search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temple Kumbabhishekam"

    • திருமணத்திற்காக சென்ற போது விபரீதம்
    • பைக்கில் வந்து பறித்து சென்றனர்

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் லாரி டிரைவர். இவரது மனைவி சுகன்யா (வயது 35). இருவரும் நேற்று மு்தினம் இரவு பைக்கில். புதூர், கிராமத்திலிருந்து சேத்துப்பட்டில் நடந்த உறவினர் திருமணத்திற்காக சென்றனர்.

    சேத்துப்பட்டு, பழம்பேட்டை, பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் முன்பு நின்று உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது இவர்களை பின் தொடர்ந்து வந்த 2 பேர் பைக்கில் ஹெல்மெட் அணிந்த வந்தனர்.

    திடீரென சுகன்யா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை மர்ம கும்பல் பறித்துச் சென்றனர்.

    உடனே சுகன்யா, கத்தி கூச்சலிட்டார். திருமணத்திற்கு வந்திருந்தவர்கள், உறவினர்கள், பைக்கில் மர்ம கும்பலை பிடிக்க முயன்றனர், ஆனால் அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து ஜெயபிரகாஷ், நேற்று சேத்துப்பட்டு பேரீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் ஒன்றியம் கடலாடி ஊராட்சி பருவதமலை அடிவாரத்தில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள சித்தி விநாயகர், காளியம்மன், அம்மச்சார் அம்மன், ராமர் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    விழாவில் முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளரும், போளூர் சட்டமன்ற உறுப்பினரான அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • கணபதி ஹோமம், கங்கா பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாஜ்புரா கிராமத்தில் புதுத் தெரு சந்திப்பில் உள்ள வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கணபதி ஹோமம், கங்கா பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன.

    நேற்று முன்தினம் கலச பூஜை, மூலமந்திர மகா கணபதி ஹோமம் நடந்து ரத்தினகிரி பாலமுருகனடிமை சாமிகள், கலவை சச்சிதானந்த சாமிகள் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9.30 மணிக்கு கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு முக்கிய வீதிகளில் உலா நடந்தது.

    • திரளான பக்தர்கள் தரிசனம்
    • அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள இராமாபுரம், கிராமத்தில் செல்வ விநாயகர், மாரியம்மன் கோவில் புதிதாக புதுப்பிக்கப்பட்டு, பஞ்ச வர்ணம் பூசி. இதன் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.

    கோவிலின் முன்பு யாகசாலை அமைத்து, சிவா ஷர்மா, அய்யர் குழுவினரால், 108 கலசம் வைத்து, விநாயகர் பூஜை, கோ பூஜை, தம்பதி பூஜை, நாடி சந்தனம், உள்ளிட்ட 3 கால யாக பூஜைகள் செய்யப்பட்டு, பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசத்தை வைத்து. மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வந்து கோவில் விமான கோபுரத்தின் மீது உள்ள கலசத்தின் மீது புனித நீரை ஊற்றினார்கள். அங்கிருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர்.

    அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள், செய்திருந்தனர்.

    • பக்தர்கள் வலியுறுத்தல்
    • கருவறை கோபுரத்தின்மேலே செடிகள் வளர்ந்து வருகிறது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பகுதியில் லட்சுமி நாராயணபெருமாள் கோவில் உள்ளது. ஊரின் நடுவே உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    இந்தக்கோயில் கடந்த 1993-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் உள்ளதால் கோவில் கருவறை கோபுரத்தின்மேலே ஆலமரச்செடிகள் வளர்ந்து வருகிறது. இதையாரும் கண்டுகொள்ளவில்லை.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவிலில் உள்ளூர் பிரமுகர்கள் சிலர் கும்பாபிஷேகம் நடத்த முயற்சி மேற்கொண்டனர்.

    அப்போது பாலாலயம் பூஜைக்காக தோண்டப்பட்ட பள்ளம் தற்போது மூடப்படாமல் புற்கள் முளைத்த நிலையில் உள்ளது. பழமையான இக்கோவிலில் மூலவராக நரசிம்மர் தனது வலது தொடையில் லட்சுமிஅம்மனை அமரவைத்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    மிகவும் சிறப்பு வாய்ந்த இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தும் யாரும் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யாமல் உள்ளது மிகவும் வேதனையானது பக்தர்கள் சிலர் தெரிவித்தனர். எனவே இக்கோவிலை உடனடியாக புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முயற்சிகள் உள்ளூர் பக்தர்கள் மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவிலினுள் ஆஞ்சநேயர், ஐயப்பன், துர்காதேவி, நவக்கிரக சன்னதிகள் தனித்தனியே உள்ளது.

