search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Devotees complain"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 750 கிராம் எடையுள்ள இந்த லட்டு குடியரசு தலைவர் பிரதமர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது.
    • சரியான எடை அளவில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வாங்கிச் செல்லும் லட்டு பிரசாதத்திற்கு வயது 308 ஆகிறது.தற்போது லட்டு பிரசாதம் மூலம் ஆண்டுக்கு தேவஸ்தானத்திற்கு ரூ.300 கோடிக்கு மேல் வருவாய் வருகிறது.

    தற்போதைய நிலவரப்படி திருப்பதி தேவஸ்தானம் தினமும் சுமார் 3.5 லட்சம் லட்டுக்களை தயாரித்து பக்தர்களுக்கு வழங்கி வருகிறது.

    மேலும் லட்டுக்கு புவிசார் குறியீடு மற்றும் வர்த்தக முத்திரையும் தேவஸ்தான அதிகாரிகள் பெற்றுள்ளனர். அத்தகைய சிறப்புமிக்க ஏழுமலையான் லட்டு பிரசாதங்கள் 1715-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ந் தேதி முதல் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    ஆரம்பத்தில் பூந்தியாக வழங்க தொடங்கி பின்னர் லட்டு பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. அதன்படி நேற்றுடன் திருப்பதி லட்டு பிரசாதத்திற்கு 308 வயது ஆகிறது.

    கடலை மாவு, சர்க்கரை, முந்திரி, நெய், ஏலக்காய், எண்ணெய், கற்கண்டு, பாதாம் பருப்பு, உலர்ந்த திராட்சை உள்ளிட்ட மூலப்பொருட்கள் கொண்டு லட்டு தயாரிக்கப்படுகிறது.

    திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டை பக்தர்களுக்கான மகா பிரசாதம் என்று அழைக்கப்படுகிறது. ஏழுமலையான் கோவிலில் 3 வகையான லட்டுக்கள் தயாரிக்கப்படுகின்றன.

    அஸ்தானம் என்ற லட்டு விசேஷ நாட்களில் தயாரிக்கப்படுகிறது. 750 கிராம் எடையுள்ள இந்த லட்டு குடியரசு தலைவர் பிரதமர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    கல்யாண உற்சவ லட்டு கல்யாண உற்சவம் ஆர்ஜித சேவைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த லட்டுக்கு பக்தர்களிடையே கடும் கிராக்கி உள்ளது. இதனால் கல்யாண உற்சவ லட்டை பெற பக்தர்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்கின்றனர்.

    இதேபோல் புரோக்தம் என்ற லட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இதுதான் தினமும் அதிகமாக வழங்குகின்றனர். இதன் எடை 175 கிராம் இருக்க வேண்டும். ஆனால் பக்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் லட்டு எடை குறைவாக உள்ளது . கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.5, ரூ.10, ரூ.25 விலைகளில் 3 வகையான லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. தற்போது ரூ.50-க்கு லட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் அதன் எடை குறைந்து கொண்டே வருகிறது என பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    சரியான எடை அளவில் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    • நெல்லையப்பர் தேரோட்டத்திற்காக கடந்த வாரத்தில் 4 ரதவீதிகளிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.
    • இன்று காலை 9 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் தேரை பக்தர்கள் இழுக்க தொடங்கினர்.

    நெல்லை:

    நெல்லையப்பர் தேரோட்டத்திற்காக கடந்த வாரத்தில் 4 ரதவீதிகளிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.

    ஆனாலும் ஒருசில இடங்களில் பாரபட்சத்துடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் தேரை பக்தர்கள் இழுக்க தொடங்கினர். தேர் புறப்பட்ட 20 அடி தூரம் வரை மொத்தத்தில் 2 தடி தான் போடப்பட்டது. ஆனால் அதற்குள் தேர் தடி உடைந்தது. இதனால் தேரோட்டம் சுமார் 2 மணி நேரம் தாமதமானது. கீழரதவீதியில் உள்ள அம்மன் சன்னதி அருகே தேர் நின்றது. உடனே அவசரம் அவசரமாக தேர் தடி தயார் செய்யும் பணிகளில் கோவில் நிர்வாகிகள் ஈடுபட்டனர். அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக ஏராளமான பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.

    இதே போலநெல்லையப்பர் தேரோட்டத்திற்காக கடந்த வாரத்தில் 4 ரதவீதிகளிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர். உடனே கம்பத்தை தீயணைப்பு துறையினர் நவீன எந்திரம் மூலமாக அறுத்து எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் தேரோட்டம் தாமதமானது.

    ×