என் மலர்
நீங்கள் தேடியது "car festival"
- நெல்லையப்பர் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது.
- விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 11-ந்தேதி நடைபெறுகிறது.
நெல்லை:
பிரசித்தி பெற்ற நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் நடத்தப்படவில்லை.
இந்த ஆண்டு ஆனிப் பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை தொடங்குவதற்காக இன்று காலை விநாயகர் கொடியேற்றம் கோவிலில் நடைபெற்றது.
இதில் கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து திருவிழா அழைப்பிதழ் தயாரித்தல், கோவிலில் பந்தல் அமைத்தல், மின் அலங்காரம், உள், வெளி பிரகாரங்கள் சுத்தப்படுத்துதல், நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட 5 தேர்களை பாதுகாக்க வேண்டி கொட்டகைகளை பிரித்து எடுத்தல், தேர்களை சுத்தப்படுத்துதல், தேர் அலங்கார பணிகள் உள்ளிட்டவை நடைபெறும்.
தொடர்ந்து வருகிற 20-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 6 நாட்கள் முதல் மூவர் உற்சவமும், 26 முதல் ஜூலை 2-ந்தேதி வரை 7 நாட்கள் சந்திரசேகர் உற்சவமும் நடைபெறும்.
வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை சுவாமி சன்னதி தங்க கொடி மரத்தில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக நடைபெறுகிறது. பின்னர் சுவாமி நெல்லையப்பர் தேர் கால் நாட்டுதல் நடக்கிறது.
தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறும். விழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், இரவு சுவாமி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ரத ஊர்வலமும் நடைபெற உள்ளது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான ஜூலை 11-ந்தேதி நடைபெறுகிறது. இதில் சுவாமி, அம்பாள் தேர் உள்ளிட்ட 5 தேர்கள் ரத வீதிகளில் வலம் வரும்.
10-ம் திருவிழா அன்று சுவாமி, அம்பாள், அஸ்திரதேவர், அஸ்திர தேவியருக்கு பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது. இரவு சோமாஸ்காந்தர் பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது
- காலையில் உலகம்மன் திருத்தேரில் வலம் வரும் நிகழ்ச்சி தொடங்கியது.
தென்காசி:
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் தொடர் நிகழ்ச்சியாக இன்று காலையில் உலகம்மன் திருத்தேரில் வலம் வரும் நிகழ்ச்சி தொடங்கியது.
இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பாதுகாப்பு பணியில் தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
- கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- 18-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.
திருப்பூர்:
திருப்பூர் நகரின் மத்தியில் உள்ள ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி விசாக தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து பூத வாகனம், அன்ன வாகன காட்சி, கயிலாய வாகனம், கற்பக விருட்ச வாகனம், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு உள்பட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் கோவிலில் தினமும் நடைபெற்று வந்தது. மேலும் தினமும் மாலையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. நேற்று மாலை வீரராகவபெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) பரிவேட்டை,நாளை 15-ந் தேதி தெப்பத்திருவிழா, 16-ந் தேதி மகாதரிசனம், ஸ்ரீ நடராஜர்சிவகாமியம்மன் திருவீதி உலா, 17-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா, மலர் பல்லக்கு, 18-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.
- 2 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் தேர்த்திருவிழா
- தினமும் மாலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
திருப்பூர்:
திருப்பூர் நகரின் மத்தியில் உள்ள ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி விசாக தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து பூத வாகனம், அன்ன வாகன காட்சி, கயிலாய வாகனம், கற்பக விருட்ச வாகனம், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு உள்பட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் கோவிலில் தினமும் நடைபெற்று வந்தது. மேலும் தினமும் மாலையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம், வெள்ளை யானை வாகனம், அம்மன் பல்லக்கு சேவை, அனுமன் வாகனத்தில் காட்சியளித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு சாமி ரதத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., தி.மு.க. தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராசன், முன்னாள் எம்.எல்.ஏ. சு.குணசேகரன், 3-வது மண்டல தலைவர் கோவிந்தசாமி ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தனர். இதை தொடர்ந்து பக்தர்கள் சிவ சிவ கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பெருமாள் கோவில் அருகே தேர்நிலையில் இருந்து புறப்பட்ட தேர் அரிசிக்கடை வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தேர்நிலையை வந்தடைந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் சிவசேனா மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேர்த்திருவிழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
இன்று (திங்கட்கிழமை) மாலை வீரராகவபெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. நாளை (செவ்வாய்க்கிழமை) பரிவேட்டை, 15-ந் தேதி தெப்பத்திருவிழா, 16-ந் தேதி மகாதரிசனம் ஸ்ரீ நடராஜர்-சிவகாமியம்மன் திருவீதி உலா, 17-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா, மலர் பல்லக்கு, 18-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.
- கொடியேற்றத்தை முன்னிட்டு சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது.
- மாலை 5 மணிக்கு மதில்சுற்றி தேர்பவனி, திருப்பலி நடைபெறுகிறது.
மங்கலம்,
மங்கலத்தை அடுத்த பூமலூர் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவிற்கு கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான்ஜோசப் ஸ்தனிஸ் லாஷ் தலைமை தாங்கினார். பங்கு குருவுடன் இணைந்து குழந்தைசாமி, அருண், ஸ்டீபன் ஹென்றி டேனியல், பிலிப், க்ளாட்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொடியேற்றத்தை முன்னிட்டு சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது.
மேலும் வருகிற 11-ந்தேதி கூடடுப்பாடல் திருப்பலி, மின் அலங்கார தேர்பவனி நடைபெறவுள்ளது. பின்னர் வருகிற 12-ந் தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, காலை 8 மணிக்கு கூட்டுப்பாடல் திருப்பலி, காலை 10 மணிக்கு வேண்டுதல் தேர், காலை 11 மணிக்கு கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெறவுள்ளது. மாலை 5 மணிக்கு மதில்சுற்றி தேர்பவனி, திருப்பலி நடைபெறுகிறது.






