search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nellaiyappar Temple"

    • நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.

    கொடியேற்றம்

    இந்த ஆண்டு திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் 4-ம் நாளான இன்று சிகர நிகழ்ச்சியான திருநெல்வேலி என பெயர் வர காரணமான நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா நடைபெற்றது.

    முற்காலத்தில் வேதப்பட்டர் சுவாமிக்கு நெய் வேத்தியம் படைக்க யாசகம் பெற்ற நெல்லை காய வைத்துவிட்டு தாமிர பரணி ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது கடும் மழை பெய்தது.

    சுவாமிக்கு நெய் வேத்தியம் படைப்பதற்காக காயவைத்த நெல் மழையில் நனைந்து விடுமோ என்ற வேதனையில் வேதப்பட்டர் வந்து பார்த்தபோது நெல் மழையில் நனையாமல் வேலியிட்டு காத்தருளியதால் திருநெல்வேலி என பெயர் வர காரணமாக அமைந்தது.

    திரளான பக்தர்கள் தரிசனம்

    இந்த வரலாற்று நிகழ்வை நினைவு கூறும் வகையில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிழா நடத்தப்படுகிறது. இதையொட்டி இன்று காலை வேதப்பட்டர் மரச்சப்பரத்தில் கோவில் உட்பிரகாரத்தில் நெல்மணிகளை யாசகம் பெறும் நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து அதனை மகாநந்தி மண்டபத்தில் உலர வைக்கும் நிகழ்ச்சியும், அதன் பின்னர் கோவிலில் உள்ள கொற்றாம்மரைகுளத்தில் வேதப் பட்டர் குளிக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து நெல் மணிகளை உலர வைத்த இடத்தில் பதிகம் பாடி நிகழ்ச்சியும் நடந்தது.

    பின்னர் வேதப்பட்டருக்கு சுவாமி அம்மாள் காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தீர்த்தவாரி நிகழ்ச்சி

    இன்று மாலை ரிஷப வாகனத்தில் சுவாமி அம்மாள் உட்பிரகாரத்தில் காட்சி கொடுக்கின்றார். வருகிற 4-ந்தேதி தைப்பூசம் அன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. அப்பொழுது சுவாமி-அம்மாள் கோவிலில் இருந்து புறப்பட்டு சந்திப்பு கைலாசப்புரத்தில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். அப்போது தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.

    பிற்பகல் 12 மணிக்கு கோவிலில் சவுந்திர மண்டபத்தில் நடராஜர் திருநடன காட்சி நடைபெறும். மறுநாள் வெளித்தேப்பத்தில் தெப்ப உற்சவம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    • ஐப்பசி திருக்கல்யாண விழா 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 15 நாட்கள் நடைபெறுகிறது.
    • கோவில் யானை காந்திமதி ஆசீர்வதிக்க மகா தீபாராதனை நடைபெற்றது.

    நெல்லை:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுக்கு 12 மாதமும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

    ஐப்பசி திருக்கல்யாணம்

    இதில் ஆணி பெருந்திருவிழா, ஆடிப்பூர உற்சவம், ஐப்பசி திருக்கல்யாணம் உள்ளிட்ட திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    இந்தாண்டு ஐப்பசி திருக்கல்யாண விழா 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 15 நாட்கள் நடைபெறுகிறது.

    வருகிற 22-ந் தேதி கம்பாநதியில் காந்திமதி அம்பாளுக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவமும், நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது.

    முன்னேற்பாடு பணிகள்

    இந்நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பூர்வாங்க பணிகளை மேற்கொள்ளும் விதமாக கால்கோல் நடும்விழா இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சியினை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், அதனைத் தொடர்ந்து அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் திருக்காலுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து திருக்காலுடன் கோவிலை வலம் வந்து காந்திமதி அம்மன் கோவில் முன்பு அமைந்துள்ள மண்டபத்தில் கால்நாட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் கோவில் யானை காந்திமதி ஆசீர்வதிக்க மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    2 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் இந்த திருவிழாக்களில் கலந்து கொள்ளும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • தென்மாவட்டங்களில் சிறப்புபெற்ற சிவாலயங்களில் நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவிலும் ஒன்று.
    • இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் சிறப்புபெற்ற சிவாலயங்களில் நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.

