search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Motorcycle smuggling"

    பாரூர் பகுதிகளில் வழிப்பறி மற்றும் இருசக்கர வாகனங்கள் கடத்தலில் ஈடுபட்டுவந்த பிரபல கொள்ளையனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாரூர், மற்றம் நாகரசம்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட செல்லம்பட்டி, நாகரசம் பட்டி, வேலம்பட்டி, பாரூர், அரசம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் வழிப்பறி மற்றும் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வந்தது. புகாரின்பேரில், பாரூர் பேலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் ஈடுபட்டு குற்றவாளியை தேடிவந்த நிலையில், பாரூர் அடுத்த செல்லம்பட்டி பிரிவு என்ற இடத்தில் இருந்து காரிமங்கலம் செல்லும் சாலையில் உள்ள டீ கடையில் டீக்குடிக்க வந்த நபரிடம் கத்தியை காட்டி பணத்தை பறித்துக்கொண்டு ஓடும் வாலிபரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்.

    இந்த நிலையில் பிடிபட்ட வாலிபரை பாரூர் போலீசார் விசாரணை நடத்தியதில் இவர் சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தீவட்டிபட்டி அருகேயுள்ள காடையம்பட்டி கிராமத்தை சேர்ந்த வெள்ளப்பன் மகன் டியூக் அருள் என்கிற அருள்மணி(23) என்பதும் இப்பகுதிகளில் இவர் விலையுயர்ந்த இருசக்கர வாகங்களை கடத்துவதும் தனியாக செல்லும் பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் ஒத்துக்கொண்டார். மேலும், இவர் டியூக் ரக விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை கடத்துவதில் இவருக்கு தனி ஆர்வம் கொண்டவர் என்பதை ஒத்துகொண்டார். பிறகு வாலிபரை கைது செய்து போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    தொடர்ந்து இப்பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த டியூக் அருள் என்கிற அருள்மணியை மாவட்ட கலெக்டர் பிரபாகர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் அவரை சேலம் ஜெயிலில் அடைத்தனர். #tamilnews
    ×