search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vinayagar Chathurthi"

    விநாயகர் சிலை நிபந்தனைகளை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தொடர்பாக ராமகோபாலன் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #VinayagarChathurthi

    சென்னை:

    இந்து முன்னணி அமைப்பின் அமைப்பாளரும், விநாயகர் சதுர்த்தி மத்தியக்குழு என்ற அமைப்பின் அறங்காவலருமான ராமகோபாலன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அதில், ‘ஒவ்வொரு ஆண்டும் சாதி, இன பேதமின்றி மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாடி வருகிறோம்.

    இந்நிலையில் விநாயகர் சிலைகளை அமைத்து வழிபடுவது உள்ளிட்டவைகள் குறித்து தமிழக பொதுத்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் புதிய நிபந்தனைகளை உருவாக்கியுள்ளனர். இதன்படி அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    சிலைகள் வைக்கப்படும் இடத்தின் உரிமையாளர்கள், உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறையினர், மாசு கட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்புத்துறையினர், மின்சார வாரியம், போலீஸ் அதிகாரிகளிடம் தடையில்லா சான்று பெறவேண்டும். முன்அனுமதி பெற வேண்டும்.

    5 நாட்களுக்கு மேல் சிலைகளை வைத்திருக்கக் கூடாது என்பது உள்பட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகள் எல்லாம் கடைசி நேரத்தில் விதிக்கப்பட்டுள்ளதால், இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

    எனவே, அரசாணைக்கு தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியுள்ளார். இதே கோரிக்கையுடன் வேறு சிலரும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இந்த வழக்குகள் எல்லாம் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கடைசி நேரத்தில் இப்படி புதிய விதிமுறைகளை அரசு பிறப்பித்தால், சிலை வைப்பவர்களால் என்ன செய்ய முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு அட்வகேட் ஜெனரல் விஜயநாராயண், அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக கூறினார்.

    இதையடுத்து நீதிபதி, “பழைய விதிகளின்கீழ் விநாயகர் சிலையை வைக்க அனுமதி கேட்கும் மனு தாரர்களின் கோரிக்கையை 48 மணி நேரத்தில் அரசு பரிசீலிக்க வேண்டும். பின்னர் எடுக்கப்பட்ட முடிவை வருகிற 4-ந்தேதி ஐகோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும். விசாரணையை 4-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்” என்று உத்தரவிட்டார்.

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைத்து வழிபாடு நடத்துவதற்கான விதிமுறைகள் விளக்குவதற்கு சிலை அமைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம், ஏற்காடு காவல் நிலையத்தில் நடைப்பெற்றது. #VinayagarChathurthi

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை வைத்து வழிபாடு நடத்துவதற்கான விதிமுறைகள் விளக்குவதற்கு சிலை அமைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம், ஏற்காடு காவல் நிலையத்தில் நடைப்பெற்றது.

    “விநாயகர் சிலை வைக்கும் இடங்களுக்கு அருகில் அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய தலைவர்களின் பதாகைகள் வைக்கக்கூடாது, சிலை களி மண்ணில் செய்திருக்க வேண்டும் மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்தக்கூடாது. பொது இடங்களில் சிலை வைத்தால் உள்ளாட்சி அமைப்பு அல்லது நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி பெற வேண்டும்.

    தீயணைப்பு சாதனங்கள் பொருத்த வேண்டும் முதலுதவி பொருட்கள் வைக்க வேண்டும். மின்சாரம் எங்கிருந்து எடுப்பது என மின்சார வாரியத்திடம் கடிதம் பெற வேண்டும். சிலை பாதுகாப்பு பணியில் தலா 2 பேர் 24 மணி நேரங்களும் ஈடுபட வேண்டும். கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயண்படுத்தக்கூடாது.”

    இவ்வாறு அவர் பேசினார்.

    இக்கூட்டத்தில் ஏற்காடு உதவி காவல் ஆய்வாளர் ஜெகத் ராஜ்மோகன் மற்றும் சிலை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    விநாயகர் சிலை தயாரிக்கப்படும் குடோனில் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளின் திடீர் ஆய்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.#VinayagarChathurthi

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன் பாளையம் , எஸ்.எஸ்.குளம் ஒன்றியம் பகுதிகளில் விசுவ இந்து பரி‌ஷத் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 80 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கம்.

    இதற்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி இடிகரை வடக்கு தோட்டம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் விநாயகர் சிலைகள் பிளாஸ்டா பாரிஸ் கொண்டு தயாரிக்கப்படுவதாக கோவை கவுண்டம்பாளையத்திலுள்ள மாசு கட்டுபாட்டு வாரியத்திற்கு வந்த தகவலின் அடிப்படையில் அந்த குடோனுக்கு சென்ற மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விநாயகர் சிலைகளை ஆய்வு செய்தனர்.

    தகவல் அறிந்து விஷ்வ இந்து பரி‌ஷத் அமைப்பினர் 50-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு குவிந்தனர். இதனால் பரபரப்பு உருவானது.

    மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனைக்காக சில விநாயகர் சிலைகளில் இருந்து சிறு சிறு பகுதிகளை எடுத்து தண்ணீரில் கரைத்து சோதனை செய்தனர். இதில் விநாயகர் சிலை பகுதிகள் தண்ணீரில் கரைந்து விட்டன.

    இதனையடுத்து விநாயகர் சிலைகள் பிளாஸ்டா பாரிஸ் கொண்டு தயாரிக்கப்படவில்லை என்றும் பேப்பர் போர்டு, பேப்பர் மற்றும் கார்டு போர்டு வைத்து தயாரிக்கப்பட்டது என தெரியவந்தது.

    மேலும் ஆய்வுக்காக விநாயகர் சிலைகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் சிறு பகுதிகளை எடுத்து சென்றனர்.

    மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளின் திடீர் ஆய்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×