search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young men arrest"

    பாரூர் பகுதிகளில் வழிப்பறி மற்றும் இருசக்கர வாகனங்கள் கடத்தலில் ஈடுபட்டுவந்த பிரபல கொள்ளையனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாரூர், மற்றம் நாகரசம்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட செல்லம்பட்டி, நாகரசம் பட்டி, வேலம்பட்டி, பாரூர், அரசம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் வழிப்பறி மற்றும் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வந்தது. புகாரின்பேரில், பாரூர் பேலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் ஈடுபட்டு குற்றவாளியை தேடிவந்த நிலையில், பாரூர் அடுத்த செல்லம்பட்டி பிரிவு என்ற இடத்தில் இருந்து காரிமங்கலம் செல்லும் சாலையில் உள்ள டீ கடையில் டீக்குடிக்க வந்த நபரிடம் கத்தியை காட்டி பணத்தை பறித்துக்கொண்டு ஓடும் வாலிபரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்.

    இந்த நிலையில் பிடிபட்ட வாலிபரை பாரூர் போலீசார் விசாரணை நடத்தியதில் இவர் சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தீவட்டிபட்டி அருகேயுள்ள காடையம்பட்டி கிராமத்தை சேர்ந்த வெள்ளப்பன் மகன் டியூக் அருள் என்கிற அருள்மணி(23) என்பதும் இப்பகுதிகளில் இவர் விலையுயர்ந்த இருசக்கர வாகங்களை கடத்துவதும் தனியாக செல்லும் பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் ஒத்துக்கொண்டார். மேலும், இவர் டியூக் ரக விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை கடத்துவதில் இவருக்கு தனி ஆர்வம் கொண்டவர் என்பதை ஒத்துகொண்டார். பிறகு வாலிபரை கைது செய்து போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தொடர்ந்து இப்பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த டியூக் அருள் என்கிற அருள்மணியை மாவட்ட கலெக்டர் பிரபாகர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் அவரை சேலம் ஜெயிலில் அடைத்தனர். #tamilnews
    ஆந்திர மாநிலம் மதனப்பல்லி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் மதனப்பல்லி அடுத்த கோலபையிலு கிராமத்தை சேர்ந்தவர் 4 வயது சிறுமி. இவர் தனது தாய், தந்தையுடன் தர்பார் சிவாஜி பாஷா என்பவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். தாபார் சிவாஜி பாஷா (20) மதனப்பல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று 4 வயது சிறுமிக்கு பாடம் கற்று கொடுப்பதாக அழைத்து சென்று உள்ளார். பின்னர் தன்னுடைய அறையில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது சிறுமி அலறி கூச்சலிட்டதால் சிறுமியின் தாயார் மற்றும் பொதுமக்கள் சென்று கதவை திறக்குமாறு கூறினர்.

    ஆனால் தர்பார் சிவாஜி பாஷா கதவை திறக்காததால் கதவை உடைத்து அறையின் உள்ளே சென்று சிறுமியை மீட்டனர். இதுகுறித்து மதனப்பல்லி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் சிறுமியை சிகிச்சைக்காக மதனப்பல்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மதனப்பல்லி எம்.எல்.ஏ. தேசாய் சிப்பாரெட்டி ஆஸ்பத்திரிக்கு வந்து சிறுமியின் உடல் நலன் குறித்து விசாரித்தார். மேலும் சிறுமிக்கு தேவையான வசதிகள் செய்து தருவதாகவும் உறுதி அளித்தார்.

    சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை உடனடியாக கைது செய்ய கோரி சிறுமியின் உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து மதனபல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    சேலத்தில் நகைக்கடையில் கொள்ளையடித்த வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். சுடுகாட்டில் புதைத்து வைத்திருந்த 35 பவுன் நகை மீட்கப்பட்டது.
    சேலம்:

    சேலம் வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் சேலம் வலசையூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 28), 3 ரோடு பகுதியை சேர்ந்த சிவானந்தம்(30) என்பதும், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீராணம் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரை வழிமறித்து ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 28-ந் தேதி அம்மாபேட்டையில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான நகைக்கடைக்குள் புகுந்து 35 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி கொலுசு மற்றும் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

    மேலும் அவர்களில் கார்த்திக் தனது வீட்டின் பின்பகுதியில் உள்ள சுடுகாட்டில் 35 பவுன் நகையை மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்ததும், சிவானந்தம் வீட்டின் படிக்கட்டின் கீழே குழி தோண்டி 3 கிலோ வெள்ளி கொலுசுவை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நகைகளை போலீசார் மீட்டனர். பின்னர் அவர்கள் இருவருக்கும் வேறு ஏதாவது திருட்டு வழக்குகளில் தொடர்பு உள்ளதா? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×