search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coimbatore news கோவை செய்திகள் கோவை நியூஸ்"

    வால்பாறை காமராஜர் நகரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
    ஆனைமலை:

    கோவை மாவட்டம் வால்பாறை காமராஜர் நகரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து வால்பாறை சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். இந்த சோதனையில் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3Ñ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதனை பதுக்கி வைத்து இருந்த வீட்டில் உரிமையாளருமான தாஸ் என்கிற மரியதாஸ் (வயது 50) என்பவரை ேபாலீசார் கைது செய்தனர். ஏற்கனவே இவர் மீது வால்பாறை போலீஸ் நிலையத்தில் கஞ்சா வழக்கு உள்பட 22 வழக்குகள் உள்ளது. பின்னர் மரியதாஸை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ஆனைமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமை யிலான போலீசார் அம்ப ராம்பாளையம் பஸ் நிலை யம் வழியாக ரோந்து சென்ற னர். அப்போது அங்கு சந்தேப்படும் படி நின்று கொண்டு இருந்த வாலிபர் ஒருவரை சோதனை செய்தனர்.அப்போது அவர் தனது கைப்பையில் 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து இருப்பது தெரிய வந்தது. 

    அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் அம்பராம்பாளையம் அருகே உள்ள புலியன்தோப்பை சேர்ந்த சன்னி (48) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, ரூ. 3,250 ரொக்க பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட சன்னியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அைடத்தனர்.  

    50-க்கும் மேற்பட்ட மாமரங்கள் சேதப்படுத்தியது.
    ஆனைமலை:

    பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு ஆனைமலை புலிகள் காப்பக மலை அடிவாரத்தில் உள்ள நரிமுடக்கு எனும் இடத்தில் 5 ஏக்கரில் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் மாமரங்கள் நடவு செய்து விவசாயம் செய்து வருகிறார். 

    தற்போது மாம்ழப சீசன் தொடங்கியுள்ளது. இதனால் தோட்டத்தில் உள்ள மரங்களில் மாம்பழங்கள் காய்த்து தொங்குகின்றன. இதனை பறித்து விற்பனை செய்ய அவர் திட்டமிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று தோட்டத்திற்குள் புகுந்தது. தோட்டத்திற்குள் வெகுநேரமாக சுற்றி திரிந்த காட்டு யானை அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட மாமரங்களை முறித்து சேதப்படுத்தியது.

    மேலும் மாமரங்களில் கனிந்த நிலையில் இருந்த பழங்களையும் பறித்து ருசித்து சாப்பிட்டது. அதிகாலை வரை தோட்டத்தில் சுற்றிய காட்டு யானை அதன்பின்னர் வனத்திற்குள் சென்றது. இன்று காலை விவசாயி சக்திவேல் தோட்டத்திற்கு வந்தார். அப்போது மாமரங்கள் முறிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

    மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து, சேதமடைந்த மரங்களை ஆய்வு செய்தனர். மேலும் தோட்டத்துக்குள் காட்டு யானை வராமல் தடுக்க மலையடிவாரத்தில் அகழிகளை வெட்டி விவசாய நிலங்களை காக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரசுக்கு ஊராட்சி நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
    நெகமம்:

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 34 ஊராட்சிகள் உள்ளது. பெரிய அளவிலான வரி, வருவாய் இல்லாத நிலையில் ஊராட்சிக்கு கிடைக்க வேண்டிய நிதியும் கடந்த சில மாதங்களாகவே மிக குறைவான அளவிலேயே கொடுக்கப்படுவதாகவும், இதனால் அடிப்படை வசதிகளை கூட நிறைவேற்ற முடியாத நிலை இருப்பதாக ஊராட்சி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.
      
