search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் வீரராகவபெருமாள் கோவில் தேரோட்டம் -  திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
    X

    திருப்பூர் வீரராகவ பெருமரள் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்த போது எடுத்த படம்.

    திருப்பூர் வீரராகவபெருமாள் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

    • கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 18-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் நகரின் மத்தியில் உள்ள ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி விசாக தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையடுத்து பூத வாகனம், அன்ன வாகன காட்சி, கயிலாய வாகனம், கற்பக விருட்ச வாகனம், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு உள்பட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் கோவிலில் தினமும் நடைபெற்று வந்தது. மேலும் தினமும் மாலையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. நேற்று மாலை வீரராகவபெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) பரிவேட்டை,நாளை 15-ந் தேதி தெப்பத்திருவிழா, 16-ந் தேதி மகாதரிசனம், ஸ்ரீ நடராஜர்சிவகாமியம்மன் திருவீதி உலா, 17-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா, மலர் பல்லக்கு, 18-ந் தேதி விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

    Next Story
    ×