search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thirumanjanam"

    • நம்பெருமாளுக்கு நடைபெறும் அனைத்து திருமஞ்சனங்களும் தங்க பாத்திரத்தில் நடைபெறும்.
    • காவிரி ஆற்றில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் நீராடுவார்கள்.

    ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா ராசியில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் துலா மாதம் என்றழைக்கப்படும். இந்த மாதத்தில் காவிரி ஆறு புனிதமாகிறது. துலா (ஐப்பசி) மாதத்தில் ஒரு நாள் ஸ்ரீரங்கம் காவிரியில் புனித நீராடி ரெங்கநாதரை தரிசனம் செய்தால் காசியில் வாசம் செய்து பல புண்ணிய செயல்கள் செய்ததற்கு சமம் என பெரியவர்கள் கூறுவர்.

    இதையொட்டி காவிரி ஆற்றில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் நீராடுவார்கள். இந்த மாதம் முழுவதும் காவிரி ஆற்றின் அம்மாமண்டபம் படித்துறையில் இருந்து தினமும் காலை புனித நீர் தங்க குடத்தில் எடுக்கப்பட்டு யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துவரப்பட்டு நம்பெருமாள் திருவாராதனம் மற்றும் திருமஞ்சனத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. மற்ற மாதங்களில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தான் கோவிலுக்கு புனித நீர் கொண்டு செல்லப்படுகிறது.

    துலா மாதபிறப்பையொட்டி நேற்று காலை காவிரி ஆற்றின் அம்மாமண்டபம் படித்துறையில் இருந்து தங்க குடத்தில் புனிதநீர் எடுக்கப்பட்டு யானை மீது வைத்தும், வெள்ளி குடங்களிலும் புனித நீர் எடுக்கப்பட்டு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு 10.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். காலை 11 மணி முதல் பகல் 1 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார். மாலை 2.30 மணிக்கு சந்தனு மண்டபத்திலிருந்து புறப்பட்டு மாலை 3 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    துலா (ஐப்பசி) மாதத்தில் நம்பெருமாளுக்கு நடைபெறும் அனைத்து திருமஞ்சனங்களும் தங்க பாத்திரத்தில் நடைபெறும். மேலும் மூலவர் பெரிய பெருமாள், உற்சவர் நம்பெருமாள், தாயார் தங்க ஆபரணங்கள் மற்றும் சாலக்கிராம மாலை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.

    ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் திருவெள்ளறை பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் சார்பு கோவிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை ஆகிய இருவேளை களிலும் பெருமாள், தாயார் புறப்பாடும், பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெறுகின்றன.

    திருவிழாவின் 2-ம் நாளான நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு மேல் கோவிலின் உற்சவர் செந்தாமரைக்கண்ணன், பங்கஜவல்லி தாயாருடன் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றுக்கு புறப்பட்டு வந்தார்.

    நேற்று அதிகாலை ஸ்ரீரங்கம் வடக்குவாசல் பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் பெருமாள், தாயார் எழுந்தருளினர். அங்கு பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் பெருமாள், தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி யளித்தனர்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இன்று(செவ்வாய்க்கிழமை) அதிகாலை திருவெள்ளறை சென்றடைந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளின் ஒன்றான கருடசேவை இன்று இரவு நடைபெறுகிறது. தேரோட்டம் வருகிற 31-ந் தேதி காலை நடைபெறுகிறது.
    பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் தினமும் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. இந்த திருமஞ்சனத்தை நேரில் பார்ப்பது மிகவும் நன்மை தரக்கூடியதாக கருதப்படுகிறது.
    பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் தினமும் ஸ்ரீலட்சுமி நரசிம்மருக்கு திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் 10.30 மணி வரை திருமஞ்சனம் நடைபெறும். பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு இந்த திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.

    ஒரே வரிசையில் உள்ள மூன்று லட்சுமி நரசிம்மர் ஆலயங்களில் தினமும் திருமஞ்சனம் நடத்தப்படுவது பரிக்கல்லில் மட்டும் தான். இந்த திருமஞ்சனத்தை நேரில் பார்ப்பது மிகவும் நன்மை தரக்கூடியதாக கருதப்படுகிறது.

    இந்த திருமஞ்சனத்துக்கு பக்தர்கள் பொருட்கள் வாங்கி கொடுக்கலாம். பால், தயிர், வாசன திரவியங்கள் போன்றவற்றை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வாங்கிக்கொடுக்கலாம்.

    பக்தர்கள் வாங்கிக்கொடுத்தாலும், கொடுக்கவிட்டாலும் தினசரி திருமஞ்சனம் தடையில்லாமல் நடத்தப்படுகிறது. பக்தர்கள் உதவி கிடைக்காதபோது ஆலயத்தின் சார்பிலேயே திருமஞ்சனம் செய்து விடுகிறார்கள். இந்த திருமஞ்சனத்தை பார்ப்பதற்காகவே சில பக்தர்கள் காலை நேரத்தில் பரிக்கல் ஆலயத்துக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    சென்னை மற்றும் தொலைதூரங்களில் இருந்து மூன்று லட்சுமி நரசிம்மர் ஆலயங்களையும் தரிசிக்க வருபவர்கள் இந்த திருமஞ்சனத்தை பார்க்கவேண்டும் என்பதற்காகவே பரிக்கல் ஆலயத்தை முதல் ஆலயமாக தேர்ந்தெடுத்து வழிபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×