search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணியில் 5-வது வேகப்பந்து வீச்சாளராக தாமஸ் சேர்ப்பு
    X

    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணியில் 5-வது வேகப்பந்து வீச்சாளராக தாமஸ் சேர்ப்பு

    ஆண்டிகுவாவில் நாளைமறுநாள் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் தாமஸ் சேர்க்கப்பட்டுள்ளார். #WIvENG
    வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சாளர் கேமர் ரோச்சின் சிறப்பான பந்து வீச்சால் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 77 ரன்னில் சுருண்டது. 2-வது இன்னிங்சில் ஜேசன் ஹோல்டர் இரட்டை சதம் விளாசினார்.

    2-வது போட்டி ஆண்டிகுவாவில் உள்ள நார்த் சவுண்டில் நாளைமறுநாள் (31-ந்தேதி) தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஏற்கனவே கேமர் ரோச், ஜேசன் ஹோல்டர், கேப்ரியல், ஜோசப் ஆகிய நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இந்நிலையில் ஒஷானே தாமஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    முதல் போட்டியின்போது ஜோசப் முதுகு வலியால் அவதிப்பட்டார். இதனால் பேக்-அப் வீரராக தாமஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    21 வயதான தாமஸ் இதுவரை டெஸ்ட் போட்டியில் விளையாடியது கிடையாத. ஆனால் நான்கு ஒருநாள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். தனது வேகத்தால் அனைவரையும் ஈர்த்துள்ளார்.
    Next Story
    ×