search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வன உயிரின கணக்கெடுப்பு பணி
    X
    வன உயிரின கணக்கெடுப்பு பணி

    ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரின கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது

    6 வனச்சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, ராஜநாகம் பல்வேறு வகையான மான்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் உள்ளன.
    பொள்ளாச்சி:

    ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி, திருப்பூர் என இரண்டு கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. 
     
    இங்கு உள்ள 6 வனச்சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, ராஜநாகம் பல்வேறு வகையான மான்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் உள்ளன.  இந்த வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணிக்கான பயிற்சி வகுப்புகள் நேற்று அட்டகட்டி பயிற்சி மையத்தில் நடைபெற்றது. 

    இன்று காலை 6 மணிக்கு கணக்கெடுப்பு பணி தொடங்கியது. 25, 26, 27-ந்  தேதிகளில் பெரிய தாவர உண்ணிகள் ஆன யானை, காட்டு மாடு உள்ளிட்ட வன உயிரினங்கள் கணக்கெடுக்கப்படுகிறது.

    வனப்பகுதிக்குள் குழுக்களாக செல்லும் வனத்துறையினர் குறைந்தபட்சம் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடந்து சென்று  நேரில் தென்படும் உயிரினங்கள் அவற்றின் எச்சம், கால் தடங்கள் போன்றவற்றை கணக்கெடுப்பு செய்கின்றனர்.

    28,29,30 ஆகிய தேதிகளில் நேர்கோட்டுப் பாதை கணக்கெடுப்பு முறையில் தாவர வகைகள், மனித இடர்பாடு மாமிச உண்ணிகள் பெரிய தாவரங்கள் பிணம் தின்னி கழுகுகள் போன்றவற்றை கணக்கெடுப்பு செய்கின்ற னர். 31-ந்  தேதி வன உயிரின பயிற்சி மையம் அட்டகட்டி தாங்கள் பதிவு செய்த கணக்கெடுப்பு தகவல்களை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு செய்கின்றனர். இன்று தொடங்கியுள்ள வனவிலங்குகள் கண க்கெடுப்பு பணி தொடர்ந்து 6 நாட்கள் நடைபெறுகிறது.  

    Next Story
    ×