    அதில் ஆடிப்பூர திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி காலை 6 மணிக்கு நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் சன்னதி முன்பு ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் இந்த ஆண்டு விழாவில் ஏராளமானவர்கள் பங்கேற்பார்கள்.

    4-ம் திருவிழாவான 25-ந் தேதி (திங்கட்கிழமை) பிற்பகல் 12 மணிக்கு காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம், இரவு 8 மணிக்கு காந்திமதி அம்மன் திருவீதியுலா நடக்கிறது. வருகிற 31-ந் தேதி( ஞாயிற்றுக்கிழமை) இரவு 6.30 மணிக்கு கோவில் ஊஞ்சள் மண்டபத்தில் ஆடிப்பூரம் முளைக்கட்டு திருவிழா நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • நெல்லையப்பர் தேரோட்டத்திற்காக கடந்த வாரத்தில் 4 ரதவீதிகளிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.
    • இன்று காலை 9 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் தேரை பக்தர்கள் இழுக்க தொடங்கினர்.

    நெல்லை:

    நெல்லையப்பர் தேரோட்டத்திற்காக கடந்த வாரத்தில் 4 ரதவீதிகளிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.

    ஆனாலும் ஒருசில இடங்களில் பாரபட்சத்துடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் தேரை பக்தர்கள் இழுக்க தொடங்கினர். தேர் புறப்பட்ட 20 அடி தூரம் வரை மொத்தத்தில் 2 தடி தான் போடப்பட்டது. ஆனால் அதற்குள் தேர் தடி உடைந்தது. இதனால் தேரோட்டம் சுமார் 2 மணி நேரம் தாமதமானது. கீழரதவீதியில் உள்ள அம்மன் சன்னதி அருகே தேர் நின்றது. உடனே அவசரம் அவசரமாக தேர் தடி தயார் செய்யும் பணிகளில் கோவில் நிர்வாகிகள் ஈடுபட்டனர். அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக ஏராளமான பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.

    இதே போலநெல்லையப்பர் தேரோட்டத்திற்காக கடந்த வாரத்தில் 4 ரதவீதிகளிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர். உடனே கம்பத்தை தீயணைப்பு துறையினர் நவீன எந்திரம் மூலமாக அறுத்து எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் தேரோட்டம் தாமதமானது.

    • பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றான ஆனி பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • திருவிழாவின் 8-ம் நாளான இன்று தங்க சப்பரத்தில் கங்காளநாதா் தங்க திருஓட்டுடன் திருவீதி புறப்பாடு நிகழ்வு நடக்கிறது.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பா் காந்திமதி அம்பாள் கோவிலில் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றான ஆனி பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளும், பக்தி இன்னிசை, சமய சொற்பொழிவு, சிறுவர்களின் பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    இதனையொட்டி விழாவின் 8-ம் நாளான இன்று தங்க சப்பரத்தில் கங்காளநாதா் தங்க திருஓட்டுடன் திருவீதி புறப்பாடு நிகழ்வு நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இ்ன்று காலையில் நடராஜா் முதலில் வெள்ளை சாத்தி அலங்காரத்திலும், தொடா்ந்து பச்சை சாத்தி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    தொடர்ந்து மாலையில் அன்னபூரணிக்கு காட்சி கொடுத்த சிவபெருமான், கங்காளநாதராக திாிசடையும், தங்க திருஓடும் கையில் ஏந்தி தங்க சப்பரத்தில் எழுந்தருளுகிறாா்.

    அப்போது பக்தா்கள் தங்கள் காணிக்கைகளை கங்காளநாதா் திருஓட்டில் செலுத்துவார்கள். அதன்பின்னர் பஞ்ச வாத்தியங்கள் முழங்க குடைவரை வாசல் தீபாராதனைக்கு பின் மங்கள வாத்தியங்கள் முழங்க திருவீதி உலா நடைபெறும்.

    இரவில் சுவாமி தங்க கைலாச பா்வத வாகனத்திலும், அம்மன் தங்கக் கிளி வாகனத்திலும் எழுந்தருளி தோ் கடாட்சம் கண்டருளி வீதி உலா வரும் நிகழ்வு நடக்கிறது.விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை(திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

    இதனையொட்டி தேைர தயார்படுத்தும் பணி முடிவடைந்து விட்டது. தேரோட்டம் நாளை நடைபெறுவதையொட்டி கோவிலை சுற்றி உள்ள 4 ரதவீதிகளிலும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வழிகாட்டு நெறிமுறைகளை கடை பிடிப்பதற்காக இன்று தேர் மற்றும் அதன் வடங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது. தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிா்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் -காந்திமதி அம்மன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அவற்றில் ஆனித்தேரோட்டம் சிறப்பு பெற்றது.
    • நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் தினமும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    நெல்லை:

    பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் -காந்திமதி அம்மன் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அவற்றில் ஆனித்தேரோட்டம் சிறப்பு பெற்றது.

