search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coimbatore news கோவை செய்திகள் கோவை நியூஸ்"

    பொள்ளாச்சி, கோவை ஆகிய இரு இடங்களில் மட்டும் கால்நடை பெரு மருத்துவமனைகள் செயல்படுகின்றன.
    நெகமம்:

    கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நெகமம்-வடசித்தூர் கால்நடை மருந்தகங்கள் கூடுதல் இடவசதி பெற்றிருந்தும் தரம் உயர்த்தப்படவில்லை. என்ற வருத்தம் விவசாயிகளிடையே தொடர்ந்து நீடித்து வருகிறது. 

    உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் எம்.எல்.ஏ., எம்.பி.,க்களின் பரிந்துரை இல்லாததால், தரம் உயர்த்தப்படுவதில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி, கோவை ஆகிய இரு இடங்களில் மட்டும் கால்நடை பெரு மருத்துவமனைகள் செயல்படுகின்றன.

    வேறெங்கும் பெரு மருத்துவ மனைகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போதைய சூழலில் நெகமம்-வடசித்தூர் கால்நடை மருந்தகங்களுக்கு தினமும் 60-க்கும் மேற்பட்ட ஆடு, மாடு, நாய், பூனை, கோழி உள்ளிட்டவை சிகிச்சைக்காக கொண்டு வரப்படுகின்றன.

    இந்த 2 கால்நடை மருந்தகங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் கால்நடைகள் வளர்ப்பும், எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.எனவே, அனைத்து வசதிகளையும் கொண்ட கால்நடை மருத்துவமனை வளாகத்தை இப்பகுதியில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு இந்த இரண்டு கால்நடை மருந்தகங்களை, மருத்துவமனைகளாக தரம் உயர்த்த உறுதி அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் விவ சாயிகள் காத்திருக்கின்றனர். 

    இது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது;- 

    நெகமம் மற்றும் வடசித்தூர் பகுதியில் கால்நடை மருந்தகம் உள்ளது. இங்கு தற்போது அளவான மருந்து மற்றும் மாத்திரைகள் தான் கிடைக்கும். கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை, ஸ்கேன், எக்ஸ்ரே, மற்றும் பல்வேறு வகையான வசதிகள் கிடைக்கும். மேலும் மருந்துகள் அதிகளவில் வரும் விவசாயிகள் மேல்சி கிச்சைக்காக வேறு எங்கும் கால்நடையை அழைத்து செல்லவேண்டியது இல்லை. என இவ்வாறு அவர் கூறினார்.

    நவீன தீவன மேலாண்மை யுக்தியை கடைபிடிக்க கால்நடை டாக்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    நெகமம்:

    நெகமம் மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராமங்களில், கால்நடை வளர்ப்பு, பிரதான தொழிலாகும். இதன் காரணமாக, கால்நடைத்துறையால், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    அதன்வாயிலாக, கறவை மாடுகளில் செயற்கை முறை கருவூட்டல், சினைபிடிக்கும் திறனை அதிகரித்தல், மலட்டுத்தன்மையை கண்டறிந்து போக்குதல் என, கால்நடை வளர்ப்போர் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    இந்நிலையில், கறவை மாடுகளின் இனப்பெருக்கத்திறனை மேம்படுத்தவும், பால் உற்பத்தியைப்பெருக்கவும் உரிய வழிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து கால்நடைத்துறையினர் கூறியதாவது-

    கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், உலர்தீவனம், அடர்தீவனத்தை சமச்சீர் அளவில் வழங்க வேண்டும். அதன் வாயிலாக, பண்ணையை லாபகரமாக நடத்த முடியும். பசுந்தீவனத்தை கறவை மாடுகளுக்கு கொடுப்பதன் வாயிலாக இனவிருத்தி மேலாண்மை பெருகும். அடர்தீவன அளவை சமச்சீராக கொடுப்பதால், மாடுகள், முழு உற்பத்தி திறனை பெறும்.கறவை மாடுகள், ஆரோக்கியமாக இருப்பதுடன், பால் உற்பத்தியும் அதிகரிக்கும். இதுகுறித்து, கிராமங்கள்தோறும், கால்நடை வளர்ப்போரிடம் அறிவிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு, அவர்கள் கூறினர்.

    இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
    காரமடை:

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தேக்கம்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகள் சரண்யா (வயது 16). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சரண்யா படிப்பில் நாட்டம் இல்லாமல் இருந்தார். கடந்த 22-ந் தேதி  இவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதனை அவரது தாய் கண்டித்தார். 

    இதனால் மனவேதனை அடைந்து சரண்யா வீட்டில் இருந்து எலி மருந்தை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அவரது பெற்றோர் உடனடியாக சரவண்யாவை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை பேரூர் அருகே உள்ள நொய்யல் ஆற்று பாலத்தில் 60 வயது மதிக்க தக்க மூதாட்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து பேரூர் கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இது குறித்து பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அணையில் குளிக்க வந்தவர்களை போலீசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர்.
    ஆனைமலை:

    பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை மற்றும் பூங்காவை காண தமிழகம், கேரள, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    120 அடி உயரம் கொண்ட ஆழியார் அணை நீர்மட்டம் தற்போது நீரின் அளவு குறைந்து 95 அடியாக உள்ளது. ஆழியார் அணைக்கு வரும் இளைஞர்கள் சிலர் அணையின் தெற்கு பகுதியில் உள்ள சேரும் சகதியுமாக உள்ள இடத்தில் ஆபத்தை உணராமல் குளிக்கின்றனர். 

    கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த சில இளைஞர்கள் இந்த சேர் நிறைந்த பகுதியில் குளித்ததில் இருவர் சேரில் சிக்கி உயிர் இழந்தனர். 

    எவ்வளவோ அறிவிப்பு பலகை வைத்தும் சுற்றுலா பயணிகள் இங்கு குளிப்பதை மட்டும் விடவில்லை. இதே போல் நேற்று சில இளைஞர்கள் ஆழியார் அணையின் ஆபத்தான பகுதியில் குளிப்பதை கண்ட ஆழியார் காவல்நிலைய போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்கி இளைஞர்களை அனுப்பி வைத்தனர். 

    போலீசார் கூறுகையில் இது போன்ற சேரும் சகதியுமாக உள்ள இடத்தில் ஆபத்தை உணராமல் இறங்கி குளிப்பதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீஸ்நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.
    வடவள்ளி:

    கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் வடமாநில வாலிபர்கள் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி அந்த பகுதியில் இன்று தொண்டாமுத்தூர் ேபாலீஸ்நிலையத்தில் புகார் செய்தனர். 

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 17-ந் தேதி வடமாநில வாலிபர் ஒருவர், 5 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். 

    மேலும் அந்த பகுதியில் திரியும் வடமாநில வாலிபர்கள் ஒரே மோட்டார்சைக்கிளில் 3 பேர் சென்று அச்சுறுத்தும் விதமாக பயணிக்கிறார்கள். 

    சந்தைப்பேட்டை பகுதியில் திடீர், திடீரென கூட்டமாக கூடுகிறார்கள். இரவு நேரங்களில் மது அருந்தி விட்டு அடிக்கடி தகராறிலும் ஈடுபடுகிறார்கள். தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையிலும் ஈடுபடுகிறார்கள். 

    எனவே வடமாநில வாலிபர்களின் அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளனர். 

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும்,
    கோவை:

    தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில்  தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தேசிங்குராஜன் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும், அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க  வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பணப்பயன் பெறும் உரிமையை மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  கோஷங்கள் எழுப்பினர். இதில் 100 கற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    சூலூரில் கலெக்டர் சமீரன் மக்களிடம் மனுக்கள் பெற்றார்
    வடவள்ளி:

    கோவை மாவட்டத்தில் ஜமாபந்தி, அந்தந்த தாலுகா அலுவலகங்களில்  இன்று தொடங்கியது. சூலுாரில் கலெக்டர் சமீரன் தலைமையில் இன்று நடந்தது. 
     
    அவர் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த ஜமாபந்தி ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது. இதேபோல அன்னூரில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை–யிலும், பொள்ளாச்சி, வால்பா–றையில் சப்-கலெக்டர் தலைமையிலும் நடந்தது.

    கிணத்துக்கடவில் கலால் துணை  கமிஷனர் தலைமை–யிலும் தலைமையில் மேட்டுப்பாளையத்தில் வடக்கு ஆர்.டி.ஓ., தலைமை–யிலும் நடைபெற்றது.
     
    பேரூர் தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு தெற்கு கோட்டாட்சியர் இளங்கோ தலைமை தாங்கினார். இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில், ஆலந்துறை, இக்கரை போலுவம்பட்டி, செம்மேடு, மத்தவராயபுரம், பூலுவபட்டி பகுதிகளை சேர்ந்த மக்கள் திரளாக பங்கேற்றனர்.

    அவர்கள் தங்கள் குறைகள் மற்றும் தங்களுக்கு தேவையான அடிப்பை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக எழுதி, தெற்கு கோட்டாட்சியர் இளங்கோவிடம் வழங்கினர்.நாளை தென்கரை, மாதம்பட்டி, தீத்திபாளையம் பேரூர் செட்டிபாளையம் ஆகிய பகுதிகளுக்கு ஜமாபந்தி நிகழ்ச்சி நடக்கிறது.
     
    மதுக்கரையில் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தலைமையிலும், வடக்கு தாலுகாவில் சமூக பாது காப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தலைமையிலும், கோவை தெற்கில் ஆதி திராவிடர்நலஅலுவலர் தலைமையிலும், ஆனைமலையில் தாட்கோ மேலாளர் தலைமையிலும் ஜமாபந்தி நடந்தது.இதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளான பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல், நில எல்லை அளத் தல், முதியோர் உதவித்தொகை, இலவச பட்டா, குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர்.

