search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்பழகன் எம்எல்ஏ"

    ஸ்டைர்லைட் வன்முறை தொடர்பாக ரஜினி கூறிய கருத்தை வரவேற்கிறோம் என்று அன்பழகன் எம்எல்ஏ கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநில மருத்துவ முதுநிலை மாணவர் சேர்க்கையில் அரசின் துணையோடு தொடர்ந்து முறைகேடு நடந்து வருகிறது. கடந்த 17-ந்தேதி முதுநிலை பட்டப்படிப்பிற்கான கவுன்சிலிங் நடந்தது.

    முதுநிலை படிப்பிற்கு ரூ.20 லட்சத்து 34 ஆயிரம் கட்டணமாக குழு நிர்ணயித்திருந்தது. இதில் புதுவை மாநில மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. பிற மாநிலங்களில் அந்தந்த மாநில மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி அதன் பிறகே அகில இந்திய கோட்டாவில் மாணவர்களை நிரப்பினர்.

    ஆனால் புதுவையில் சுகாதரத்துறை செயலாளர் கவர்னரிடம் தவறான தகவல்களை எடுத்துக்கூறி கவுன் சிலிங்கை நடத்தி முடித்துள்ளார். மண்ணாடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 2 மாணவர்கள் கவுன்சிலிங் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மாணவர்கள் திடீரென கல்லூரியில் சேர இயலாது என கடிதம் அளித்து விட்டனர்.

    இதையடுத்து கல்லூரி நிர்வாகம் தன்னிச்சையாக 2 மாணவர்களை முதுநிலை படிப்பில் சேர்த்துள்ளது. ஆந்திராவை சேர்ந்த அந்த மாணவர்கள் அதிகளவில் பணம் தருவோம் என்று சொன்னதால் சேர்க்கப்பட்டதாக தெரிகிறது. முதுநிலை மாணவர் சேர்க்கை தொடர்பாக கவர்னர் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த விசாரணையின்மூலம் பல உண்மைகள் வெளிவரும்.

    கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த அரசு முடிவெடுத்துள்ளது. புதிய உறுப்பினர்களை சேர்க்காமல் தேர்தலை நடத்துவது தவறான அணுகு முறை. 30 பேர் உறுப்பினராக இருக்கக்கூடிய சங்கத்திற்கு 9 இயக்குனர்களை தேர்வு செய்கின்றனர்.

    இந்நிலையில் கடைசியாக நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், இளங்கோ நகர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்திற்கு தேர்தல் நடத்த தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும். புதிய உறுப்பினர்களை சேர்த்த பின்னரே கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த வேண்டும்.

    புதுவையில் சில இடங்களில் கட்டண பார்க்கிங் முறையை அமல்படுத்த உள்ளாட்சித்துறை முடிவு செய்துள்ளது.

    கடலூர் சாலை பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. இங்கு உள்ளாட்சித்துறை கட்டண பார்க்கிங்கிற்கு ஏலம் விட்டுள்ளது. பொதுப் பணித்துறையின் எந்த அனுமதியும் பெறாமல் ஏலம் விடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் நகர பகுதியில் பல வணிக நிறுவனங்கள் பார்க்கிங் இல்லாமல் கட்டிடம் கட்டியுள்ளனர்.

    இதை அரசு கண்டும், காணாமலும் உள்ளது. இனியாவது புதுவை நகர குழுமம், பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை பார்க்கிங் வசதி இல்லாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி பார்க்கிங் வசதி செய்ய உத்தரவிட வேண்டும்.

    நடிகர் ரஜினிகாந்தின் பல்வேறு கருத்துகள் அ.தி. மு.க.வுக்கு ஏற்புடையதல்ல. ஆனால் ஸ்டைர்லைட் வன்முறை தொடர்பாக ரஜினி கூறிய கருத்தை வரவேற்கிறோம். அவரின் கருத்து 100 சதவீதம் ஏற்புடையது. அம்மா இருந்திருந்தால் இதுபோன்ற வன்முறைகள் நடைபெற சாத்தியமே இல்லை. எதற்கெடுத்தாலும் போராட்டம் என்பது தீர்வாகாது. இதை புதுவையில் உள்ள ஆளும் கட்சியும், நாராயணசாமியும் உணர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுச்சேரி சட்டசபை கூட்டத்தொடரை 23 நாள் நடத்த வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

    புதுச்சேரி:

    அன்பழகன் எம்.எல்.ஏ. சபாநாயகரிடம் அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

    இவ்வாண்டின் முதல் சட்டசபை கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்கி உரைக்கு நன்றி கூட தெரிவிக்காமல் அவசர அவசரமாக ஒரு நாளிலேயே முடித்து வைக்கபட்டுள்ளது. அன்றைய தினமே 3 மாத அரசின் முக்கிய செலவினங்களுக்கு முன் அனுமதியும் வழங்கப்பட்டது.

    தற்போது இவ்வாண்டில் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 4-ந் தேதி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனநாயக ரீதியில் துறை வாரியாக விவாதம் செய்து நடத்த போதிய கால அவகாசம் கடந்த காலங்களில் வழங்கப்படவில்லை.

    தற்போது தமிழகத்தில் நடைபெறும் சட்ட மன்ற கூட்டத்தொடர் வரும் 29-ந் தேதி தெடங்கி 23 அமர்வு நாட்கள் நடைபெற உள்ளது. புதுவையிலும் நடைபெற இருக்கும் சட்ட மன்ற கூட்டத் தொடரை 23 அமர்வு நாட்களுக்கு குறைவில்லாமல் நடத்திட தாங்கள் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

    கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்தல், பட்ஜெட் உரைக்கு நன்றி தெரிவித்தல், துறை ரீதியான விவாதங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் கால நிர்ணயம் செய்ய உடனடியாக அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தை ஒன்றிரண்டு தினங்களுக்குள் கூட்ட பேரவை தலைவர் உரிய ஏற்பாட்டை செய்திட வேண்டும்.

    இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.

    ×