    516-வது ஆண்டு ஆனித்தேரோட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நாளை காலை 7.40 மணிக்கு சுவாமி -அம்மாள் பூக்கோயில் சப்பரத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. ஆனித்திருவிழாவை–யொட்டி தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடக்கிறது.

    நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் தினமும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை )நடைபெறுகிறது.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தாண்டு நடக்கும் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்கிறார்கள்.

    இந்நிலையில் நாளை கொடியேற்றம் நடைபெறுவதையொட்டி கொடிமரம் மற்றும் கோவில் வளாகங்கள் சுத்தப்படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பந்தல் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

    தொடர்ந்து கொடியேற்றம் மற்றும் தேரோட்டத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தாண்டு தேரோட்டம் சிறப்பாக நடைபெற உள்ளது.
    • தேரோட்டத்தையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு 11-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    நெல்லை:

    தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று நெல்லையப்பர் கோவில்.

    ஆனித்தேரோட்டம்

    நெல்லையப்பர் -காந்திமதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தேர்திருவிழா விமரிசையாக நடைபெறும். கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தாண்டு தேரோட்டம் சிறப்பாக நடைபெற உள்ளது.

    இந்த ஆண்டு ஆனித்தோரட்டம் வருகிற 3-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

    விடுமுறை

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி நெல்லை மாவட்டத்திற்கு 11-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மாநகராட்சி சார்பில் நான்கு ரத வீதிகளில் தற்காலிக சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    தேர்ச்சக்கரம்

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இருந்து இரும்பு சக்கரங்கள் வரவழைக்கப்பட்டு தேருக்கு பொருத்தப்பட்டு உள்ளது.

    தீயணைப்புத்துறை சார்பில் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் உள்ளிட்ட 5 தேர்களையும் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது.

    திருவிழா நாளில் தினமும் சப்பரபவனி ரதவீதிகளில் நடைபெறும். இதனால் வாகனங்கள் ரதவீதிகள் வழியாக செல்லாத வண்ணம் தற்போதே வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    போக்குவரத்து மாற்றம்

    அதன்படி நெல்லையப்பர் கோவிலின் முன் உள்ள அனுப்பு மண்டபம் முன்பு தடுப்பு கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.

    இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் சொக்கப்பனை முக்கு வழியாக மவுண்ட்ரோடு சென்று காட்சி மண்டபம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கோரிக்கை

    பாரதியார் பள்ளி அமைந்துள்ள சாலையில் பாதாளசாக்கடை திட்டத்திற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்று வருகிறார்கள்.

    எனவே அப்பாதையை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வடக்கு ரதவீதியில் சாலையில் கழிவுநீர் சென்றுவருவதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.
    • உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 23-ந் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளி–யிட்–டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

    நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவில் தேரோட்டம் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்–ளது. இதையொட்டி அன்றைய தினம் நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    அரசு பொதுத்தேர்வுகள் ஏதும் இருந்தால், பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.

    இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. மேலும், மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு கோப்புகள் தொடர்பாக அவசர பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 23-ந் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நெல்லையப்பர் கோவில் 4 ரதவீதிகளிலும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது.
    • கோவிலுக்கு செலுத்த வேண்டிய வாடகை கட்டணம் ரூ.5 லட்சத்து 15 ஆயிரத்து 748 -ஐ உடனடியாக கட்டுமாறு அறநிலைய த்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வந்தனர்.

    நெல்லை:

    நெல்லையப்பர் கோவில் 4 ரதவீதிகளிலும் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது.

    சுவாமி சன்னதி தெருவில் சுவாமி அனுப்பு மண்டபத்தில் முருகன், பொன்னையா என்பவர்கள் கடை நடத்தி வருகிறார்கள். இவர்கள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் வாடகை செலுத்தாமல் வந்துள்ளனர்.

