search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அழகர்கோவில்"

    • மதுரை அழகர்கோவிலில் கள்ளழகர் கோவில் பதினெட்டாம்படி ராஜகோபுர மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோவில் ராஜகோபுரத்துக்கு இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பதினெட்டாம்படி ராஜகோபுரத்திற்கு கடந்த 2011-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    12 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் கோவி லில் உள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் யாக சாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்றும் 2-வது நாளாக 40 வேத விற்பன்னர்கள் கொண்ட குழுவினர், ஒரே நேரத்தில் 8 யாக குண்டங்களில் வேத மந்திரங்களுடன் யாக பூஜை கள் நடத்தினர்.

    இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கும்பாபி ஷேக விழா இன்று காலை நடைபெற்றது. காலை 9.15 மணிக்கு மேல் 10 மணிக்குள் மகா கும்பாபி ஷேக விழா நடைபெற்றது. முன்னதாக நேற்று இரவு கள்ளழகர் கோவில் பதி னெட்டாம்படி 7 நிலை கொண்ட ராஜகோபுரம், முழுக்க முழுக்க வண்ண விளக்குகளால், அலங்க ரிக்கப்பட்டிருந்தது.

    பக்தர்கள் பாதுகாப்புடன் நின்று கும்பாபிஷேக விழாவை காண, தனித்தனியாக, இரும்பு கம்பிகளான தடுப்புகள் மாவட்ட காவல் துறை மூலம் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்தது. பதினெட்டாம் படி கருப்பணசுவாமி கோவில் முன்பு மிகப் பழமையான திருப்பவுத்திர புஷ்கரணி தெப்பக்குளத்திற்கு அழகர் மலையில் இருந்து வழிந்து நூபுர கங்கை தீர்த்த தண் ணீர், மற்றும் தற்போது பெய்யும்மழை நீர் சேர்ந்து தெப்பக்குளம் நிரம்பி வழி யும் நிலையில் உள்ளது. இந்த கும்பாபிஷேக நேரத் தில் இந்த தெப்பக்குளம் நிரம்பி உள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் வர வேற்பை பெற்றுள்ளது. முழுக்க முழுக்க நூபுர கங்கை புனித தீர்த்தக் குடங்களிலுருந்து, கும்ப கலசங்களில் குடம் குடமாக ஊற்றி பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க வானத் தில் கருடன் வட்டமிட கும்பாபிஷேக விழா நடை பெற்றது. அப்போது ஹெலிகாப்ட ரில் இருந்து பூ மழை தூவியது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.

    விழா ஏற்பாடு களை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் அறங்காவலர் குழுவினர், திருக்கோவில் கண்கா ணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவில் ஆடி பெருந்திருவிழா நடந்தது.
    • வருகிற 24-ந்தேதி கொடியேற்றமும், 2-ந்தேதி தேரோட்டமும் நடக்கிறது.

    அலங்காநல்லூர்

    திருமாலிருஞ்சோலை மற்றும் தென்திருப்பதி என்று போற்றி அழைக்கப் படும் 108 திவ்யதேசங்களில் ஒன்றானது மதுரையை அடுத்த அழகர்கோவில், கள்ளழகர் கோவில் ஆகும். இங்கு நடைபெறும் திரு–விழாக்களில் ஆடி மாதம் நடைபெறும் ஆடி பெருந்தி–ருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    இந்த ஆடி திருவிழா வருகின்ற 24-ந்தேதி திங்கட் கிழமை காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு அன்ன வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் புறப்பாடு நடைபெறும்.

    25-ந்தேதி காலையில் தங்க பல்லக்கு உற்சவம், இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 26-ந்தேதி காலையில் சுவாமி புறப்பாடு, இரவு அனுமார் வாகனத்திலும், 27-ந்தேதி இரவு கருட வாகனத்திலும், 28-ந்தேதி காலை பெருமாள் தங்க பல்லக்கில் புறப்பாடாகி மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்தில் எழுந்த–ருளுவார்.

    அன்று இரவு சேஷ வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். மேலும் 29-ந்தேதி இரவு யானை வாகனத்திலும், 30-ந்தேதி இரவு புஷ்ப சக்கரமும் நடைபெறும். 31-ந்தேதி இரவு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெ–றும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற ஆகஸ்ட் 1-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடை–பெறுகிறது. இதில் காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் திருத்தேரில் சுவாமி எழுந்தருளல், 8 மணிக்கு மேல் 8.35 மணிக் குள் திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெறும். அன்று இரவு புஷ்ப பல்லாக்கு, 2-ந்தேதி காலையில் தீர்த்த–வாரி, இரவில் சப்தா வர்ணம் புஷ்ப விமானம், 3-ந்தேதி உற்சவ சாந்தி நடக்கிறது.

