகள் நூற்றுக்கணக்கான ரேக்ளா, சவாரி வண்டி மற்றும் மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகளில் வந்தனர். மாட்டு வண்டிகளின் அணிவகுப்பால் திருமூர்த்தி மலை களை கட்டியது.

    தாராபுரம் அமராவதி ஆற்றில் தை அமாவாசையையொட்டி பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் தாராபுரம் அகஸ்தீஸ்வரர் கோவிலில் வழிபாடு நடத்தினர். இதனால் காலை முதலே அமராவதி ஆற்றில் பொதுமக்கள் குவிந்தனர். இதேபோன்று திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றங்கரையோர இடங்களில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    • கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் கழிப்பிடங்கள் மற்றும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.
    • நீலகிரி மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் , சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை மற்றும் பஞ்சலிங்க அருவி, அமண லிங்கேஸ்வரர் கோயிலுக்கு கடந்த கார்த்திகை மாதம் துவங்கியது முதல் அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இவ்வாறு வரும் பக்தர்கள் அமணலிங்கேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்யும் முன் பஞ்சலிங்க அருவியில் குளிக்க செல்கின்றனர். ஒரு சிலர் கோவிலின் முன் ஓடும் பாலாற்றிலேயே குளித்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் கழிப்பிடங்கள் மற்றும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    மேலும் பஞ்சலிங்க அருவி அருகில் குளித்துவிட்டு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அருவியின் அருகிலேயே குளியல் அறை கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக தற்காலிக அடிப்படையில் இந்த வசதியை செய்து தர வேண்டும் எனவும் பக்தர்கள் கருத்து தெரிவித்தனர் .

    விடுமுறை மற்றும் அரசு விடுமுறை தினங்களில் திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் , சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகின்றனர். அதனை கருத்தில் கொண்டு அடிப்படை வசதிகளான கழிப்பிடம், உடைமாற்றும் அறை, குடிநீர் வசதி, உணவருந்தும் கூடம் ஆகியவற்றை அமைத்து தர சுற்றுலாத் துறை நிர்வாகம் முலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது.
    • சப்த கன்னிகளுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன் ,விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள். கோவிலின் அடிவாரத்தில் இருந்து 900 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது. அருவியில் குளித்து மகிழவும் மும்மூர்த்திகளை தரிசனம் செய்யவும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருமூர்த்தி மலைக்கு வருகின்றனர்.

    அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசை கிருத்திகை பிரதோஷம், மகா சிவராத்திரி உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. ஆவணி அமாவாசையையொட்டி சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், வாகனங்கள் மற்றும் பஸ்சில் திருமூர்த்தி மலைக்கு வந்தனர். பின்னர் மலையின் மீது உள்ள பஞ்சலிங்க நீர்வீழ்ச்சி சென்று குளித்து அடிவாரப் பகுதியில் மும்மூர்த்திகள், சுப்பிரமணியர், சப்த கன்னிகளுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து அமணலிங்கேஸ்வரை வழிபட்டு சென்றனர். இதனால் கோவில் மற்றும் அருவி பகுதிகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    ×