search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WIvENG"

    ஹோல்டருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக பிராத்வைட் நியமிக்கப்பட்டுள்ளார். #WIvENG
    வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸ் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை என்று, ஐசிசி அந்த அணியின் கேப்டன் ஹோல்டருக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதித்துள்ளது.

    இதனால் செயின்ட் லூசியாவில் வரும் சனிக்கிழமை தொடங்கும் 3-வது போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக கிரைக் பிராத்வைட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    ஆண்டிகுவா டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி மெதுவாக பந்து வீசியதற்காக ஹோல்டருக்கு ஐசிசி தடைவிதித்தது. இதற்கு முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #WIvENG
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் முதல் 2 போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. இந்த வெற்றிக்கு அந்த அணியின் கேப்டன் ஹோல்டர் முக்கிய பங்கு வகித்தார்.

    இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் மற்றும் கடைசி டெஸ்டில் விளையாட ஹோல்டருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆண்டிகுவாவில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மெதுவாக பந்து வீசியதால் அவரை சஸ்பெண்டு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஐசிசி-யின் இந்த நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் வார்னே, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் வாகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக வார்னே டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    இந்த டெஸ்ட் போட்டி 3 நாட்களிலேயே முடிந்துவிட்டது. ஹோல்டரை சஸ்பெண்டு செய்து இருப்பது முட்டாள்தனமான முடிவாகும். ஐசிசி-யின் இந்த முடிவை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய வேண்டும். ஐசிசி-யின் இந்த முடிவு ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    வாகன் கூறும்போது, ‘‘246 ஓவர்களில் டெஸ்ட் போட்டி முடிந்து விட்டது. அதாவது 2.6 நாளில் முடிந்து உள்ளது. மெதுவாக பந்து வீச்சு என்ற காரணத்துக்காக ஹோல்டருக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது துரதிருஷ்டவசமானது” என்றார்.

    இதேபோல் சமூக வலைத்தளங்களிலும் ஹோல்டர் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான படுதோல்வியால் ஏமாற்றமடைந்த ஜோ ரூட், 11 பேருக்காக நான் பேட்டிங் செய்ய இயலாது என்று பேட்ஸ்மேன்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். #JoeRoot
    வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து 381 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. ஆண்டிகுவா நார்த் சவுண்டில் நடைபெற்ற 2-வது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரை 0-2 என மோசமாக இழந்துள்ளது.

    தோல்வி குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் கூறுகையில் ‘‘டெஸ்ட் கிரிக்கெட்டில் இரு இன்னிங்சிலும் 200 ரன்களுக்குக் குறைவாக அடித்தால் அதிகமான போட்டிகளில் வெற்றிபெற இயலாது. ஆகவே, இந்த துயரத்தில் இருந்து வெளியே வரவேண்டும். இதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு வலிமையாக திரும்ப வேண்டும்.

    நாங்கள் போதுமான ரன்கள் குவிக்கவில்லை. அனுபவமான வீரர்கள் 50 ரன்களுக்கு மேல் அடிக்காத நிலையில், மற்ற வீரர்கள் ரன்கள் குவிப்பது மிகவும் கடினம்.



    இரண்டு டெஸ்டிலும் செய்ததைவிட சிறப்பாக செயல்பட முயற்சி செய்ய வேண்டும். அல்லது சில விஷயங்களில் சிறு மாற்றங்கள் செய்ய வேண்டும். இந்த வாய்ப்புகள் தனி வீரர்களிடம் இருந்து வரவேண்டும். நான் 11 வீரர்களுக்காக பேட்டிங் செய்ய இயலாது. அதேபோல் தலைமை பயிற்சியாளரான பெய்லிஸ் அல்லது பேட்டிங் பயிற்சியாளர் மார்க் ராம்பிரகாஷ் வந்து பேட்டிங் செய்ய இயலாது.

    பொறுப்பு தனி மனிதர்களிடம் இருந்து வர வேண்டும். ஆனால், அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குரூப்பாக ஒன்று சேர்ந்து அடுத்த டெஸ்டில் வலிமையாக திரும்பி பதிலடி கொடுக்க வேண்டும்’’ என்றார்.
    ஆண்டிகுவாவில் நாளைமறுநாள் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் தாமஸ் சேர்க்கப்பட்டுள்ளார். #WIvENG
    வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சாளர் கேமர் ரோச்சின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 77 ரன்னில் சுருண்டது. 2-வது இன்னிங்சில் ஜேசன் ஹோல்டர் இரட்டை சதம் விளாசினார்.

