search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிராத்வைட்"

    ஹோல்டருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக பிராத்வைட் நியமிக்கப்பட்டுள்ளார். #WIvENG
    வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸ் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை என்று, ஐசிசி அந்த அணியின் கேப்டன் ஹோல்டருக்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதித்துள்ளது.

    இதனால் செயின்ட் லூசியாவில் வரும் சனிக்கிழமை தொடங்கும் 3-வது போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக கிரைக் பிராத்வைட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    வங்காள தேச அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் பிராத்வைட் சதத்தால் முதல்நாளில் 4 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் சேர்த்துள்ளது. #WIvBAN
    வெஸ்ட் இண்டீஸ் - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஜமைக்கா கிங்ஸ்டன் சபினா பார்க்கில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேசம் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரர் பிராத்வைட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அவர் 279 பந்தில் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்மித் (2), பொவெல் (29), ஹோப்ஸ் (209 சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.



    ஹேட்மையர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். இவரும் சேஸும் முதல்நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் முதல்நாள் ஆட்ட முடிவில் 92 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்துள்ளது. ஹெட்மையர் 84 ரன்னுடனும், சேஸ் 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். வங்காள தேச சுழற்பந்து வீச்சாளர் மெஹிது ஹசன் மிராஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற இருக்கிறது.
    ×