    ராகு காலமான வெள்ளி மற்றும் ஞாயிறு கிழமைகளில் பெண்கள் சிலர் விளக்கு பூஜை செய்து வருகின்றனர். ஊரின் நடுவே இக்கோயில் உள்ளதால் உரிய முறையில் சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூர் பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தர்மராஜா ஸ்ரீதிரவுபதி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது
    • இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ் குமார் , ரந்தினி பிரகதீஷ் குமார் மற்றும் மலேசிய தொழிலதிபர்கள் டத்தோ மணிவாசகம், சுந்தர், பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி, துணைத் தலைவர் செல்வ லட்சுமி கலந்துகொண்டனர்



    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூர் பகுதியில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ தர்மராஜா, ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் நாளடைவில் சிதிலமடைந்ததையடுத்து கோவில் புனரமைப்பு குழுவினர் அம்மன் அருள் வாக்குப்படி பிரபல தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ் குமாரை சந்தித்தனர்.

    அதன் பின்னர் புதிய அறக்கட்டளை தொடங்கப்பட்டு திருக்கடையூர் உலக புகழ்பெற்ற ஸ்தபதி கிருஷ்ணமூர்த்தி வசம் திருப்பணிகளை ஒப்படைத்தனர். இதையடுத்து விரைவாக திருப்பணிகள் முடிக்கப்பட்டன. பின்னர் இந்த கோவில் புனராவர்த்தன நூதன ஆலய மகா கும்பாபிஷேக விழா திருக்குட நன்னீராட்டு பெருவிழா இன்று காலை வெகு விமரிசையாக நடந்தது.

    முன்னதாக யாகசாலைகள் அமைக்கப்பட்டு நான்கு கால சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா இன்று அதிகாலை தொடங்கியது. பின்னர் காலை 7 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி விமான ராஜகோபுரத்தில் உள்ள கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். மேலும் மூலாலய மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தொழிலதிபர் டத்தோ எஸ்.பிரகதீஸ் குமார் , ரந்தினி பிரகதீஷ் குமார் மற்றும் மலேசிய தொழிலதிபர்கள் டத்தோ மணிவாசகம், சுந்தர், பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்கியலட்சுமி, துணைத் தலைவர் செல்வ லட்சுமி,

    பிரகதீஸ் குமார் இளைஞர் நற்பணி மன்ற பொறுப்பாளர்கள் கிருஷ்ணராஜ், மோகன், சிவா, மணி, துரைசாமி, தொழிலதிபர் எஸ். பெரியசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர்.

    இந்த கும்பாபிஷேக விழாவில் பூலாம்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    • துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த, திருவத்தூரில் செய்யாற்ற ங்கரையில் அமைந்துள்ள பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

    இன்று அதிகாலை 2.30மணி அளவில் 6-ம் யாக காலை பூஜை நடைபெற்று, அதனை தொடர்ந்து காலை 6.45 மணிக்கு சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்து அனைத்துகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு பிச்சாண்டி, எம் எல் ஏ ஒ ஜோதி, எ.வே.கம்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், நகர மன்ற தலைவர் மோகனவேலு, நகர செயலாளர் கே. விஸ்வநாதன், திருப்பணிகுழு தலைவர் உருத்திரப்பன், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் உஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு டிஎஸ்பி செந்தில் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவிற்கு வரும் பக்தர்கள் அனைவரும் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. 17 வருடங்களுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    • களக்காடு அருகே சவுந்திர பாண்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • 3 கோபுர கலசங்களுக்கும் ஒரே நேரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் கோலாகலத்துடன் நடத்தப்பட்டது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மேலக்கருவேலங்குளத்தில் பழமை வாய்ந்த சவுந்தரபாண்டீஸ்வரர்-கோமதி அம்பாள் கோவில் உள்ளது.

    தமிழகத்தில் நடராஜர் எழுந்தருளியுள்ள பஞ்சஸ்தலங்களில் ஒன்றான இக்கோவிலில் பல ஆண்டுகளுக்கு பின் தற்போது திருப்பணிகள் நடந்தது.

    இதையொட்டி இன்று (வியாழக்கிழமை) ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 6-ந்தேதி தொடங்கியது.

    அன்று மாலை 4 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜைகளும், 2-ம் நாளான 7-ம் தேதி காலை 7.30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும், மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜைகளும், 3-ம் நாளான நேற்று காலை 7 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகளும், மாலை 5.30 மணிக்கு ஐந்தாம் கால யாகசாலை பூஜைகளும் நடந்தன. 4-ம் நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு 6-ம் காலயாக சாலை பூஜைகள் நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து பூர்ணாகுதி நடந்தது. அதன் பின் யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய குடங்களுடன் சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க கோவிலை சுற்றி வந்தனர். பின்னர் கோவிலில் உள்ள 3 கோபுர கலசங்களுக்கும் ஒரே நேரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் கோலாகலத்துடன் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து சவுந்தரபாண்டீஸ்வரர், கோமதி அம்பாள், ஆனந்த நடராஜர் சுவாமிகளுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. விழாவில் திருவாவடுதுறை ஆதினம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ×