உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள்

சிவகங்கை மாவட்டத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. இந்த தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள்
Published on

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உலக தண்ணீர் தினமான வருகிற 22-ந்தேதி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசால் ஆணையிடப்பட்டு உள்ளது. அதன்படி கிராம சபை கூட்டத்தினை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி, உலக தண்ணீர் தினமான 22-ந்தேதி அன்று காலை 11 மணிக்கு அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு கிராமசபை கூட்டம் நடத்தப்பட உள்ளது.

அன்றைய தினம் நடை பெறும் கிராம சபை கூட்டத்தில் அந்த ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினை பற்றி விவாதிக்கவும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கவும், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவா தித்தல்.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற விபரம், கிராம வளர்ச்சி திட்டம் 2023-2024 தூய்மை பாரத இயக்க தனிநபர் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஜல் ஜீவன் இயக்கம் ஆகிய கூட்டப்பொருட்கள் இந்த கிராம சபை கூட்டத்தில் விவாதிக் கப்பட உள்ளது. இந்த கிராமசபை கூட்டத்தில் 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com