search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Water Day"

    • நாடு தழுவிய அளவில் 305 மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
    • மக்களுக்கு கிடைக்கும் குடிநீர் தரமானதாக உள்ளதா? எப்படி இருக்கிறது? என்று ஆய்வில் கேள்விகள் கேட்கப்பட்டன.

    புதுடெல்லி:

    உலக தண்ணீர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

    மக்களின் சுகாதாரமான வாழ்க்கைக்கு தண்ணீரே பிரதானமாகும். தண்ணீர் மூலம்தான் பெரும்பாலான நோய்கள் பரவுகிறது.

    இதனால் சுகாதார துறையினரும், டாக்டர்களும் வீடுகளில் சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும், தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.

    நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு நல்ல, சுத்தமான தண்ணீர் கிடைக்கிறதா? என்று சமீபத்தில் ஒரு அமைப்பு ஆய்வு நடத்தியது.

    நாடு தழுவிய அளவில் 305 மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் மக்களுக்கு கிடைக்கும் குடிநீர் தரமானதாக உள்ளதா? எப்படி இருக்கிறது? என்று கேள்விகள் கேட்கப்பட்டன. சுமார் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கிடைத்த பதில்கள் ஆய்வு செய்யப்பட்டன.

    இந்த ஆய்வில் நாடு முழுவதும் 97 சதவீத குடும்பங்களுக்கு இதுவரை பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை என தெரியவந்தது.

    குழாய்கள் மூலம் நேரிடையாக கிடைக்கும் குடிநீரை அவர்களே சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    குடிநீரை பொதுமக்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்ற கேள்விக்கு 44 சதவீதம் பேர் ஆர்ஓ அமைப்பு மூலம் சுத்தம் செய்து பயன்படுத்துவதாக தெரிவித்தனர். 28 சதவீதம் பேர் சுத்திகரிப்பு கருவிகள் மூலம் குடிநீரை சுத்தம் செய்து கொள்வதாக கூறினர்.

    11 சதவீதம் பேர் மட்டுமே குடிநீரை கொதிக்க வைத்து பயன்படுத்துவதாக தெரிவித்தனர்.

    உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வினியோகிக்கப்படும் தண்ணீரின் தரம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு 44 சதவீதம் பேர் நன்றாக இருப்பதாக கூறியுள்ளனர். கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வை காட்டிலும் இந்த ஆண்டு தரமான தண்ணீர் கிடைக்கிறது என்பது அதிகரித்து உள்ளது.

    14 சதவீதம் பேர் மோசமான தண்ணீரே கிடைப்பதாக தெரிவித்து உள்ளனர். 32 சதவீதம் பேர் பரவாயில்லை என தெரிவித்து உள்ளனர். இதற்கு உள்ளாட்சிகளின் செயல்பாடும் ஒரு காரணம் என தெரியவந்துள்ளது.

    நல்ல நீரின் தரம் குடிப்பதற்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்பதே பலரின் கருத்து. இதில் தண்ணீரை வடிகட்ட இப்போதும் பலர் களிமண் பாத்திரங்களை பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது.

    நகர்புறங்களில் பலரும் கேன்களில் விற்கப்படும் மினரல் வாட்டரை வாங்கி குடிக்கிறார்கள். ஆனால் இதிலும் சுகாதார கேடு இருப்பதாக பலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    • மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • அனைத்து ஊராட்சிகளிலும் அன்று கிராமசபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

    சென்னை:

    குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக தண்ணீர் தினம் (மார்ச் 22) மற்றும் உள்ளாட்சி தினம் (நவம்பர் 1) ஆகிய தினங்களில் தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கிராம சபை கூட்டம்

    கூட்டப்படுகிறது.

    இந்நிலையில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு வரும் 22-ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் அதிகளவில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், கிராம சபை கூட்டங்களை மதச்சார்பு வளாகத்தில் நடத்தக்கூடாது எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

    • சிவகங்கை மாவட்டத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது.
    • இந்த தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உலக தண்ணீர் தினமான வருகிற 22-ந்தேதி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசால் ஆணையிடப்பட்டு உள்ளது. அதன்படி கிராம சபை கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி, உலக தண்ணீர் தினமான 22-ந்தேதி அன்று காலை 11 மணிக்கு அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு கிராமசபை கூட்டம் நடத்தப்பட உள்ளது.

    அன்றைய தினம் நடை பெறும் கிராம சபை கூட்டத்தில் அந்த ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினை பற்றி விவாதிக்கவும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கவும், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவா தித்தல்.

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற விபரம், கிராம வளர்ச்சி திட்டம் 2023-2024 தூய்மை பாரத இயக்க தனிநபர் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஜல் ஜீவன் இயக்கம் ஆகிய கூட்டப்பொருட்கள் இந்த கிராம சபை கூட்டத்தில் விவாதிக் கப்பட உள்ளது. இந்த கிராமசபை கூட்டத்தில் 

    ×