    இதுவரை கோவிலுக்கு செலுத்த வேண்டிய வாடகை கட்டணம் ரூ.5 லட்சத்து 15 ஆயிரத்து 748 ஆகும். இதனை உடனடியாக கோவில் நிர்வாகத்திடம் கட்டுமாறு அறநிலையத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இதுதொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் வாடகை செலுத்தாத 2 கடைகளையும் சீல் வைக்குமாறு உத்தரவிட ப்பட்டுள்ளது. அதன்பேரில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதா முன்னிலையில் இன்று சம்பந்தப்பட்ட 2 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    பின்னர் 2 கடைகளின் சாவிகளும் நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணியிடம் வழங்கப்பட்டது.

    அப்போது கண்காணிப்பாளர் சுப்பு லெட்சுமி, மேற்கு பிரிவு இன்ஸ்பெக்டர் தனலெட்சுமி என்ற வள்ளி, வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து, கிராம நிர்வாக அதிகாரி ராஜா, அங்கப்பன், தலையாரி முண்டசாமி, இன்ஸ்பெக்டர் இளவரசர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • நெல்லையப்பர் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது.
    • விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 11-ந்தேதி நடைபெறுகிறது.

    நெல்லை:

    பிரசித்தி பெற்ற நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் நடத்தப்படவில்லை.

    இந்த ஆண்டு ஆனிப் பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகளை தொடங்குவதற்காக இன்று காலை விநாயகர் கொடியேற்றம் கோவிலில் நடைபெற்றது.

    இதில் கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதைத்தொடர்ந்து திருவிழா அழைப்பிதழ் தயாரித்தல், கோவிலில் பந்தல் அமைத்தல், மின் அலங்காரம், உள், வெளி பிரகாரங்கள் சுத்தப்படுத்துதல், நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட 5 தேர்களை பாதுகாக்க வேண்டி கொட்டகைகளை பிரித்து எடுத்தல், தேர்களை சுத்தப்படுத்துதல், தேர் அலங்கார பணிகள் உள்ளிட்டவை நடைபெறும்.

    தொடர்ந்து வருகிற 20-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 6 நாட்கள் முதல் மூவர் உற்சவமும், 26 முதல் ஜூலை 2-ந்தேதி வரை 7 நாட்கள் சந்திரசேகர் உற்சவமும் நடைபெறும்.

    வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை சுவாமி சன்னதி தங்க கொடி மரத்தில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றம் கோலாகலமாக நடைபெறுகிறது. பின்னர் சுவாமி நெல்லையப்பர் தேர் கால் நாட்டுதல் நடக்கிறது.

    தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறும். விழா நாட்களில் தினமும் காலை, மாலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், இரவு சுவாமி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ரத ஊர்வலமும் நடைபெற உள்ளது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான ஜூலை 11-ந்தேதி நடைபெறுகிறது. இதில் சுவாமி, அம்பாள் தேர் உள்ளிட்ட 5 தேர்கள் ரத வீதிகளில் வலம் வரும்.

    10-ம் திருவிழா அன்று சுவாமி, அம்பாள், அஸ்திரதேவர், அஸ்திர தேவியருக்கு பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரி நடக்கிறது. இரவு சோமாஸ்காந்தர் பூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்திருவிழா கால்நாட்டுதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
    நெல்லை:


    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றும், ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட தேர் உடைய கோவிலுமான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா  விற்காக  கால் நாட்டுதல் நிகழ்ச்சி   இன்று நடந்தது. 

    விழாவை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
     
    அதனைத் தொடர்ந்து திருக்காலுக்கு பூஜைகள் செய்யப்பட்டு கோவில் யானை காந்திமதி முன்செல்ல பந்தல் கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமி சன்னதி தெருவில் உள்ள கோவில் வாசல் மண்டபத்திற்கு அருகே நாட்டப்பட்டது.

    இதனை தொடர்ந்து பால், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு பூஜைகளும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

    ஆனிப் பெருந்திருவிழா வின் தொடக்க நிகழ்ச்சியான புட்டபர்த்தி அம்மன் கோவில் திருவிழா வருகிற 5-ம் தேதியும், விநாயகர் திருவிழா 15-ம் தேதியும் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

    ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி வருகிற ஜூலை மாதம் 3-ம் தேதி கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. 

    ஆனிப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம்  ஜூலை 11-ம் தேதி நடைபெற இருக்கிறது.
    ×