search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹோல்டர் மீதான தடை ஐசிசி-யின் முட்டாள்தனமான முடிவு: வார்னே, வாகன் பாய்ச்சல்
    X

    ஹோல்டர் மீதான தடை ஐசிசி-யின் முட்டாள்தனமான முடிவு: வார்னே, வாகன் பாய்ச்சல்

    ஆண்டிகுவா டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி மெதுவாக பந்து வீசியதற்காக ஹோல்டருக்கு ஐசிசி தடைவிதித்தது. இதற்கு முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #WIvENG
    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் முதல் 2 போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது. இந்த வெற்றிக்கு அந்த அணியின் கேப்டன் ஹோல்டர் முக்கிய பங்கு வகித்தார்.

    இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் மற்றும் கடைசி டெஸ்டில் விளையாட ஹோல்டருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆண்டிகுவாவில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மெதுவாக பந்து வீசியதால் அவரை சஸ்பெண்டு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடவடிக்கை எடுத்துள்ளது.

    ஐசிசி-யின் இந்த நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் வார்னே, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் வாகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக வார்னே டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

    இந்த டெஸ்ட் போட்டி 3 நாட்களிலேயே முடிந்துவிட்டது. ஹோல்டரை சஸ்பெண்டு செய்து இருப்பது முட்டாள்தனமான முடிவாகும். ஐசிசி-யின் இந்த முடிவை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய வேண்டும். ஐசிசி-யின் இந்த முடிவு ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



    வாகன் கூறும்போது, ‘‘246 ஓவர்களில் டெஸ்ட் போட்டி முடிந்து விட்டது. அதாவது 2.6 நாளில் முடிந்து உள்ளது. மெதுவாக பந்து வீச்சு என்ற காரணத்துக்காக ஹோல்டருக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது துரதிருஷ்டவசமானது” என்றார்.

    இதேபோல் சமூக வலைத்தளங்களிலும் ஹோல்டர் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×