search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thaipongal"

    • நவக்கிரகங்களின் நாயகன் என்றழைக்கப்படுபவர் சூரியன்.
    • ஒளியை தந்து உயிர்களை வாழவைத்து இந்த உலகையே வாழவைத்துக் கொண்டிருக்கும் முதன்மை கிரகம்.

    உலகில் பரவலாக காணப்படும் வழிபாடு சூரிய வழிபாடு.

    பண்டைய நாகரிகங்கள் பலவற்றிலும் சூரிய வழிபாடு இருந்ததென்பதற்கு பல சான்றுகள் கிடைத்துள்ளன.

    எந்த கடவுளையும் நாம் கண்ணால் காண முடியாது. ஆனால் சூரிய வழிபாட்டில் மட்டும் வழிபடும் கடவுளான சூரியனை நேரில் காணமுடியும்.

    அதிர்ஷ்டம், ராஜயோகம், பட்டம், பதவி, பணம், பங்களா, நிலபுலன்கள் போன்ற அமைப்புகளை ஒருவருக்கு வழங்குவதில் நவக்கிரகங்களுக்கு பெரும் பங்கு உண்டு.

    ஒரு இடத்தில் நின்றும் இடம் பெயர்ந்தும் கிரகங்கள் தரும் பலன்களே ஒருவருக்கு நன்மை, தீமைகளை ஏற்படுத்துகிறது.

    ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு வலிமை உண்டு.

    நவக்கிரகங்களின் நாயகன் என்றழைக்கப்படுபவர் சூரியன்.

    தினமும் நமக்கு தரிசனம் கொடுக்கும் கிரகம்.

    ஒளியை தந்து உயிர்களை வாழவைத்து இந்த உலகையே வாழவைத்துக் கொண்டிருக்கும் முதன்மை கிரகம்.

    • சூரியன் உதிக்காவிட்டால் சந்திரனுக்கு ஒளி இல்லை. பயிர்கள் வாடிவிடும்.
    • உலகத்தில் மழை, பனி, வெப்பம் ஆகியவை சூரியனின் சஞ்சாரத்தால்தான் உண்டாகிறது.

    சூரியன் வடக்கு நோக்கிப் பயணம் செய்யும் உத்தராயண காலமான தை முதல் நாள் பொங்கல் திருநாள்.

    சூரியன் உதிக்காவிட்டால் சந்திரனுக்கு ஒளி இல்லை. பயிர்கள் வாடிவிடும்.

    நீர் நிலைகளிலுள்ள நீரை மேகத்திற்கு எடுத்துச் செல்பவை சூரியனின் உஷ்ண கிரணங்கள் தான்.

    ஆகவே தான் நிலத்தில் விளைந்த கரும்பு, நெல், இஞ்சி, மஞ்சள் கொத்து, வாழை என்று அந்த வருடம் விளைந்த பொருட்களை வைத்து, தேர்போல் கோலமிட்டு, காவியிட்டு, புத்தரிசியிட்டு முதலில் பாலைப் பொங்கவிட்டு சர்க்கரைப் பொங்கல் செய்து, சூரியனை பூஜிக்க வேண்டும்.

    சூரிய தேவன் சிவனின் அஷ்டமூர்த்திகளில் ஒருவர், பரமேஸ்வரனுக்கும் மஹாவிஷ்ணுவுக்கும், பராசக்திக்கும் வலது கண்ணாக பிரகாசிப்பவர்.

    உலகத்தில் மழை, பனி, வெப்பம் ஆகியவை சூரியனின் சஞ்சாரத்தால்தான் உண்டாகிறது.

    சூரியனும் சந்திரனும் ப்ரத்யட்ச தேவதைகள், சூரியனின் ரதத்திற்கு ஒரு சக்கரம், பன்னிரண்டு ஆரக்கால்கள், வேதத்தின் ஏழு சந்தங்களும் தேரின் ஏழு குதிரைகளாக இருக்கின்றன.

    அந்தக் குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களையும், பன்னிரண்டு ஆரக்கால்கள் பன்னிரண்டு மாதங்களையும் குறிக்கின்றன.

    அந்த ரதத்தில் வாலகில்யர் எனப்படும் விரலளவே உள்ள 60,000 ரிஷிகள் சூரியனை ஸ்தோத்ரம் செய்கின்றார்களாம். (இது அறுபது நாழிகளைக் குறிக்கும்)

    சூரியனின் தேர் சக்கரத்தின் மேல்பாகம் உத்தராயணத்தையும், கீழ் பாகம் தட்சிணாயணத்தையும் குறிக்கின்றது.

