search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்னப்பறவை"

    • திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக் காண பூமியைக் குடைந்து சென்றார்.
    • பிரம்மன், முடியைக் கண்டதாக, தாழம்பூவிடம் பொய் சொல்ல சொல்லும்படி கூறினார்.

    படைக்கும் கடவுளாகிய பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளாகிய திருமாலுக்கும்,

    இருவருமே பெரியவர்கள் என்று தமக்குள் சர்ச்சை ஏற்பட்டு,

    சிவபெருமானிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க,

    சிவபெருமான் தனது அடியை அல்லது முடியை உங்களில் யார் கண்டு வருகிறீர்களோ அவர் தான் பெரியவர் எனக்கூற,

    திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக் காண பூமியைக் குடைந்து சென்றார்.

    அடியைக் காண இயலாமல் சோர்ந்து திரும்பினார்.

    பிரம்மன் அன்னப் பறவையாக உருவெடுத்து சிவபெருமானது முடியைக் காண உயரப் பறந்து சென்றார்.

    முடியைக் காண இயலாமல் தயங்கி, பறக்கும்போது சிவன் தலைமுடியில் இருந்து தாழம்பூ கீழே இறங்கி வந்ததை கண்டு, அதனிடம் சிவன் முடியை காண எவ்வளவு தூரம் உள்ளது என்று கேட்க,

    தாழம்பூ தான் சிவனாரின் சடையில் இருந்து நழுவி நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழ் நோக்கி வந்து கொண்டிருக்கிறேன் என்று கூற,

    பிரம்மன் முடியைக் காணும் முயற்சியை விடுத்து தாழம்பூவிடம் ஒரு பொய் சொல்லும்படி கூறினார்.

    திருமாலிடம், சிவன் முடியை பிரம்மன் கண்டதாக சாட்சி சொல்லும்படி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தாழம்பூ பொய் சாட்சி சொல்ல,

    முற்றும் உணர்ந்த சிவபெருமான், பொய் சொன்ன பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் ஆலயம் அமையாதென்றும்,

    பொய்சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூஜைக்கு உதவாது என்றும் சாபமிட்டார்.

    திருமாலும், பிரம்மனும் தான் என்ற அகந்தை நீங்கிட உலகுக்கு உணர்த்த சிவபெருமான் அடியையும், முடியையும் காணமுடியாத ஜோதி பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை.

    அது மஹாசிவராத்திரி நாளாகும்.

    இங்குள்ள அண்ணாமலையானது கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும்,

    துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறி வந்துள்ளது.

    ஜோதி பிழம்பாக இருந்த சிவபெருமானை,  திருமாலும், பிரம்மனும் பணிந்து பிரார்த்திக்க, அவர்களின் பிரார்த்தனைக்கு இறங்கி,

    சிவபெருமானே சிவலிங்க திரு உருக்கொண்டு மலையின் அடிப்பாகத்தில் அடைந்துள்ள இடமே இத்திருக்கோவில் ஆகும்.



    • அழகர்கோவிலில் மாசி திருவிழா நடந்தது.
    • பொய்கைகரைப்பட்டி தெப்பக்குளத்தில் அன்னப்பறவை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்.

    அலங்காநல்லூர்

    தமிழகத்தின் தென் திருப்பதி என்று அழைக்கப்ப டுவதும், 108 வைணவ தலங்களில் ஒன்றானதுமான மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆகும்.

    இந்த கோவிலில் நடை பெறும் திருவிழாக்களில் மாசி மாதம் நடைபெறும் தெப்ப உற்சவம் முக்கியமானது. இந்த விழா நேற்று மாலை கஜேந்திர மோட்சத்துடன் தொடங்கியது. கருட வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் இன்று காலை நடந்தது. ஸ்ரீ தேவி, பூமிதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமாள் எழுந்தருளி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் தெப்பத்திற்கு புறப்பட்டார்.

    மண்டூக தீர்த்தம் என்ற பொய்கைகரைப்பட்டி புஸ்கரணிக்கு வழி நெடுகிலும் நின்று சேவை சாதித்தார். பொய்கைக்கரைப்பட்டி தெப்பத்தில் காலை 10.50 மணிக்கு தெப்பத்தின் கிழக்கு புறமுள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். அன்னப்பறவை வாகனத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட பக்தி பரவசத்துடன் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பகல் முழுவதும் தெப்பத்தில் இருக்கும் கள்ளழகர் இன்று மாலை பூஜை முடித்து மீண்டும் தெப்பத்தில் எழுந்தருளுவார். தெப்ப உற்சவத்தை காண சுற்று வட்டாரத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து வழிபாடு செய்தனர்.

    இன்று இரவு சுவாமி வந்த வழியாக சென்று கள்ளழகர் கோவிலுக்கு இருப்பிடம் சேருகிறார்.

    ×