    விழா நாட்களில் தினசரி காலை, இரவு நேரங்களில் சூலக்கல் மாரியம்மன் வீதி உலா மற்றும் பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    கிணத்துக்கடவு:

    கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன்-விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்திருவிழா, கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    தொடர்ந்து  விழா நாட்களில்  தினசரி காலை, இரவு நேரங்களில் சூலக்கல் மாரியம்மன் வீதி உலா மற்றும் பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது. தொடர்ந்து 3 நாட்கள் மாலையும் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. முன்னதாக இன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மன் தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.  

    இந்த இரு சம்பவங்கள் குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெகமம்:

    நெகமம் அடுத்த செங்குட்டைப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக்(21). கட்டிடத்தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ளது. அதிகளவில் மது குடித்து வந்ததால் இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. பல இடங்களில் சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியாகவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பூச்சி மருந்து குடித்து மயங்கினார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

    நெகமம் அடுத்த பனப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியம்(51). விவசாயி. இவரது மனைவி கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து சுப்பிரமணியம் தனது தாயுடன் வசித்து வந்தார். மனைவி பிரிந்து சென்றதால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் பூச்சி மருந்து குடித்து மயங்கினார்.அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த இரு சம்பவங்கள் குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளத்தொடர்பை தட்டி கேட்டதால் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் தெரிவித்துள்ளார்.
    கோவை:

    கோவை பீளமேடு அருகே உள்ள கோல்டு வின்சை ேசர்ந்த 24 வயது இளம்பெண். 

    இவர் கிழக்கு அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-எனக்கு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. எனது கணவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நான் எனது கணவர் குடும்பத்துடன் வசித்து வந்தேன். எனது கணவர் அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். இது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

     நான் அவருக்கு தெரியாமல்  ஆய்வு செய்த போது எனது கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து குழந்தையுடன் வசித்து வரும் இளம்பெண் ஒருவருடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. தற்போது திருமணம் முடிந்த பின்னரும் அந்த பெண்ணுடனான ெதாடர்பை விடவில்லை. தொடர்ந்து அவர் அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று வருகிறார்.

    இது குறித்து நான் கேட்ட போது எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. எனது கணவர் மற்றும் அவரது தந்தை, தாய் ஆகியோர் என்னை கொடுமைப்படுத்தி வருகின்றனர். மேலும் இதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
     
    புகாரின் பேரில் கிழக்கு அனைத்து மகளிர் போலீசார்  இளம்பெண்ணின் கணவர், அவரது தாய், தந்தை ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம், பெற்றோர்களில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அளிக்கப்படுகிறது.
    கோவை:

    தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து  உதவித் தொகை அளிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. 

    இதில் பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம், பெற்றோர்களில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அளிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும், குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான நபர்களுக்கு நிவாரணம் அளிக்கப்படுகிறது.

    அதன்படி கோவை மாவட்டத்தில் பெற்றோர் இருவரையும் இழந்த 21 குழந்தைகள், பெற்றோர்களில் ஒருவரை இழந்த 544 குழந்தைகள் என மொத்தம் 565 குழந்தைகளுக்கு கொரோனா நிவாரண தொகை அளிக்கப்பட்டு உள்ளது. பெற்றோர்களில் ஒருவரை இழந்த மேலும் 239 குழந்தைகளுக்கு நிவாரண தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் மதியழகன் கூறியதாவது:-


    கோவை மாவட்டத்தில் பெற்றோர் இருவரையும் இழந்த 21 பேர், பெற்றோர்கள் ஒருவரை இழந்த 783 பேர் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு விண்ணப்பித்து இருந்தனர். இதனை முழுமையான ஆய்வு செய்து தகுதி உடையவர்கள் என உறுதி செய்யப்பட்ட பின் பெற்றோர் இருவரையும் இழந்த 21 குழந்தைகள், பெற்றோர்கள் ஒருவரை இழந்த 544 குழந்தைகளுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு உள்ளது.  மற்றவர்களுக்கு நிவாரண தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இவர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்படும். 

    கொரோனா பாதிப்பால் பெற்றோர்களில் ஒருவர், பெற்றோர்கள் இருவரையும் இழந்த 804 குழந்தைகளுக்கு  முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைக்கப்பட்டு   மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டு உள்ளது.

    தனியார் பள்ளிகளில் படித்து வரும் 550 மாணவர்கள், தனியார் கல்லூரிகளில் படித்து வரும் 37 மாணவர்களின் கல்விக் கட்டணத்தை குறைக்க பள்ளிக் கல்வித்துறை மற்றும் கல்லூரி கல்வித்துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

     39 குழந்தைகள் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.  

    இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டுபாளையம் கடை வீதியை சேர்ந்தவர் பத்ரன் (வயது 65). விவசாயி. இவரது மனைவி திம்மக்காள் (60). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மொபட்டில் திப்பம்பட்டி பெட்ரோல் பங்க் அருேக சென்று கொண்டு இருந்தனர். 

    அப்போது அந்த வழியாக வந்த கார் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கணவன்-மனைவி இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். 

    ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பத்ரன் பரிதாபமாக இறந்தார்.  திம்மக்காள் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    ×