என் மலர்

  ஆட்டோமொபைல்

  அசத்தல் அம்சங்களுடன் ஸ்கோடாவின் புதிய எஸ்.யு.வி. அறிமுகம்
  X

  அசத்தல் அம்சங்களுடன் ஸ்கோடாவின் புதிய எஸ்.யு.வி. அறிமுகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்கோடா நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. கார் அறிமுகமாகி இருக்கிறது. புதிய எஸ்.யு.வி. காமிக் என அழைக்கப்படுகிறது. #SkodaKamiq  சொகுசு கார்களைத் தயாரிக்கும் செக்கோஸ்லோவேகியாவைச் சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. காமிக் என்ற பெயரில் ஜெனீவா மோட்டார் கண்காட்சிக்கு முன்பாகவே இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

  எஸ்.யு.வி. பிரிவில் ஸ்கோடா நிறுவனம் ஏற்கனவே கோடியாக் மற்றும் கரோக் என்ற இரண்டு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. தற்போது மூன்றாவதாக இந்த மாடலை அறிமுகம் செய்துள்ளது.

  வடக்கு கனடா மற்றும் கிரீன்லாந்து பகுதியில் வாழும் மக்கள் பேசும் மொழியில் காமிக் என்றால் சரியான பொருத்தம் என்று அர்த்தம். அதாவது உங்களுக்கு பொருந்தும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் இந்தப் பெயரை சூட்டியுள்ளது. நகர் பகுதிகளுக்கு ஏற்ற எஸ்.யு.வி.யாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.  எஸ்.யு.வி. மாடல்களில் இது மேம்பட்ட ரகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இரட்டை முகப்பு விளக்கு, பகலில் எரியும் எல்.இ.டி. விளக்கு, கம்பீரமான தோற்றத்துக்கு பம்பர் ஆகியவை இந்த காரின் சிறப்பம்சமாக இருக்கின்றன. 16 முதல் 18 இன்ச் அலாய் வீல், பெரிய ரூப்ரெயில், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகிய அனைத்தும் இதற்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கும். 

  இந்த கார் 4,241 மி.மீ. நீளமும், 1,793 மி.மீ. அகலமும், 1,531 மி.மீ. உயரமும் கொண்டது. இதில் லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், ஆட்டோமேடிக் எமர்ஜென்சி பிரேக்கிங் வசதி ஆகியன உள்ளன. அனைத்துக்கும் மேலாக டிரைவர் சோர்வில் தூங்கும் நிலைக்குச் சென்றால் எச்சரிக்கை எழுப்பும் வசதியும் கொண்டது.

  இந்த காரில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் என்ஜினைக் கொண்டுள்ள இது 9 ஹெச்.பி. திறனையும், 175 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் கொண்டது. இது 6 கியர்களைக் கொண்டது. இதில் 7 கியர்களைக் கொண்ட ஆட்டோமேடிக் வசதி கொண்ட காரை விருப்பத்தின் பேரில் தேர்வு செய்யலாம். 

  இதில் 9.2 இன்ச் தொடுதிரை உள்ளது. இந்தப் பிரிவு வாகனங்களில் மிக அகலமான திரையை கொண்டுள்ள காரும் இது தான். முழங்கால்களையும் பாதுகாக்கும் ஏர்பேக் உள்பட இதில் 9 ஏர்பேக்குகள் பாதுகாப்புக்காக இணைக்கப்பட்டுள்ளன. இதன் விலை பத்து லட்சத்திலிருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  Next Story
  ×