search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Skoda"

    ஸ்கோடா நிறுவனத்தின் 2019 ஆக்டேவியா கார்பரேட் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #SkodaOctavia



    சொகுசுக் கார்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழும் ஸ்கோடா நிறுவனம் தனது ஆக்டேவியா பிராண்டில் கார்பரேட் எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 

    இந்தியாவில் இதன் பெட்ரோல் மாடல் விலை ரூ.15.49 லட்சம் என்றும், டீசல் மாடல் விலை ரூ.16.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஸ்கோடா ஆக்டேவியா கார்பரேட் எடிஷனில் பெட்ரோல் மாடல் ரூ.50 ஆயிரம் விலை குறைவாகும். இதேபோல டீசல் மாடலுக்கு ரூ.1 லட்சம் வரையிலான சலுகை அளிக்கப்படுவதாக ஸ்கோடா அறிவித்துள்ளது.

    கார்பரேட் எடிஷனில் 6.5 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வசதி, மிருதுவான இருக்கைகள், 16 இன்ச் அலாய் வீல் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் வழங்கப்பட்டுள்ளன. 



    இதன் பாதுகாப்பு அம்சங்களுக்காக 4 ஏர் பேக்குகள் உள்ளன. ஏ.பி.எஸ். வசதியுடன் இ.பி.டி., ஹைட்ராலிக் பிரேக் அசிஸ்ட், ஸ்லிப் ரெகுலேஷன், மோட்டார் ஸ்பீடு ரெகுலேஷன், இ.டி.எல்., எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிடி கண்ட்ரோல் (இ.எஸ்.சி.), மல்டி கொலிஷன் பிரேக்கிங் (எம்.கே.பி.) உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மாடலானது 150 ஹெச்.பி. திறன், 250 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.

    இது சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டருக்கு 16.7 கி.மீ தூரம் ஓடியுள்ளது. டீசல் மாடல் 2 லிட்டர் டர்போ என்ஜினைக் கொண்ட இது 143 ஹெச்.பி. திறன் மற்றும் 320 என்.எம். டார்க் செயல்திறன் கொண்டது. டீசல் ஏ.எம்.ஜி. மாடல் லிட்டருக்கு சோதனை ஓட்டத்தில் 21 கி.மீ. தூரம் ஓடியுள்ளது.

    ஸ்கோடா நிறுவனம் ஷீல்டு பிளஸ் எனும் திட்டத்தை கார்பரேட் எடிஷன் மாடலுக்காக அறிமுகம் செய்துள்ளது. இதன்படி ஓராண்டுக்கு ஒருங்கிணைந்த காப்பீடு வசதி, 3 ஆண்டுகளுக்கு மூன்றாம் தரப்பு காப்பீடு (தேர்டு பார்டி இன்சூரன்ஸ்) ஆகியவற்றுடன் நான்கு ஆண்டுகளுக்கு உத்தரவாதத்தையும் அளிக்கிறது.

    இந்த காப்பீடானது 5 மற்றும் 6-வது ஆண்டுக்கும் நீட்டிக்கலாம். இந்த மாடலுக்கு டொயோடா கொரோலா ஆல்டிஸ், ஹூண்டாய் எலன்ட்ரா, ஹோண்டா சிவிக் ஆகிய மாடல்கள் போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது. 
    ஸ்கோடா நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. கார் அறிமுகமாகி இருக்கிறது. புதிய எஸ்.யு.வி. காமிக் என அழைக்கப்படுகிறது. #SkodaKamiq



    சொகுசு கார்களைத் தயாரிக்கும் செக்கோஸ்லோவேகியாவைச் சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. காமிக் என்ற பெயரில் ஜெனீவா மோட்டார் கண்காட்சிக்கு முன்பாகவே இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    எஸ்.யு.வி. பிரிவில் ஸ்கோடா நிறுவனம் ஏற்கனவே கோடியாக் மற்றும் கரோக் என்ற இரண்டு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. தற்போது மூன்றாவதாக இந்த மாடலை அறிமுகம் செய்துள்ளது.

    வடக்கு கனடா மற்றும் கிரீன்லாந்து பகுதியில் வாழும் மக்கள் பேசும் மொழியில் காமிக் என்றால் சரியான பொருத்தம் என்று அர்த்தம். அதாவது உங்களுக்கு பொருந்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் இந்தப் பெயரை சூட்டியுள்ளது. நகர் பகுதிகளுக்கு ஏற்ற எஸ்.யு.வி.யாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.



    எஸ்.யு.வி. மாடல்களில் இது மேம்பட்ட ரகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இரட்டை முகப்பு விளக்கு, பகலில் எரியும் எல்.இ.டி. விளக்கு, கம்பீரமான தோற்றத்துக்கு பம்பர் ஆகியவை இந்த காரின் சிறப்பம்சமாக இருக்கின்றன. 16 முதல் 18 இன்ச் அலாய் வீல், பெரிய ரூப்ரெயில், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகிய அனைத்தும் இதற்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கும். 

