search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஃபைசாபாத்"

    உத்தரப்பிரதேச மாநிலம் ஃபைசாபாத் பகுதியில் அடுத்தடுத்து மசூதியும் கோவிலும் அமைந்துள்ளது. இதன்மூலம் அப்பகுதி மக்கள் மத ஒற்றுமைக்கு உதாரணமாக திகழ்கின்றனர். #HindusMuslimspeace
    லக்னோ:

    உலகின் ஒரு சில நாடுகளில் மட்டுமே அனைத்து மதத்தினரும் வாழும் சூழல் காணப்படும் அந்த வகையில் இந்தியா சிறப்பு வாய்ந்த நாடு ஆகும். இந்தியாவில் பல மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். அவ்வப்போது மதரீதியான சண்டைகள் ஏற்படும் போதிலும் மக்கள் ஒற்றுமையான வாழ்வையே விரும்புகின்றனர்.

    இந்த ஒற்றுமையை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது பிகாபூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ள கோவிலும் மசூதியும். அருகருகே அமைந்துள்ள இந்த கோவிலுக்கும் மசூதிக்கும் வரும் மக்கள் ஒருபோதும் தங்களுக்குள்ளே வன்முறையில் ஈடுபட்டதில்லை.

    பாபர் மசூதி இடிக்கப்பட்டு நாடு முழுவதும் வன்முறை வெடித்த சூழ்நிலையிலும் நாங்கள் ஒற்றுமையுடன் இருந்தோம் என அப்பகுதி வாழ் மக்கள் பெருமையுடன் கூறுகின்றனர்.



    இதுதொடர்பாக அப்பகுதிவாசி ஒருவர் பேசுகையில், ‘இந்துக்களும் இஸ்லாமியர்களும் அமைதியுடன் ஒற்றுமையுடனும் இங்கு வாழ்கிறோம். மிகச்சிறந்த புரிதலுடன் மற்றவர்களின் பிரார்த்தனை நேரங்களில் ஒருவருக்கொருவர் தொந்தரவு செய்வதில்லை’ என தெரிவித்துள்ளார்.

    மத ரீதியாக மக்களை பிரிக்க நினைக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் பாடம் புகட்டும் வகையில் இப்பகுதி மக்களின் ஒற்றுமை அமைந்துள்ளது. #HindusMuslimspeace
    ×