search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaikasi Visakha"

    • கலசஸ்தாபனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடந்தது.
    • சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது.

    சென்னிமலை,

    'கந்த சஷ்டி கவச' அரங்கேற்ற தலமாகவும், ஆதி பழனி என போற்றப்படும். சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று மாலை முருகப்பெருமானின் அவதார தினமான வைகாசி விசாக விழா கோலாகலமாக நடந்தது.

    முருக பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத்தன்று முகப்பெருமானை வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். 67-வது வருட வைகாசி விசாக பெரு விழாவினை முன்னிட்டு நேற்று முன்தினம் ஊஞ்சலூர் அருகே காவிரியில் தீர்த்தம் எடுத்து சென்னிமலை வந்தடைந்தது.

    நேற்று காலை 10 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க காவிரி திருமஞ்சன தீர்த்தம் ஊர்வலமாக புறப்பட்டு மலை கோவிலை சென்று அடைந்தது.

    சென்னிமலை மலை மீது முருகன் கோவிலில் மதியம் 3 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கி கலசஸ்தாபனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடந்தது.

    தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு முருகப்பெருமானுக்கு பஞ்சாமிருதம், தேன், பழங்கள், பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து மாலை 6.30 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது.

    வைகாசி விசாக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரவணன் தலைமையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழு அன்பர்கள் செய்திருந்தனர்.

    வைகாசி விசாகத்தினை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் மலை கோவிலில் குவிய தொடங்கினர். அதிகாலை காங்கேயம் அருகே உள்ள வரதப்பம்பாளையம் கிராம மக்கள் காவடி தீர்த்த குடங்களுடன் வருகை தந்து முருகப்பெருமான வழிபட்டு சென்றனர். கந்தசாமி அன்பர்கள் குழுவினர் படி பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    • ஊஞ்சலூர் அருகே காவிரியில் தீர்த்தம் எடுத்து சென்னிமலை வந்தடைந்து,
    • சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடக்கிறது.

    சென்னிமலை,

    'கந்த சஷ்டி கவச' அரங்கேற்ற தலமாகவும், ஆதி பழனி என போற்ற ப்படும் சென்னி மலை முருகன் கோவிலில் முருக பெருமானின் அவதார தின மான வைகாசி விசாகத்தை முன்னிட்டு, 67 வது வருட வைகாசி விசாக பெரு விழா, வருகிற 2-ந் தேதி கோலாகலமாக கொண்டா டப்படுகிறது.

    அதைத் தொடர்ந்து 1-ந் தேதி மாலை 5 மணிக்கு ஊஞ்சலூர் அருகே காவிரியில் தீர்த்தம் எடுத்து சென்னிமலை வந்தடைந்து, 2-ந் தேதி காலை 7.30 மணிக்கு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவி லில் இருந்து மேளதாளம் முழங்க காவிரி திருமஞ்சன தீர்த்தம் ஊர்வலமாக புறப்பட்டு மலை கோவிலை சென்று அடைத்தல். மலை மீது முருகன் கோவிலில் 2-ந் தேதி 11 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் தொடங்கி கலச ஸ்தாபனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடக்கிறது.

    தொடர்ந்து மதியம் 2 மணிக்கு முருகப்பெரு–மானுக்கு பஞ்சாமிருதம், தேன், பழங்கள், பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து மாலை 5 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடக்கிறது.

    அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடக்கிறது. 2-ந் தேதி காலை 9 மணிமுதல் இரவு 9 மணி வரை மலை அடிவாரத்தில் உள்ள அருணகிரிநாதர் மடத்தில் அன்னதானம் வழங்கப்ப டுகிறது. இதற்கான ஏற்பாடு களை கோவில் செயல் அலுவலர் சரவணன் தலை மையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழுவினர் செய்து வருகின்றனர்.

    • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா தொடங்குகிறது.
    • விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டா டப்படும் விழாக்களில் பிரசித்தி பெற்ற விழாவாக வைகாசி விசாக திருவிழா உள்ளது.ஆண்டுதோறும் வைகாசி மாசம் 10 நாட்கள் நடைபெறும். இந்த திருவிழா வருகின்ற 24-ந் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    விழாவை முன்னிட்டு தினமும் இரவு 7 மணி அளவில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார்கள். அங்கு கோவில் ஓதுவார் பாடல் பாடப் பெற்று சிறப்பு தீப, தூப, ஆராதனைகள் நடைபெறும்.

    முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாகம் ஜூன் 2-ந் தேதி நடைபெறும். இதற்காக சண்முக சன்னதியில் உள்ள சண்முகர் வள்ளி, தெய்வா னையுடன் கோவில் விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவார்.

    அங்கு பக்தர்கள் கொண்டு வரும் பால் கொண்டு சுவாமி களுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெறும். அதிகாலை முதல் மாலை வரை தொடர்ந்து பாலா பிஷேகம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து ஜூன் 3-ந் தேதி மொட்டை அரசு திருவிழா நடைபெறும்.

    இதில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து புறப்பாடாகி மொட்டையரசு திடலில் எழுந்தருளுவார். அங்கிருந்து இரவு பூ பல்லக்கில் திருப்ப ரங்குன்றம் கோவிலை வந்து அடைவார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • வைகாசி விசாகத்தே ர்த்திருவிழா, ஜூன் 2 மற்றும் 3-ந் தேதிகளில் நடக்க உள்ளது.
    • தேர் அலங்கார துணிகளை மாற்றுவது என பல்வேறு முன்னேற்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் வைகாசி விசாகத்தே ர்த்திருவிழா, ஜூன் 2 மற்றும் 3-ந் தேதிகளில் நடக்க உள்ளது. அதற்காக தேர் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வருகிற 27-ந்தேதி கொடியேற்றத்துடன், தேர்த்திருவிழா துவங்குகிறது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மையப்ப ரும், ஸ்ரீவீரராகவப் பெருமாளும், தேர்வீதிகளில் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, திருக்கல்யாண உற்சவத்தை தொடர்ந்து ஜூன் 2-ந் தேதி ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமிகோவில் தேரோட்டமும், 3-ந் தேதி ஸ்ரீவீரராகவப்பெருமாள் தேரோட்டமும் நடக்க உள்ளது.

    தேர்த்திருவிழா ஏற்பாடுகள்குறித்த ஆலோசனைகூட்டம் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நடந்தது. திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ.,செல்வராஜ் தலைமை வகித்தார். மேயர் தினேஷ்குமார், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தனர்.செயல் அலுவலர் சரவணபவன், விழாஏற்பாடுகள் குறித்து விவரித்தார். பல்வேறு அமைப்பினரும், தேர்த்திருவிழா ஏற்பாடு குறித்துபேசினர்.கலை நிகழ்ச்சிஏற்பாடு, தேர்களுக்குபுதிதாக வடக்கயிறு வாங்குவது, தேர் அலங்கார துணிகளை மாற்றுவது என பல்வேறு முன்னேற்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

    ×