search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடிடாஸ்"

    • உலகின் பல்வேறு நாடுகளில் திறன் மையங்களை கொண்டுள்ளது.
    • சென்னையில் அடிடாஸ் திறன் மையம் செயல்பட இருக்கிறது.

    அடிடாஸ் நிறுவனம் சீனாவை தவிர்த்து ஆசியாவில் தனது முதல் சர்வதேச திறன் மையத்தை (ஜி.சி.சி.) சென்னையில் கட்டமைக்க இருக்கிறது. காலணி மற்றும் ஆடை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதில் உலகின் முன்னணி பிராண்டாக அடிடாஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் திறன் மையங்களை கொண்டுள்ளது.

    ஜெர்மனியில் உள்ள பவேரியாவை தலைமையகமாக கொண்டு செயல்படும் அடிடாஸ், இந்தியாவில் தனது முதல் திறன் மையத்தை உருவாக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழநாட்டின் தலைநகர் சென்னையில் அடிடாஸ் திறன் மையம் செயல்பட இருக்கிறது. சென்னையில் இருந்து பணியாற்ற இருக்கும் அகில் கபூர் அடிடாஸ் இந்தியா திறன் மையத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    "இவரது தலைமையில் இந்த திறன் மையத்தில் கொள்முதல், நிதி நிர்வாகம் மற்றும் ஆய்வு, கட்டணங்கள் மற்றும் செலவினங்களை அறிக்கையாக்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது," என இது தொடர்பான விவரம் அறிந்த நபர் தகவல் தெரிவித்து இருக்கிறார்.

    இந்த திறன் மையத்தில் பணியாற்ற அடுத்த மூன்றில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் அதிக திறன் கொண்டவர்கள் அடங்கிய குழு பணியமர்த்தப்பட இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

    • அடிடாஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.
    • ஜூன் 7-ம் தேதி தொடங்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இருந்து அடிடாஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் தொடங்குகிறது.

    இந்திய அணியின் கிட் ஸ்பான்சராக 2016-ல் இருந்து 2020 வரை நைக் நிறுவனம் இருந்தது. அதைத்தொடர்ந்து 2020-ல் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கிட் ஸ்பான்சராக இருந்துவந்த எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்தது. இந்திய அணியின் மெயின் ஸ்பான்சராக பைஜூஸ்நிறுவனம் இருந்து வருகிறது.

    இந்நிலையில், புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. வரும் ஜூன் 7-ம் தேதி தொடங்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இருந்து அடிடாஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் தொடங்குகிறது. அடிடாஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

    இந்திய அணியின் ஜெர்சி மற்றும் கிரிக்கெட் சார்ந்த பிற பொருட்களை ரசிகர்களுக்கு விற்பனை செய்யும் உரிமையும் இந்நிறுவனத்திற்கு வழங்கப்படும்.

    ×