    இந்த கார் 4,241 மி.மீ. நீளமும், 1,793 மி.மீ. அகலமும், 1,531 மி.மீ. உயரமும் கொண்டது. இதில் லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் எமர்ஜென்சி பிரேக்கிங் வசதி ஆகியன உள்ளன. அனைத்துக்கும் மேலாக டிரைவர் சோர்வில் தூங்கும் நிலைக்குச் சென்றால் எச்சரிக்கை எழுப்பும் வசதியும் கொண்டது.

    இந்த காரில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் என்ஜினைக் கொண்டுள்ள இது 9 ஹெச்.பி. திறனையும், 175 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் கொண்டது. இது 6 கியர்களைக் கொண்டது. இதில் 7 கியர்களைக் கொண்ட ஆட்டோமேடிக் வசதி கொண்ட காரை விருப்பத்தின் பேரில் தேர்வு செய்யலாம். 

    இதில் 9.2 இன்ச் தொடுதிரை உள்ளது. இந்தப் பிரிவு வாகனங்களில் மிக அகலமான திரையை கொண்டுள்ள காரும் இது தான். முழங்கால்களையும் பாதுகாக்கும் ஏர்பேக் உள்பட இதில் 9 ஏர்பேக்குகள் பாதுகாப்புக்காக இணைக்கப்பட்டுள்ளன. இதன் விலை பத்து லட்சத்திலிருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2019 ரேபிட் மான்ட் கார்லோ கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #Skoda #RapidMonteCarlo



    ஸ்கோடா நிறுவனம் 2019 ரேபிட் மான்ட் கார்லோ எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் புதிய மான்ட் கால்ரோ ரேபிட் கார் விலை ரூ.11.16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மான்ட் கார்லோ எடிஷன் காரில் பல்வேறு பிரத்யேக அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படுகிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் கார் மான்ட் கார்லோ பாரம்பரியத்தை பரைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்கோடா நிறுவனம் மான்ட் கார்லோ மார்க்யூ மாடலின் பல்வேறு வேரியண்ட்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ எடிஷன் தற்சமயம் ஃபிளாஷ் ரெட் எனும் ஒற்றை நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. ஸ்பெஷல் எடிஷன் செடான் மாடல் நாட்டின் அனைத்து ஸ்கோடா அதிகாரப்பூர்வ விற்பனையகங்களிலும் கிடைக்கும். ரேபிட் மான்ட் கார்லோ எடிஷன் பிராண்டின் எமோட்டிவ் வடிவமைப்பு, வெளிப்புறம், பாதுகாப்பு மற்றும் அதிநவீன கனெக்டிவிட்டி அம்சங்களை வழங்குகிறது.



    2019 ரேபிட் மான்ட் கார்லோ எடிஷன் கார் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் TDI டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 153 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. டீசல் என்ஜின் 110 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது DSG டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

    வடிவமைப்பை பொருத்தவரை 2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ எடிஷன் ஸ்போர்ட் பிளாக் மற்றும் ரேசிங் சார்ந்த அக்சென்ட்கள் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் காரில் ஸ்கோடாவின் பிரபல கிரில், குவாட்ஸ் கட் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், 16-இன்ச் கிளபர் அலாய் வீல்கள் மற்றும் கிளாஸ் பிளாக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய ஸ்கோடா காரின் உள்புறம் 6.5 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, ஸ்மார்ட் லின்க், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, மிரர் லிண்க் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. 

    பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை இன்டெலிஜண்ட் ரெயின் சென்சிங் வைப்பர்கள், ரியர் பார்க்கிங் கேமரா, க்ரூஸ் கண்ட்ரோல், டூயல் ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., எலெக்டிராணிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், ஹில்-ஹோல்டு அசிஸ்ட் மற்றும் 3-பாயிண்ட் சீட் பெல்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.
    ஸ்கோடா நிறுவனம் அறிமுகம் செய்த ஸ்கேலா ஹேட்ச்பாக் கார் சிறப்பம்சங்கள் மற்றும் முழு விவரங்களை பார்ப்போம். #skodascala



    ஸ்கோடா நிறுவனம் ஹேட்ச்பேக் மாடலில் ‘ஸ்கேலா’ என்ற பெயரில் ஒரு புதிய காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் பிரபல மாடலான ரேபிட் கார் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது.