    இது குறித்து ஊராட்சி நிர்வாகங்கள் தரப்பில் கூறியதாவது:-ஊராட்சியில் சீரான நிலையில் தெருவிளக்குகள், சீரமைப்பு, குடிநீர் குழாய்கள் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை நிறைவேற்றுவதற்கான நிதி இல்லாமல் கடன் வாங்கி செலவு செய்யும் நிலை உள்ளது. மேலும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை உள்ளது. இதனால் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. குப்பைகளை சுத்தம் செய்வது, குடிநீர் வினியோகம் உள்ளிட்ட தள்ளி வைக்க முடியாத பணிகளே ஊராட்சி வசம் உள்ளது. கடந்த சில மாதங்களாக குறைவான அளவில் வழங்கப்பட்ட நிதி இதுவரை முழுமையாகவே வழங்கப்படவில்லை.
     
    வீடு- வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் தூய்மை காவலர்களுக்கு ஊராட்சியின் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களையே தூய்மை காவலர்களாக நியமித்தனர். 

    தற்போது திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் தூய்மை காவலளர்கள் நியமித்து பணியாற்றி வருகின்றனர். துப்புரவு பணியில் ஈடுபட பெரும்பாலானோர் விரும்பாத நிலையில் தூய்மை காவலர் திட்டமும், சிக்கலில் இருந்தது. அதைத்தொடர்ந்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் பணியமர்த்தப்பட்டது. ஆனால் அவர்களுக்கு சம்பளம் குறைவு மாதம் ரூ.3600 மட்டும் வழங்கப்படுகிறது. இது போதாது என தெரிவித்து வருகின்றனர். 
     
    உள்ளாட்சி நிர்வாகங்கள் நிதி நெருக்கடியில் திணறுவ தால் கிராமங்களின் அடி ப்படை தேவைகளை நிறை வேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. எனவே அரசு ஊராட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஊராட்சிக்கு வழங்கினால் மட்டுமே அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதில் எவ்வி தமான சிக்கல்களும் இருக்காது.இவ்வாறு அவர்கள் கூறினர்.  

    பக்தர்கள், ஏ.டி.எம்., கார்டுகள், ‘கியூ ஆர் கோடு’ வாயிலாகவும், அர்ச்சனை கட்டணம் செலுத்தி ரசீது பெறலாம்.
    ெபாள்ளாச்சி:

    கோவில்களில் கட்டண ரசீது முறையில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்கவும், பக்தர்கள் வசதி கருதியும், கணினி வழி கட்டண சேவைகள் வழங்கும் திட்டத்தை, இந்து சமய அறநிலையத்துறை தொடங்கியது.

     அதன் ஒரு பகுதியாக, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அர்ச்சனைகளுக்கான கட்டண விபரங்கள் கணினி வாயிலாக பதிவு செய்யப்பட்டு, அச்சிடப்பட்ட ரசீது பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன.

    பக்தர்களிடம் கட்டணம் பெற வங்கிகளுடன் இணைக்கப்பட்ட, இரண்டு ‘பி.ஓ.எஸ்.,’ (பாயின்ட் ஆப் சேல்) எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

    இதன் வாயிலாக பக்தர்கள், ஏ.டி.எம்., கார்டுகள், ‘கியூ ஆர் கோடு’ வாயிலாகவும், அர்ச்சனை கட்டணம் செலுத்தி ரசீது பெறலாம். இனி பணம் எடுக்காவிட்டாலும், கட்டணம் செலுத்துவதற்கு தேவையான அளவு சில்லரை இல்லாவிட்டாலும், கவலையின்றி பக்தர்கள், டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தி ரசீது பெறலாம். என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
      

    ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணை விற்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
    நெகமம் :

    நெகமம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னையில் இருந்து தேங்காய், கொப்பரை, மஞ்ச  நார் உள்பட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    விவசாயிகளின் தோட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தேங்காய் ரூ.13 வரை விற்பனை ஆனது. மேலும் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் கடும் சிரமம் அடைந்து வந்தனர். ஓரளவு விலை கிடைத்ததால் விவசாயிகள் சமாளித்தனர்.

