search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker attack"

    சாத்தான்குளம் அருகே தொழிலாளி மீது தாக்குதல் நடத்தி மோட்டார்சைக்கிளை எரித்த மாநில இந்து முன்னணி பொதுச்செயலாளர் மகன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சாத்தான்குளம்:



    சாத்தான்குளம் அருகே உள்ள பூச்சிக்காட்டை சேர்ந்தவர் பாலையா (வயது 22). இவர் திசையன்விளையில் உள்ள ஒரு கடையில் தொழிலாளிளாக வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் தியாகராஜன். இந்நிலையில் சம்பவத்தன்று வேலை முடிந்து பாலையா தனது பைக்கில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது பெட்ரோல் இல்லாமல் பைக் நின்றது.

    இதையடுத்து பாலையா தனது நண்பர் தியாகராஜன் மூலம் பெட்ரோல் வாங்கி பைக்கில் ஊற்றி கொண்டிருந்தார். இதையடுத்து அங்கு வந்த பனைவிளையை சேர்ந்த அரசுராஜா மகன் பூபதி மற்றும் சுடலைமணி, பூச்சிக்காட்டை சேர்ந்த சுயம்புலிங்கம் ஆகியோர் எதற்காக இங்கு நிற்கின்றனர் என கூறி பாலையாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்தவர்கள் பாலையாவை அடித்து, உதைத்தனர்.

    இதையடுத்து தியாகராஜன் தனது பைக்கை அங்கேயே நிறுத்திவிட்டு பாலையாவுடன் அவரது பைக்கில் சென்றுவிட்டனர். இதைத்தொடர்ந்த அங்கு நின்ற தியாகராஜன் பைக்கை பூபதி உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தப்பிசென்றுவிட்டனர். இது குறித்து பாலையா தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதி உள்ளிட்ட 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

    பூபதி தந்தை அரசுராஜா மாநில இந்து முன்னணி பொதுச்செயலாளராக இருந்துவருகிறார்.
    மேலூர் அருகே நாடகம் போடுவதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி தாக்கப்பட்டார். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மதுரை:

    மேலூர் அருகே உள்ள புதுசுக்காம்பட்டியை அடுத்த சுவைத்தான்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள கலையரங்கத்தில் வள்ளி திருமணம் நாடகம் நடத்தப்பட்டது.

    டி.செட்டியார்பட்டியை சேர்ந்த எழுவன், முத்துவேல்பட்டியை சேர்ந்த சொக்கலிங்கம் ஆகியோரிடையே மோதல் ஏற்பட்டது. சொக்கலிங்கம், பார்த்திபன், குமரேசன், எட்டிமங்கலம் அரவிந்த் ஆகியோர் நாடகத்தை நிறுத்த வலியுறுத்தி தகராறு செய்தனர்.

    அப்போது எழுவனை உருட்டுக்கட்டை, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த சேகர் மேலூர் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சேசு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பார்த்திபன் மற்றும் குமரேசனை கைது செய்தார்.
    சங்கராபுரம் அருகே குடிபோதையில் தொழிலாளியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரிஷிவந்தியம்:

    விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கடுவனூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 40). தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (38). இவர்கள் இருவரும் நண்பர்கள்.

    சம்பவத்தன்று 2 பேரும் அதே பகுதியில் உள்ள ஒரு இடத்தில் வைத்து மது குடித்தனர். அப்போது குடிபோதையில் ஆறுமுகம், சங்கரின் மனைவி பற்றி அவதூறாக பேசினார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் அருகில் கிடந்த கல்லை எடுத்து சங்கரின் தலையில் தாக்கினார். காயம் அடைந்த சங்கரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக் குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.

    விக்கிரவாண்டி அருகே கடனாக கொடுத்த நகை-பணத்தை திருப்பி கேட்ட தொழிலாளியை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி அருகே வி.மாத்தூர் கிராமத்ததை சேர்ந்தவர் குமார் (வயது 35). இவரும், அவரது மனைவி சுமதியும் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலை செய்தனர். இந்நிலையில் செங்கல் சூளை உரிமையாளர் செங்கேணி என்கிற கோவிந்தன் (38) என்பவர் குமாரிடம் கடனாக நகை மற்றும் பணத்தை வாங்கியுள்ளார்.

    நீண்ட நாட்களாகியும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் குமார் தனது மனைவி சுமதியுடன் சென்று கடனாக கொடுத்த நகை மற்றும் பணத்தை கேட்டார். இதில் ஆத்திரமடைந்த செங்கேணி சாதி பெயரை குறிப்பிட்டு தகாதவார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இது குறித்து குமார் விக்கிரவாண்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து கோவிந்தனை கைது செய்தார்.

    ×