search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WIvsIND"

    • அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 40 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார்.
    • 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 3-1 என ஏற்கனவே கைப்பற்றி உள்ளது.

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 5வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் இன்று லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்குப் பதிலாக ஹர்திக் பாண்ட்யா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றனர். ஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்தினார்.

    துவக்க வீரர் இஷான் கிஷன் 11 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஸ்ரேயாஸ் அய்யர் - தீபக் ஹூடா அதிரடியாக ஆடி ரன் குவித்தனர்.

    அணியின் ஸ்கோர் 114 ஆக இருக்கும்போது இந்த ஜோடியை வால்ஷ் பிரித்தார். அவரது பந்துவீச்சில் தீபக் ஹூடா ஆட்டமிழந்தார். அவர் 25 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 38 ரன்கள் விளாசினார். இதேபோல் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஸ்ரேயாஸ் அய்யர் 64 ரன்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 8 பவுண்டரி, 2 சிக்சரும் அடங்கும்.

    சஞ்சு சாம்சன் 15 ரன்கள், தினேஷ் கார்த்திக் 12 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 28 ரன்கள், அக்சர் பட்டேல் 9 ரன்கள், அவேஷ் கான் 1 ரன் (நாட் அவுட்) எடுக்க, இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஓடியன் ஸ்மித் 3 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 3-1 என ஏற்கனவே கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 44 ரன்கள் குவித்தார்.
    • வெஸ்ட் இண்டீஸ் அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 4வது டி20 கிரிக்கெட் போட்டி லாடர்ஹில் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 16 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 33 ரன்கள் விளாசினார்.

    சூரியகுமார் யாதவ் 14 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 24 ரன்கள் சேர்த்தார். ரிஷப் பண்ட் 31 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரியுடன் 44 ரன்கள் குவித்தார். தீபக் (21), தினேஷ் கார்த்திக் (6), சஞ்சு சாம்சன் (30 நாட் அவுட்), அக்சர் பட்டேல் 20 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் சேர்த்தது.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஓபட் மெக்காய், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் விளையாடியது. அந்த அணியின் தொடக்க வீரர் பிரான்டன் கிங் 13 ரன்னுடன் வெளியேறினார். கெயில் மேயர்ஸ் 14 ரன்னுக்கு அவுட்டானார்.

    கேப்டன் பூரன் மற்றும் பாவல் ஆகியோர் தலா 24 ரன்கள் அடித்து அவுட்டாகினர். ஹெட்மயர் 19 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஹோல்டர் 13 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவர் முடிவில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 


    இதன் மூலம் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை கைப்பற்றியது. இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களும், அவேஷ்கான், அக்சர் படேல், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 

    • இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 44 ரன்கள் குவித்தார்.
    • வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஓபட் மெக்காய், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான 4வது டி20 கிரிக்கெட் போட்டி, இன்று லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

    அதிரடியாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 16 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 33 ரன்கள் விளாசினார். சூரியகுமார் யாதவ் 14 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 24 ரன்கள் சேர்த்தார். அதன்பின்னர் தீபக் ஹூடா-ரிஷப் பண்ட் ஜோடி அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர். ரிஷப் பண்ட் 31 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரியுடன் 44 ரன்கள் குவித்தார். தீபக் (21), தினேஷ் கார்த்திக் (6), சஞ்சு சாம்சன் (30 நாட் அவுட்), அக்சர் பட்டேல் 20 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் சேர்த்தது.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஓபட் மெக்காய், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்குகிறது.

    • இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது.
    • முதல் போட்டி நடைபெறும் மைதானம் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டுக்கும் சரிசமமாக ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    இங்கிலாந்து தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய கிரிக்கெட் அணி அடுத்து வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் ஒருநாள் போட்டிகள் (ஜூலை 22, 24 மற்றும் 27-ந்தேதி) டிரினிடாட்டின் போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடத்தப்படுகிறது.

    இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது. ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    இதனால் 2-ம் தர அணியே களம் இறங்குகிறது. கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக் காரராக ஷிகர் தவானுடன் இணைந்து இஷான் கிஷன் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரில் ஒருவர் களம் காணுவார். தவானின் ஆட்டத்திறன் மெச்சும்படி இல்லை. கடைசி 5 ஆட்டங்களில் 112 ரன்களே எடுத்துள்ளார். இந்த தொடரில் அசத்தினால் தான் அணியில் நீடிக்க முடியும். இல்லாவிட்டால் அவரது இடம் கேள்விக்குறி தான். மிடில் வரிசையில் ஸ்ரேயாஸ் அய்யர், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ் வலு சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ் நம்பிக்கை அளிக்கிறார்கள்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியை எடுத்துக் கொண்டால் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு வீரர்களும் திறமையானவர்கள் தான். ஆனால் ஒருங்கிணைந்து விளையாடுவதில் தடுமாறுகிறார்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் 2021-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து முதலில் பேட்டிங் செய்த 12 ஆட்டங்களில் 9-ல் ஆல்-அவுட் ஆகியுள்ளனர். அதாவது 50 ஓவர்கள் முழுமையாக தாக்குப்பிடிப்பதில்லை. எனவே 50 ஓவர்கள் முழுமையாக ஆடுவதில் கவனம் செலுத்தும்படி பயிற்சியாளர் பில் சிமோன்ஸ் அவர்களை அறிவுறுத்தியுள்ளார்.

    ஆல்-ரவுண்டர் ஹோல்டர் வருகை தந்திருப்பது அணியின் சரியான கலவைக்கு உதவிகரமாக இருக்கும். வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக ஆடிய 6 ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக தோற்று இருக்கிறது. இதில் சமீபத்தில் வங்காளதேசத்துக்கு எதிராக உள்ளூரில் 0-3 என்ற கணக்கில் தொடரை இழந்ததும் அடங்கும். கேப்டன் நிகோலஸ் பூரன், ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ், ரோமன் பவெல், ஹோல்டர் உள்ளிட்டோர் நிலைத்து நின்று விளையாடுவதை பொறுத்தே அவர்கள் எந்த அளவுக்கு சவாலாக இருப்பார்கள் என்பது தெரிய வரும்.

    போட்டி நடக்கும் போர்ட் ஆப் ஸ்பெயின் குயின்ஸ் பார்க் ஓவல் மைதானம் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டுக்கும் சரிசமமாக ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு இந்திய அணி 21 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 11-ல் வெற்றியும், 9-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டத்தில் மழையால் முடிவு கிடைக்கவில்லை. 2007-ம் ஆண்டு உலக கோப்பை தொடரின் போது பெர்முடாவுக்கு எதிராக இந்தியா 5 விக்கெட்டுக்கு 413 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஓர் அணியின் அதிகபட்சமாகும். 2006-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக கனடா 75 ரன்னில் சுருண்டது குறைந்த பட்சமாகும்.

    இந்திய வீரர் விராட் கோலி அதிகபட்சமாக 3 சதங்கள் அடித்துள்ளார். போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:- இந்தியா: ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் அல்லது இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா அல்லது அக்‌ஷர் பட்ேடல், ஷர்துல் தாக்குர், அவேஷ்கான் அல்லது பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ்.

    வெஸ்ட் இண்டீஸ்: ஷாய் ஹோப், பிரான்டன் கிங், ஷமார் புரூக்ஸ், கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன் (கேப்டன்), ரோமன் பவெல், ஜாசன் ஹோல்டர், அகில் ஹூசைன், அல்ஜாரி ஜோசப், குடாகேஷ் மோட்டி, ஜெய்டன் சீலஸ். உள்ளூரில் இது பகல் ஆட்டமாகும். ஆனால் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை பிரத்யேகமாக ஒளிபரப்பு செய்யும் உரிமத்தை பேன்கோட் நிறுவனம் பெற்றுள்ளது.

    அதாவது பேன்கோட் டிஜிட்டல் இணையவழியாக போட்டியை பார்க்கலாம். அந்த நிறுவனம் இந்தியாவில் டி.வி.யில் ஒளிபரப்பு உரிமத்தை தூர்தர்ஷனிடம் வழங்கியுள்ளது. எனவே இரவு 7 மணி முதல் டி.டி. ஸ்போர்ட்சிலும் இந்த ஆட்டத்தை காணலாம். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவே முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது.

    அந்த அணிக்கு எதிரான கடைசி 11 ஒரு நாள் போட்டி தொடர்களை இந்தியா தொடர்ச்சியாக கைப்பற்றி இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக 2006-ம் ஆண்டில் இந்தியாவை 4-1 என்ற கணக்கில் வென்று இருந்தது. ஒரு நாள் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 136 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 67-ல் இந்தியாவும், 63-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டை ஆனது. 4 ஆட்டத்தில் முடிவில்லை.

    ×