search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒடிசா"

    • நாட்டையே உலுக்கிய கோர விபத்தில் 288 பேர் பலியாகினர்.
    • ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாவட்டம் பாலசோர் மாவட்டத்தில் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே கடந்த 2-ந் தேதி 3 ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி பெரும் விபத்து நேரிட்டது. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் 288 பேர் பலியாகினர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இந்த ரெயில் விபத்தில் பலத்த காயமடைந்து, பகனகா பஜார் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பீகாரை சேர்ந்த பிஜய் பஸ்வான் என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 289 ஆக அதிகரித்துள்ளது.

    • ரெயில் விபத்து நடந்த பகுதியில் பேய்கள் உலாவுவதாக எழுந்த பீதியை தொடர்ந்து கிராம மக்கள் அதற்கான சடங்குகளையும் செய்து வருகிறார்கள்.
    • இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை இடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டம், பஹானகா பகுதியில் கடந்த 2-ந்தேதி கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் உள்பட 3 ரெயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

    இந்த கோர விபத்தில் 288 பயணிகள் பரிதாபமாக இறந்தனர். 900-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த கோரவிபத்து நடந்த பகுதியில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. விபத்து நடந்த பகுதியில் வசிக்கும் மக்கள், இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.

    ரெயில் தண்டவாளத்தில் இறந்தவர்கள் உடல்கள் சிதறி கிடந்த காட்சியும், படுகாயம் அடைந்தவர்களின் அலறல் ஓசையும் இன்னும் மனதை விட்டு அகலவில்லை என ஊர் மக்கள் கூறிவந்தனர்.

    ரெயில் விபத்து நடந்து 10 நாள் ஆகிவிட்ட நிலையில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு கிராம மக்கள் 10-ம் நாள் ஈமச்சடங்குகள் செய்தனர். இறந்தவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர் என்னென்ன சடங்குகள் செய்வார்களோ, அந்த சடங்குகள் அனைத்தையும் விபத்து நடந்த பகுதி கிராம மக்களே செய்தனர். இதுபற்றி அந்த பகுதியின் பஞ்சாயத்து சமிதி தலைவர் சரத்ராஜ் கூறியதாவது:-

    ரெயில் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை நாங்கள் தான் அகற்றினோம். இதனால் அவர்களின் ஆன்மா அமைதியடைய ஈமச்சடங்குகளை நாங்களே செய்ய முடிவு செய்தோம்.

    அதன்படி விபத்து நடந்த பகுதியில் உள்ள கிராம குளத்தில் நாங்கள் அனைவரும் ஒன்று கூடி, இறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்தோம். அதன்படி எங்கள் கிராமத்தை சேர்ந்த 116 பேர் மொட்டை அடித்து கொண்டோம், அன்று மாலையில் இறந்தவர்கள் நினைவாக அன்னதானமும் வழங்கினோம்.

    இதுபோல விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் நலமடைய சர்வசமய பிரார்த்தனையும் நடத்த உள்ளோம். இன்றும், நாளையும் இந்த கூட்டு பிரார்த்தனை நடக்க உள்ளது, என்றார்.

    ரெயில் விபத்து நடந்த பகுதியில் பேய்கள் உலாவுவதாக எழுந்த பீதியை தொடர்ந்து கிராம மக்கள் அதற்கான சடங்குகளையும் செய்து வருகிறார்கள். மேலும் இங்கு இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட பள்ளி கட்டிடத்தை இடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • கடந்த 2-ந்தேதி நடந்த ஒடிசாவில் ரெயில் விபத்தில் 288 பேர் பலியாகினர்.
    • ரெயில்வே அதிகாரிகள், மாநில அரசின் உதவியுடன் அந்த ரெயில் பெட்டியை ஆய்வு செய்தது.

    புவனேசுவரம் :

    ஒடிசாவில் பாலசோர் அருகே கடந்த 2-ந்தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவேக ரெயில், மற்றொரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் மோதி நேரிட்ட சங்கிலித்தொடர் விபத்தில் 288 பேர் பலியாகினர். இந்த உடல்கள் கைப்பற்றப்பட்டன. அடையாளம் காணப்பட்ட உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. அடையாளம் காண முடியாமல் சிதைந்து போன உடல்கள், மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

    இந்த நிலையில், அங்கு விட்டுச்செல்லப்பட்டுள்ள யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவேக ரெயிலின் பெட்டியில் இருந்து பிண வாடை வீசுவதாகவும், இன்னும் அதனுள் உடல்கள் கிடப்பதாகவும் சம்பவம் நடந்த பாகாநாகா பஜார் ரெயில் நிலையம் அருகே வசிப்பவர்கள் கூறினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுபற்றிய புகார் எழுந்து, ரெயில்வே அதிகாரிகள், மாநில அரசின் உதவியுடன் அந்த ரெயில் பெட்டியை ஆய்வு செய்தது.

    அதைத் தொடர்ந்து தென் கிழக்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஆதித்ய குமார் சவுத்ரி கூறும்போது, "அந்த ரெயில் பெட்டியில் மனித உடல்கள் இல்லை. அழுகிய முட்டைகளைத்தான் பார்த்தோம். அந்த ரெயிலில் பார்சல் பெட்டியில் 3 டன் முட்டைகள் எடுத்து வரப்பட்டன. எல்லா முட்டைகளும் அழுகிப்போய் விட்டன.

    அந்த நாற்றம்தான் வந்துள்ளது. அந்த முட்டைகளை 3 டிராக்டர்கள் மூலம் விபத்து நடந்த இடத்தில் இருந்து அகற்றி விட்டோம்" என குறிப்பிட்டார்.

    • கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டபோது அந்த பகுதி முழுவதும் பலத்த சத்தம் கேட்டது.
    • விபத்தில் உயிர்பிழைத்தவர்கள் அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் தவித்து கொண்டிருந்தனர்.

    கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டபோது அந்த பகுதி முழுவதும் பலத்த சத்தம் கேட்டது. அதோடு பயணிகள் எழுப்பிய கூக்குரலம் அந்த பகுதி முழுவதும் எதிரொலித்தது.

    இதனை கேட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் விபத்து நடந்த பகுதிக்கு ஓடிவந்தனர். அவர்கள் விபத்தில் சிக்கி கொண்டவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் உயிர்பிழைத்தவர்கள் அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் தவித்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு பாலசோர் பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் தங்க இடம் கொடுத்ததோடு, அவர்களுக்கு உணவும் வழங்கினர். குழந்தைகளுடன் வந்த பயணிகள் பாலசோர் பகுதி மக்களின் அன்பில் நெகிழ்ந்தனர்.

    ×