search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "traffic rules"

    மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க, லாரி டிரைவர்கள் சாலை விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், லாரி உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினார். இதில் மண்டல போக்குவரத்து அலுவலர் கலந்து கொண்டார். போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில், மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க, லாரி டிரைவர்கள் சாலை விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். டிரைவர்கள் கட்டாயமாக சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை ஓட்ட வேண்டும். ஆர்.சி. புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள எடைக்கு குறைவாகவே லாரியில் பொருட்களை ஏற்றிச் செல்ல வேண்டும். டிரைவர்கள் சாலைக்குரிய வேகத்தை கடைபிடித்து வாகனத்தை இயக்க வேண்டும்.

    சிமெண்டு ஆலை லாரிகள் கட்டாயமாக எந்த வாகனத்தையும் முந்தி செல்லக்கூடாது. அனைத்து சிமெண்டு ஆலை லாரிகளிலும் ஜி.பி.எஸ். கருவி மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த வெண்டும். பள்ளி, கல்லூரிகள் உள்ள இடத்தில் கவனமாகவும், குறைவான வேகத்திலும் செல்ல வேண்டும். ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், சீருடை அணியாமலும் வாகனத்தை இயக்கக்கூடாது. மது அருந்தி விட்டு, செல்போன் பேசிக்கொண்டு கட்டாயமாக வாகனத்தை இயக்கக்கூடாது. தேசிய நெடுஞ்சாலைகளில் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடத்தை தவிர வேறு எங்கும் லாரியை நிறுத்தக்கூடாது, என்றார். முடிவில் லாரி உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் சாலை விபத்தில்லா மாவட்டமாக அரியலூரை உருவாக்க உறுதிமொழி எடுத்து கொண்டனர். 
    பல லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட அஜித் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். #Viswasam #AjithKumar
    விஸ்வாசம் படம் தொடர்பாக சென்னை பெருநகர காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    “சமீபத்தில் வெளியான நடிகர் அஜித் குமார் நடித்த விஸ்வாசம் படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் கதை, பாடல், நடிப்பு, சண்டைகாட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்கு சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. படத்தில் கதாநாயகன், கதாநாயகி இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்து செல்வது.

    கதாநாயகன் கார் ஒட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது. தனது மகளின் உயிரைக் காப்பாற்றச் செல்லும் அவசரத்தில் கூட சீட் பெல்ட் அணிந்து செல்வது. பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டுவது. இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.



    பல லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட அஜித் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது ஆசை. ‘விஸ்வாசம்‘ படத்தின் கதாநாயகன் அஜித் மற்றும் இயக்குனர் சிவா மற்றம் அவரது குழுவினருக்கு பாராட்டுகள்’’ . இவ்வாறு சரவணன் தனது பதிவில் தெரிவித்துள்ளார். #Viswasam #AjithKumar

    திருவண்ணாமலை மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 588 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.76 ஆயிரத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டது
    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில், போளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ் மேற்பார்வையில் போளூர், சேத்துப்பட்டு, கடலாடி, கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் ஆகிய 5 போலீஸ் நிலைய எல்லைக்குள் போலீசார் வாகன தணிக்கை செய்தனர்.

    கடந்த மே மாதத்தில், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 94 பேர் மீதும், வாகனங்களில் அதிகம் பேரை ஏற்றிச்சென்ற 73 பேர் மீதும், ‘ஹெல்மெட்’ அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 65 பேர் மீதும், சீருடை அணியாமல் வாகனம் ஓட்டிய 58 பேர் மீதும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 28 பேர் உள்பட பல்வேறு சாலை விதிகளை மீறியதாக 588 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து ரூ.76 ஆயிரத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டது. 
    ×