    புதிய கேபின், மைக்ரோ ஃபைபர் ஃபேப்ரிக்கால் ஆன இருக்கைகள், டேஷ்போர்டில் மென்மையான ஃபோம், தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 இன்ச் காக்பிட் டிஸ்ப்ளே ஆகியன இது சொகுசான வாகனம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

    5 பேர் சவுகரியமாக பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கார் 4,362 மி.மீ. நீளம் கொண்டது. இதன் சக்கரம் 2,649 மி.மீ. அகலம் கொண்டது. டிக்கியை திறக்கவும், மூடவும் ஆட்டோமேடிக் வசதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் டிக்கியின் இடவசதியும் அதிகமாக (467 லிட்டர்) வழங்கப்பட்டுள்ளது.

    சர்வதேச சந்தையைக் கருத்தில் கொண்டு நான்கு வகையான என்ஜினைக் கொண்டதாக இந்தக் காரை ஸ்கோடா நிறுவனம் உருவாக்கியுள்ளது. 1.0 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 99 ஹெச்.பி. திறன், 115 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. மற்றொரு ரகம் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 1.5 லிட்டர் அளவிலான இது 115 ஹெச்.பி. திறன் கொண்டது.



    இது தவிர 1.6 லிட்டர் டீசல் என்ஜின் மாடலையும் இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. இவை அனைத்தும் 5 அல்லது 6 கியர்களைக் கொண்டவை. இது தவிர 7 கியர் கொண்ட மாடல் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் ரகமும் அடங்கும்.

    எஸ், எஸ்.இ. மற்றும் எஸ்.இ.எல். என மூன்று மாடல்களில் இவை வந்துள்ளன. அனைத்து மாடலிலும் டிரைவர் அசிஸ்ட் வசதி இடம்பெற்றுள்ளது. அதேபோல அவசரகால பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட் ஆகியனவும் அனைத்து மாடலிலும் இடம்பெற்றுள்ளன. அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ரியர் வியூ கேமரா, ஆட்டோமேடிக் பார்க் அசிஸ்ட் ஆகியன வாடிக்கையாளர் விருப்பத்தின் பேரில் தேர்வு செய்து கொள்ளலாம்.

    இது தவிர பிரீமியம் மாடலில் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், கீலெஸ் என்ட்ரி (சாவி தேவைப்படாத வசதி), மொபைல் ஆப் உதவியோடு ரிமோட் டோர் அன்லாக்கிங் வசதியும் இடம்பெற்றுள்ளது.

    ஸ்கேலா என்பது லத்தீன் மொழி பெயர். இதற்கு தமிழில் ஏணி என்று அர்த்தம். இந்தக் கார் அறிமுகம் மூலம் முன்னோக்கி செல்வோம் என்ற நம்பிக்கையில் இப்பெயரை இந்நிறுவனம் சூட்டியுள்ளது.
    இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கோடியாக் கார் விலை ஒரு லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. #Skoda #Kodiaq



    இந்தியாவில் ஸ்கோடா கோடியாக் விலை ஒரு லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. கோடியாக் ஸ்டைல் வேரியன்ட் தற்போதைய விலை ரூ.33.83 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கிறது. இந்த விலை குறைப்பு குறுகிய காலக்கட்டத்திற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்கோடா நிறுவனம் சமீபத்தில் லாரின் மற்றும் லெமன்ட் டாப் என்ட் கோடியாக் வேரியன்ட் மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.35.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டது. புதிய ஸ்கோடா கோடியாக் லாரின் மற்றும் லெமன்ட் வேரியன்ட் பல்வேறு புதியஅம்சங்கள் மற்றும் உள்புறங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஸ்கோடா கோடியாக் ஸ்டைல் மாடலில் ஃபுல்-எல்.இ.டி. ஹெட்லைட்கள், அடாப்டிவ் ஃபிரன்ட்லைட் சிஸ்டம், எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள், எலெக்ட்ரிக் டெயில்கேட், 18 இன்ச் அலாய் வீல் மற்றும் ஆட்டோமேடிக் வைப்பர்கள் வழங்கப்பட்டுள்ளது.



    உள்புறம் டூயல்-டோன் தீம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 8-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10-ஸ்பீக்கர் கான்டன் ஆடியோ சிஸ்டம், பானரோமிக் சன்ரூஃப் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    கோடியக் எஸ்.யு.வி. 2.0 லிட்டர் TDI டீசல் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 143bhp மற்றும் 320Nm டார்கியூ கொண்டுள்ளது. இதன் பெட்ரோல் மாடல் தற்சமயம் அறிமுகம் செய்யப்படாது என்றே கூறப்படுகிறது. ஆக்டேவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் போன்ற மாடல்களிலும் இதே போன்ற இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் கொண்டுள்ள எஸ்.யு.வி. மாடலில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் கொண்டுள்ளது. இத்துடன் ஆக்டேவியா மாடலில் வழங்கப்பட்டுள்ளதை போன்ற பார்கிகிங் சிஸ்டம் கொண்டுள்ளது.
    ×