    இந்த நிலையில் தேங்காய் விலை திடீரென்று வீழ்ச்சி அடைந்தது. தற்போது ஒரு தேங்காய் ரூ. 10-க்கு விற்பனை ஆகிறது. இதனால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
     
    இதன் காரணமாக நெகமம், கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, வடசித்தூர், காட்டம்பட்டி, எம்மே கவுண்டன்பாளையம், ஆண்டிபாளையம், செட்டியக்காபாளையம், சின்னநெகமம், ஆவலப்பம்பட்டி, தேவணாம்பாளையம், மற்றும் பல்வேறு இடங்களில் விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்துள்ள தேங்காய்களை உரிக்காமல் அப்படியே குவியாலாக போட்டு வைத்து உள்ளனர். 

    ஒவ்வொரு தென்னந்தோப்புகளிலும் 30 ஆயிரம் முதல்,  70 ஆயிரம் வரை தேங்காய்கள் உரிக்காமல் அப்படியே தேக்கி வைத்துள்ளனர். இதனால் மலைபோல் தேங்காய்கள் குவிந்துள்ளன. இதன் காரணமாக வெளிமார்க்கெட்டில் தேங்காய் விலை அதிகரித்து வருகிறது. 

    இது குறித்து தென்னை விவசாயி ஒருவர்  கூறியதாவது;-

    பொள்ளாச்சி தாலுகா பகுதியில் தென்னை சாகுபடி பாதிப்படைந்து வருகிறது. ஆட்கள் பற்றாக்குறை, விளை நிலங்கள் வீடுகளாக மாறும் அவலம் போன்றவற்றால் நலிவடைந்து வரும் இந்த நேரத்தில் தேங்காய் விலையும் கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. 

    ரூ.13 க்கு விற்பனை ஆன தேங்காய் தற்போது ரூ. 10-க்கு தான் விற்பனை ஆகிவருகிறது. விலை உயரும் என்ற நம்பிக்கையுடன் தேங்காய்களை உரிக்காமல் தோப்பகளில் அப்படியே வைத்துள்ளோம். தேங்காய் விலை வீழ்ச்சிக்கு காரணம் வெளிநாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதுதான். தேங்காய் எண்ணெய்க்கு பதில் பாமாயில் பயன்படுத்துவதால்தான் தேங்காய் விலை குறைந்து வருகிறது. எனவே ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தால் தான் தேங்காய் விலை உயர வாய்ப்புகள் உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 
    போத்தனூரை சேர்ந்த 16 வயது மாணவி. இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
    கோவை:

    கோவை போத்தனூரை சேர்ந்த 16 வயது மாணவி. இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
     
    மாணவிக்கு அதே கல்லூரியில் படிக்கும் 19 வயது மாணவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் நட்பாக பழகி வந்தனர். இந்தநிலையில் மாணவியிடம் மாணவர் காதலிப்பதாக கூறினார். ஆனால் அவர் காதலிக்க மறுத்து விட்டார். இதனை யடுத்து மாணவருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார். இது மாணவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    சம்பவத்தன்று மாணவியின் பெற்றோர் வேலைக்கு சென்று இருந்தனர். மாணவி வழக்கம் போல கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பினார். 

     வீட்டில் மாணவி டி.வி. பார்த்து கொண்டு இருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த மாணவர், மாணவியிடம் காதலிப்பதாக கூறி அத்துமீறி உள்ளே நுழைந்தார். அவர் மாணவியை மிரட்டி கடத்தி சென்றார். 

    வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய பெற்றோர் மாணவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது மாணவியை மாணவர் கடத்தி சென்றது தெரிய வந்தது. இது குறித்து மாணவியின் பெற்றோர் கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடத்தி செல்லப்பட்ட தங்களது மகளை மீட்டு தரும்படி புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலிக்க மறுத்த மாணவியை கடத்தி சென்ற மாணவரை தேடி வருகிறார்கள்.   