    2-வது போட்டி ஆண்டிகுவாவில் உள்ள நார்த் சவுண்டில் நாளைமறுநாள் (31-ந்தேதி) தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஏற்கனவே கேமர் ரோச், ஜேசன் ஹோல்டர், கேப்ரியல், ஜோசப் ஆகிய நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இந்நிலையில் ஒஷானே தாமஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    முதல் போட்டியின்போது ஜோசப் முதுகு வலியால் அவதிப்பட்டார். இதனால் பேக்-அப் வீரராக தாமஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    21 வயதான தாமஸ் இதுவரை டெஸ்ட் போட்டியில் விளையாடியது கிடையாத. ஆனால் நான்கு ஒருநாள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தனது வேகத்தால் அனைவரையும் ஈர்த்துள்ளார்.
    பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து 381 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. #WIvENG
    வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடைபெற்றுது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 289 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 77 ரன்னில் சுருண்டது.

    212 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஜேசன் ஹோல்டர் (202), டவ்ரிச் (116) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 415 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இரு இன்னிங்சிலும் சேர்த்து வெஸ்ட் இண்டீஸ் 627 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் இங்கிலாந்துக்கு 628 ரன்கள் வெற்றி இலக்காக நிர்யணித்தது.



    628 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்திருந்தது. ரோரி பேர்ன்ஸ் 39 ரன்னுடனும், ஜென்னிங்ஸ் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    நேற்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜென்னிங்ஸ் 14 ரன்னில் ஆட்டமிழந்தாலும், பேர்ன்ஸ் சிறப்பாக விளையாடி 84 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரோஸ்டர் சேஸ் பந்து வீச்சில் இங்கிலாந்து விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தன. சேஸ் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்த இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 246 ரன்னில் ஆல்அவுட் ஆனது.



    இதனால் இங்கிலாந்து 381 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இரட்டை சதம் அடித்த ஜேசன் ஹோல்டர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நார்த் சவுண்டில் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது.
    பிரிட்ஜ்டவுனில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 77 ரன்னில் சுருண்டது. #WIvENG
    வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட்டுக்கு 264 ரன் எடுத்திருந்தது. 2-ம் நாளான நேற்று வெஸ்ட் இண்டீஸ் 289 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹெட்மையர் 81 ரன் எடுத்தார்.


    ஜோசப்

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசின் அபார பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 30.2 ஓவரில் 77 ரன்னுக்குள் சுருண்டது. அதிகபட்சமாக ஜென்னிங்ஸ் 17 ரன் எடுத்தார். வேகப்பந்து வீச்சாளர் ரோச் 11 ஓவர் வீசி 17 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். ஹோல்டர், ஜோசப் தலா 2 விக்கெட்டும், கேப்ரியல் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.


    ஹோல்டர்

    212 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுக்கு 127 ரன் எடுத்து இருந்தது. அந்த அணி இதுவரை 339 ரன் முன்னிலை பெற்று உள்ளது. கைவசம் 4 விக்கெட் உள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் வலுவான நிலையில் உள்ளது. இன்று 3-ம் நாள் ஆட்டம் நடக்கிறது.
    இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் முதல் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் சேர்த்துள்ளது. #WIvENG
    வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் பிரிட்ஜ்டவுனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. பிராத்வைட், அறிமுக வீரர் கேம்ப்பெல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கேம்ப்பெல் 44 ரன்கள் எடுத்த நிலையிலும், பிராத்வைட் 40 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.


    ஷாய் ஹோப்

    ஷாய் ஹோப் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அதேபோல் ரோஸ்டன் சேஸ் (54), ஹெட்மையர் (56 அவுட் இல்லை) ஆகியோரும் அரைசதம் அடித்தனர். ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 82.4 ஓவர் வரை 240 ரன்கள் எடுத்த நிலையில் 4 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்திருந்தது. அதன்பின் 6 ஓவர்களுக்குள் விரைவாக நான்கு விக்கெட்டுக்களை இழந்தது.


    பென் ஸ்டோக்ஸ்

    இதனால் முதல்நாள் ஆட்ட முடிவில் 89.2 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் சேர்த்துள்ளது. ஹெட்மையர் 56 ரன்களுடன் களத்தில் உள்ளார்.


    ஹெட்மையர்

    இங்கிலாந்து அணி சார்பில் ஆண்டர்சன் 4 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பிராட் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். #WIvENG
    இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்கள் நடக்க இருக்கின்றன.

    முதல் டெஸ்ட் பிரிட்ஜ்டவுனில் 23-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து விளையாடியது. இந்த ஆட்டம் நேற்றுமுன்தினம் தொடங்கி நேற்று முடிவடைந்தது.

    முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 317 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 203 ரன்னில் சுருண்டது.

    இதில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். 56-வது ஓவரின் 5-வது பந்தில் ஜோசப்பையும், கடைசி பந்தில் கம்மின்சையும், 57-வது ஓவரின் முதல் பந்தில் சார்லஸையும் வீழ்த்தினார். 
    ×