என் மலர்
நீங்கள் தேடியது "வெஸ்ட் இண்டீஸ்-வங்காள தேசம்"
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் வங்காளதேசம் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #BANvWI #T20
வெஸ்ட் இண்டீஸ்- வங்காளதேசம் அணிகள் மோதிய 2-வது 20 ஓவர் போட்டி லவுடர்ஹில்லில் இன்று நடந்தது. டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.
வங்காளதேசம் 48 ரன்னுக்கு 3 விக்கெட்(7.4 ஓவர்) இழந்தது. அதன்பின் தமிம் இக்பால் - ஷகிப்அல் ஹசன் ஜோடி சிறப்பாக விளையாடியது. அந்த அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 171 ரன் எடுத்தது. தமிம் இக்பால் 74 ரன்னும், ஷகிப்-அல்ஹசன் 60 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட்இண்டீசுக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. அந்த அணியால் 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 159 ரன்களே எடுக்க முடிந்தது.
இதனால் வங்காளதேசம் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 20 ஓவர் போட்டி தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று இருந்தது.
3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை நடக்கிறது. #BANvWI #T20

வங்காள தேச அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் பிராத்வைட் சதத்தால் முதல்நாளில் 4 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் சேர்த்துள்ளது. #WIvBAN
வெஸ்ட் இண்டீஸ் - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் ஜமைக்கா கிங்ஸ்டன் சபினா பார்க்கில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காள தேசம் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களம் இறங்கியது. தொடக்க வீரர் பிராத்வைட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அவர் 279 பந்தில் 110 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்மித் (2), பொவெல் (29), ஹோப்ஸ் (209 சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஹேட்மையர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். இவரும் சேஸும் முதல்நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் முதல்நாள் ஆட்ட முடிவில் 92 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்துள்ளது. ஹெட்மையர் 84 ரன்னுடனும், சேஸ் 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். வங்காள தேச சுழற்பந்து வீச்சாளர் மெஹிது ஹசன் மிராஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற இருக்கிறது.