    ஊட்டியை சேர்ந்த ரஞ்சித்(40) என்பதும், கூடலூர் மண்ணுத்துவயல் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
    சிறுமுகை:

    ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலையில் கல்லார் அடுத்த தூரிப்பள்ளம் அருகே இன்று காலை வெகு நேரமாக கார் ஒன்று சாலையோரம்  நின்று கொண்டிருந்தது. யாராவது சுற்றுலா பயணிகள் காரை நிறுத்தி விட்டு சென்றிருக்கலாம் என்று நினைத்தனர்.

    ஆனால் வெகுநேர மாகியும் யாரும் காரை எடுக்க வரவில்லை. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கும், அப்பகுதி மக்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் காரின் அருகே சென்று பார்த்த போது 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.இதை பார்த்ததும் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்க தகவல் கொடுக்கப்பட்டது.
     
    தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காரை பார்த்தனர். அப்போது காரில் வாலிபர் நாக்கை கடித்தபடி இறந்த நிலையில் கிடந்தார். அவர் இறந்து 2 நாட்கள் இருக்கலாம் என சந்தேகித்தனர்.

    இதையடுத்து போலீசார் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் யார்? என்பதை கண்டறிய காரில் ஏதாவது இருக்கிறதா என தேடி பார்த்தனர்.

    அப்போது, காரில் ஆதார் கார்டு ஒன்று கிடந்தது. அதை வைத்து விசாரித்ததில் அவர் ஊட்டியை சேர்ந்த ரஞ்சித்(40) என்பதும், கூடலூர் மண்ணுத்துவயல் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

    தொடர்ந்து அவரது உறவினர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அவர்கள் மேட்டுப்பாளையம் விரைந்துள்ளனர். அவர்கள் வந்த பின்னர், அவர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

    மேலும் இறந்தவர் தற்கொலை செய்து கொண்டரா? அல்லது யாராவது கொலை செய்து உடலை கொண்டு வந்து போட்டு சென்றனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஆரியம்மாள் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார்.
    கோவை:

    கோவை சூலூர் அருகே உள்ள பூராண்டம் பாளையத்தை  சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி ஆரியம்மாள் (வயது 82). இவர் வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக ஆரியம்மாள் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். 

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஆரியம்மாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    6 வனச்சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, ராஜநாகம் பல்வேறு வகையான மான்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் உள்ளன.
    பொள்ளாச்சி:

    ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி, திருப்பூர் என இரண்டு கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 
     
    இங்கு உள்ள 6 வனச்சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, ராஜநாகம் பல்வேறு வகையான மான்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் உள்ளன.  இந்த வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணிக்கான பயிற்சி வகுப்புகள் நேற்று அட்டகட்டி பயிற்சி மையத்தில் நடைபெற்றது. 

    இன்று காலை 6 மணிக்கு கணக்கெடுப்பு பணி தொடங்கியது. 25, 26, 27-ந்  தேதிகளில் பெரிய தாவர உண்ணிகள் ஆன யானை, காட்டு மாடு உள்ளிட்ட வன உயிரினங்கள் கணக்கெடுக்கப்படுகிறது.

    வனப்பகுதிக்குள் குழுக்களாக செல்லும் வனத்துறையினர் குறைந்தபட்சம் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடந்து சென்று  நேரில் தென்படும் உயிரினங்கள் அவற்றின் எச்சம், கால் தடங்கள் போன்றவற்றை கணக்கெடுப்பு செய்கின்றனர்.

    28,29,30 ஆகிய தேதிகளில் நேர்கோட்டுப் பாதை கணக்கெடுப்பு முறையில் தாவர வகைகள், மனித இடர்பாடு மாமிச உண்ணிகள் பெரிய தாவரங்கள் பிணம் தின்னி கழுகுகள் போன்றவற்றை கணக்கெடுப்பு செய்கின்ற னர். 31-ந்  தேதி வன உயிரின பயிற்சி மையம் அட்டகட்டி தாங்கள் பதிவு செய்த கணக்கெடுப்பு தகவல்களை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு செய்கின்றனர். இன்று தொடங்கியுள்ள வனவிலங்குகள் கண க்கெடுப்பு பணி தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறுகிறது.  

    போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 3 பேரை தேடி வருகிறார்கள்.
    கோவை:
     
    மதுரை மாவட்டம் செல்லூரை சேர்ந்தவர் பால்பாண்டி(வயது34). இவர் காந்திபுரத்தில் இருந்து ராஜபாளையம் செல்லும் தனியார் ஆம்னி பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு காந்திபுரத்தில் இருந்து பஸ் புறப்பட தயாராக இருந்தது. இதையடுத்து டிரைவர் பால்பாண்டி பஸ்சில் புக் செய்தவர்களை போன் செய்து அழைத்து கொண்டிருந்தனர்.
     
    அப்போது ராஜ பாளையத்தை சேர்ந்த கணேஷ் என்பவர் போன் செய்தார். அவர் தான் பஸ்சில் பயணம் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்திருப்பதாகவும், ஒண்டிப்புதூர் பகுதியில் தன்னை ஏற்றி கொள்ளும் படியும் கூறினார். அதற்கு டிரைவர், சிங்காநல்லூர் வந்து ஏறி கொள்ளுங்கள் என கூறிவிட்டார்.

    இதையடுத்து பஸ் சிங்காநல்லூர் சென்றது. அப்போது அங்கு கணேஷ் வந்தார். அவர் குடிபோதையில் இருந்தார். அவர்,  எனது சீட் எங்கு உள்ளது என டிரைவரிடம் கேட்டார். அவர் உள்ளே சென்று நம்பரை பார்த்து அமருமாறு கூறினார். ஆனால் அவர் செல்ல மறுத்து டிரைவருடன் தகராறில் ஈடுபட்டார்.
     
    வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த கணேஷ், திடீரென டிரைவர் பால்பாண்டியை தாக்கினார். மேலும்  தனது நண்பர்கள் 2 பேரை வரவழைத்து, மீண்டும் டிரைவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பியோடினார்.இதுகுறித்து பால்பாண்டி சிங்காநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கணேஷ் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகிறார்கள்.

    திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
    நீலாம்பூர்:  

    கோவை மாவட்டம், சூலூர் காங்கயம்பாளையம் பகுதியில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான  கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. 

    பிரசித்தி பெற்ற இக்கோவிலில் வருட ந்தோறும் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை.

    இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா நேற்று   நடந்தது. இதனையொட்டி கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டது. ெதாடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடந்தது.அதனை தொடர்ந்து சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளினார். இந்த பக்தர்கள் முயற்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய தேர் வாங்கப்பட்டிருந்தது. அந்த தேரில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்ததால் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் காலையிலேயே கோவிலுக்கு வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் மாலையில் சுவாமி திருத்தேர் வீதி உலா நடந்தது. கரி வரதராஜ பெருமாள், தாயாருடன் காங்கேயம்பாளையம் கிராமத்தின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்தார். அப்போது மேள, தாளங்கள் முழங்க பஜனை இசையுடன், பெண்களும், ஆண்களும் ஆடிப்பாடி தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
    இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:
     
    கோவை செல்வபுரம் சரோஜினி நகரை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி. வெல்டர்.  இவரது மனைவி ஆர்த்தி (வயது 30). சம்பவத்தன்று  கிருஷ்ணமூர்த்தி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். 

    இதனால் 2 பேருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் கிருஷ்ணமூர்த்தி ஆட்டு இறைச்சி வாங்குவதற்காக வெளியே சென்றார். கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனவேதனை அடைந்து காணப்பட்ட ஆர்த்தி வாழ்க்கையில் விரக்தி அடைந்து சமையல் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இறைச்சி வாங்கி விட்டு வீட்டிற்கு வந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

    பின்னர் தற்கொலை செய்து கொண்ட ஆர்த்தியின் உடலைல மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    ×