திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக மாதாந்திர கூட்டம்

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாதாந்திர வரவு-செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டது.
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக  மாதாந்திர கூட்டம்
Published on

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர சாதாரண கூட்டம் ஒன்றிய தலைவர் சண்முக வடிவேல் தலைமையில் நடந்தது. முன்னதாக மாதாந்திர வரவு-செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலர்கள் வைத்த குடிநீர், சாலை போன்ற உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் குறித்த பல்வேறு கோரிக்கைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

கவுன்சிலர்கள் மத்தியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவதற்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், கிராம கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் தென்னரசு மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com