    இவ்வாறு காலஸ்வரூபமாகவும், வேத ஸ்வரூபமாகவும் இருக்கும் சூரியன், பிரம்மா, விஷ்ணு, ருத்ரர் (சிவன்) ஆகிய மும் மூர்த்திகளின் ஸ்வரூபம்.

    முறையாக இவரை பூஜிப்பதாலும், ஆதித்ய ஹ்ருதயம் போன்றவற்றால் சூரிய நமஸ்காரம் செய்வதாலும் நல்ல உடல் வலிமை, நீண்ட ஆயுள், மன சாந்தி முதலியன கிட்டும்.

    விவாகமான ஆண்களும், பெண்களும் தம்பதிகளாக ஸத்குரு மூலம் சூரிய நமஸ்கார மந்திர ஜபத்தை உபதேசம் செய்து கொள்ள இது மிகச்சிறந்த நாள் ஆகும்.

    • தைப்பொங்கல் விழா தமிழர்களின் திருநாள்.
    • சூரிய பகவான் ஆன்மாவை பிரதிபலிப்பவன்.

    காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்

    பூசுர உலகோர் போற்றப் பொசிப்புடன் சுகத்தை நல்கும்

    வாசியேழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த

    தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி

    தைப்பொங்கல் விழா தமிழர்களின் திருநாள்.

    உழவர்களின் இன்பம் பொங்கும் பெருநாள்.

    பூமியில் இயற்கை வளங்களை நிலைக்கச் செய்து உயிரினங்களை வாழவைக்கும் சூரியபகவானுக்கு தமிழர்கள் நன்றி செலுத்தும் இனிய நன்நாள்.

    சூரிய பகவான் ஆன்மாவை பிரதிபலிப்பவன்.

    ஓருவருக்கு ஆத்மபலம் அமையவேண்டுமானால் சூரியபலம் ஜாதகத்தில் அமையவேண்டும்.

    தமிழர்கள் வாழும் நாடுகளில் பொங்கல் பண்டிகை, மிகவும் பிரபலமானது.

    பண்டைக் காலத்திலிருந்தே சூரிய வழிபாட்டை தமிழர்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர்.

    சூரியன் தரும் சாரத்தைக் கொண்டு நாம் விளைவித்த பயிர்களை அறுவடை செய்யும் நேரம் அது.

    அந்த அறுவடையை சூரியன் நமக்களிக்கும் காரணத்தால், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக சூரியனை நாம் வழிபடுகிறோம்.

    இதனால்தான் பொங்கல் பண்டிகை "உழவர் திருநாள்" என கொண்டாடப்படுகிறது.

    பொங்கல் திருநாளன்று பசும்பாலில் உலை வைத்து, அதில் புத்தரிசியும் புதுவெல்லமும் சேர்த்துப் பொங்கல் செய்து சூரியனுக்குப் படைக்கிறோம்.

    அச்சமயத்தில் புதிய அறுவடையாகக் கிடைக்கும் புதுமஞ்சள், புது இஞ்சி ஆகியவற்றைக் கொத்தோடு படைக்கிறோம்.

    வாழைப் பழம், வெற்றிலை, பாக்கு போன்றவற்றையும் ஆதவனுக்கு நிவேதனம் செய்து, அகம் மகிழ்கின்றோம்.

    பொங்கல் தினத்துக்கு முன் தினம், பழையன கழித்துப் புதியன புகுத்திப் போகிப் பண்டிகையும், மறுநாள் உழவுக்குத் துணை நின்ற மாடுகளுக்கான மாட்டுப் பொங்கல் மற்றும் கனு எனும் கன்னிப் பொங்கலும் இந்தியாவில் கொண்டாடப்படுகின்றன.

    • அக்காலத்தில் மார்கழியில் பெரும்பாலும் அறுவடை முடிந்துவிடும்.
    • அதனால், உழவர்கள் கையில் தை மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

    அக்காலத்தில் மார்கழியில் பெரும்பாலும் அறுவடை முடிந்துவிடும்.

    அதனால், உழவர்கள் கையில் தை மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

    இதைப் பயன்படுத்தி கல்யாணச் செலவு செய்யலாம் என்பதால் தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி உண்டானது.

    இப்பழமொழிக்கு வேறொரு பொருளும் சொல்வதுண்டு.

    வயலில் அறுவடை முடிந்து விட்டதால், பயிர்பச்சை இல்லாமல் வரப்பு நடப்பதற்கு ஏதுவாக காலியாக இருக்கும்.

    அதனையும் தைபிறந்தால் வழி பிறக்கும் என்பர்.

    ×