    அதைத் தொடர்ந்து 16-ந்தேதி ஆடி அமைவாசையை யொட்டி கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெ–றும். இத்துடன் இந்த திருவிழா நிறைவு பெறுகி–றது. ஆடிப்ெபருந்திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் வெங்கடாஜலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கோவில் கண்கா–ணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், பணியாளர் கள் செய்து வருகின்றனர்.

    • அழகர்கோவிலில் 16-ந்தேதி மின்தடை ஏற்படும்.
    • மின்வாரிய செயற்பொறியாளர் ராஜஸ்ரீ தெரிவி த்துள்ளார்.

    மதுரை

    அழகர்கோவில் துணை மின்நிலை யத்தில் வருகிற 16-ந்தேதி பராமரிப்பு பணிகள் நடை பெறுகிறது.

    எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை பொய்கை கரைப்பட்டி, கெமிக்கல்ஸ்., கள்ளந்திரி, நாயக்கன் பட்டி, அழகர் கோவில், அப்பன் தருப்பதி, பூண்டி, தூயநெறி, மாத்தூர், வெள்ளி யங்குன்றம் புதூர், கடவூர், தொண்ட மான்பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமாந்தூர் பட்டி, தொப்ப லாம் பட்டி ஆகிய பகுதி களில் மின்த டை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொ றியாளர் ரா ஜஸ்ரீ தெரிவி த்துள்ளார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர்-அழகர்கோவிலில் திருக்கல்யாண வைபவம் நாளை நடக்கிறது.
    • கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    மதுரை

    108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்றதாக திகழும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண விழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஆண்டாள்-ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான ரெங்கமன்னார்-ஆண்டாள் திருக்கல்யாணம் நாளை(5-ந்தேதி) நடக்கிறது. இதை முன்னிட்டு திருப்பதி வெங்கடாஜலபதி அணிந்த பட்டு வஸ்திரத்தை ஆண் டாள் கோவிலுக்கு திருப்பதி தேவஸ்தான குழுவினர் கொண்டு வந்தனர்.

    இந்த வஸ்திரத்தை அணிந்து நாளை ஆண்டாள் திருக்கல்யாணத்தில் பங்கேற்பார்.

    நாளை இரவு கோவில் முன்புறமுள்ள ஆடிப்பூர கொட்டகையில் திருமணம் நடக்கிறது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். திருக்கல்யாண விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள மற்றொரு திவ்யதேச மான அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் பங்குனி திருக்கல்யாண விழா 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நாளை காலை நடக்கிறது.

    சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் சுந்தரராஜ பெருமாள் ஒரே நேரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் ஆகிய 4 பிராட்டி மார்களையும் மணந்து கொள்கிறார். திருக்கல் யாணத்தை முன்னிட்டு 10 ஆயிரம் பக்தர்களுக்கு விருந்தளிக்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி பஸ் நிலையம் அருகில் உள்ள 2 கோவில் மண்டபங்கள் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள அன்னதான கூடத்தில் கல்யாண விருந்து நடைபெறும்.

    திருக்கல்யாண மொய் செலுத்த சிறப்பு கவுண் டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அழகர்கோவில் திருக்கல்யாண விழாவில் மதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    • அழகர்கோவிலில் மாசி திருவிழா நடந்தது.
    • பொய்கைகரைப்பட்டி தெப்பக்குளத்தில் அன்னப்பறவை வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார்.

    அலங்காநல்லூர்

    தமிழகத்தின் தென் திருப்பதி என்று அழைக்கப்ப டுவதும், 108 வைணவ தலங்களில் ஒன்றானதுமான மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆகும்.

    இந்த கோவிலில் நடை பெறும் திருவிழாக்களில் மாசி மாதம் நடைபெறும் தெப்ப உற்சவம் முக்கியமானது. இந்த விழா நேற்று மாலை கஜேந்திர மோட்சத்துடன் தொடங்கியது. கருட வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் இன்று காலை நடந்தது. ஸ்ரீ தேவி, பூமிதேவி சமேத கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமாள் எழுந்தருளி மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் தெப்பத்திற்கு புறப்பட்டார்.

    மண்டூக தீர்த்தம் என்ற பொய்கைகரைப்பட்டி புஸ்கரணிக்கு வழி நெடுகிலும் நின்று சேவை சாதித்தார். பொய்கைக்கரைப்பட்டி தெப்பத்தில் காலை 10.50 மணிக்கு தெப்பத்தின் கிழக்கு புறமுள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். அன்னப்பறவை வாகனத்தில் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட பக்தி பரவசத்துடன் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பகல் முழுவதும் தெப்பத்தில் இருக்கும் கள்ளழகர் இன்று மாலை பூஜை முடித்து மீண்டும் தெப்பத்தில் எழுந்தருளுவார். தெப்ப உற்சவத்தை காண சுற்று வட்டாரத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து வழிபாடு செய்தனர்.

    இன்று இரவு சுவாமி வந்த வழியாக சென்று கள்ளழகர் கோவிலுக்கு இருப்பிடம் சேருகிறார்.

    ×