search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Union Office"

    • திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடந்தது.
    • இந்த கூட்டத்தில் மாதாந்திர வரவு-செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர சாதாரண கூட்டம் ஒன்றிய தலைவர் சண்முக வடிவேல் தலைமையில் நடந்தது. முன்னதாக மாதாந்திர வரவு-செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலர்கள் வைத்த குடிநீர், சாலை போன்ற உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் குறித்த பல்வேறு கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

    கவுன்சிலர்கள் மத்தியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவதற்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், கிராம கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் தென்னரசு மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரபாண்டியபுரம் பகுதியில் இடியும் நிலையில் உள்ள சுகாதார வளாகத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி பொதுமக்கள் யூனியன் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பகுதிக்குட்பட்ட சங்கரபாண்டியபுரம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதி பொதுமக்களுக்காக 4 சுகாதார வளாகங்கள் கட்டி தரப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தன. இந்நிலையில் நாளடைவில் இக்கட்டிடங்கள் ஒவ்வொன்றாக சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது.

    இந்நிலையில் இக்கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கழிப்பறைகள் கட்டி தர வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மாத்தூரான் கூறியதாவது:-

    கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி பெண்கள் பொதுமக்களில் பெரும்பாலானோர் பொது கழிப்பறைகளைத்தான் பயன்படுத்தி வந்தனர்.தற்போது 4 கட்டிடங்கள் இருந்தாலும் அது பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இவை இடிந்து விழும் நிலையில் உள்ளன. கடந்த ஆண்டு ஊர் பொதுமக்கள் சார்பில் ரூ.1 லட்சத்தை புதிய கழிப்பறை கட்டும் திட்டத்தில் வழங்கி உள்ளோம்.

    இதுவரை புதிய கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கை ஏதும் இல்லை, திறந்த வெளியை பொதுமக்கள் பயன்படுத்தும் நிலை உருவாகி உள்ளது. எனவே ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.விரைவில் புதிய கட்டிடம் கட்டித் தர நடவடிக்கை எடுக்காத நிலையில் அடுத்த கட்டமாக உண்ணாவிரத போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்தார்.

    பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஓரிரு வாரங்களுக்குள் கழிப்பறை கட்டிடங்களில் ஆழ்குழாய் அமைத்தும், மறு சீரமைப்பு செய்து தர நடவடிக்கை எடுப்பதாகவும், புதிய கழிப்பறை கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
    குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்று கூறி கிராம மக்கள் களக்காடு யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் மாவடி நெரிஞ்சிவிளையில் கடும் குடிநீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் மூலம் கடந்த 2014-ம் ஆண்டு கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி இன்னமும் திறக்கப்படவில்லை. செங்களாகுறிச்சி பஞ்சாயத்து சார்பில் வடக்குத்தெரு, சர்ச் தெரு ஆகிய 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு நீர்தேக்க தொட்டிகளும் பழுதடைந்து கிடப்பதே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்று கூறி கிராம மக்கள் களக்காடு யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    ஆணையாளர் இல்லாததால் அவரது அறை முன்பு போராட்டம் நடத்தினர். இதனைதொடர்ந்து . களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் லிவிபால்ராஜ் மற்றும் யூனியன் அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு நாட்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். #tamilnews
    ×