search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sri veeraragava perumal temple"

    • புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையையொட்டி இன்று காலை 5 மணிக்கு கோசேவை தரிசனம் நடைபெற்றது.
    • உலகத்தில் உள்ள அனைவருக்கும் மன நிம்மதி மற்றும் உடல் ஆரோக்கியம் பெறுவதற்காக முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ வீரராகவர் பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையையொட்டி இன்று காலை 5 மணிக்கு கோ சேவை தரிசனம் நடைபெற்றது. அதையடுத்து கால சாந்தி பூஜை, உதய கருட சேவா மற்றும் அன்னதான சேவா ஆகிய பூஜைகள் நடைபெற்றது.

    உலகத்தில் உள்ள அனைவருக்கும் மன நிம்மதி மற்றும் உடல் ஆரோக்கியம் பெறுவதற்காக இன்று ஸ்ரீ வீரராகவ பெருமாள் முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளித்தார். மன ஆரோக்கியத்திற்கு சந்திர பகவானை வழிபடுவது ஐதீகம். அதன்படி சந்திர பகவானுக்கு உகந்ததான முத்து மற்றும் வைரத்தைக் கொண்டு பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கத்தில் உள்ள பெருமாளுக்கு மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதேசி அன்று இந்த அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். திருப்பூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை முத்தங்கி அலங்காரத்தில் காட்சியளிப்பர். உற்சவமூர்த்தி கருட சேவை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். புரட்டாசி சனிக்கிழமை என்பதால் இன்று பக்தர்கள் திரளாக கோயிலுக்கு வந்தனர். மேலும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    • 2 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் தேர்த்திருவிழா
    • தினமும் மாலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    திருப்பூர்:

    திருப்பூர் நகரின் மத்தியில் உள்ள ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி விசாக தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையடுத்து பூத வாகனம், அன்ன வாகன காட்சி, கயிலாய வாகனம், கற்பக விருட்ச வாகனம், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு உள்பட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் கோவிலில் தினமும் நடைபெற்று வந்தது. மேலும் தினமும் மாலையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம், வெள்ளை யானை வாகனம், அம்மன் பல்லக்கு சேவை, அனுமன் வாகனத்தில் காட்சியளித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு சாமி ரதத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று மாலை 3.30 மணிக்கு தொடங்கியது. திருப்பூர் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., தி.மு.க. தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராசன், முன்னாள் எம்.எல்.ஏ. சு.குணசேகரன், 3-வது மண்டல தலைவர் கோவிந்தசாமி ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கிவைத்தனர். இதை தொடர்ந்து பக்தர்கள் சிவ சிவ கோஷம் முழங்க பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    பெருமாள் கோவில் அருகே தேர்நிலையில் இருந்து புறப்பட்ட தேர் அரிசிக்கடை வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தேர்நிலையை வந்தடைந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் சிவசேனா மாநில இளைஞரணி தலைவர் அட்சயா திருமுருக தினேஷ் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேர்த்திருவிழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

    இன்று (திங்கட்கிழமை) மாலை வீரராகவபெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. நாளை (செவ்வாய்க்கிழமை) பரிவேட்டை, 15-ந் தேதி தெப்பத்திருவிழா, 16-ந் தேதி மகாதரிசனம் ஸ்ரீ நடராஜர்-சிவகாமியம்மன் திருவீதி உலா, 17-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா, மலர் பல்லக்கு, 18-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

    ×