search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் ஸ்கோடா கோடியாக் விலை ஒரு லட்சம் வரை குறைப்பு
    X

    இந்தியாவில் ஸ்கோடா கோடியாக் விலை ஒரு லட்சம் வரை குறைப்பு

    இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்தின் புதிய கோடியாக் கார் விலை ஒரு லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. #Skoda #Kodiaq



    இந்தியாவில் ஸ்கோடா கோடியாக் விலை ஒரு லட்சம் வரை குறைக்கப்பட்டுள்ளது. கோடியாக் ஸ்டைல் வேரியன்ட் தற்போதைய விலை ரூ.33.83 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கிறது. இந்த விலை குறைப்பு குறுகிய காலக்கட்டத்திற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்கோடா நிறுவனம் சமீபத்தில் லாரின் மற்றும் லெமன்ட் டாப் என்ட் கோடியாக் வேரியன்ட் மாடலை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.35.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டது. புதிய ஸ்கோடா கோடியாக் லாரின் மற்றும் லெமன்ட் வேரியன்ட் பல்வேறு புதியஅம்சங்கள் மற்றும் உள்புறங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஸ்கோடா கோடியாக் ஸ்டைல் மாடலில் ஃபுல்-எல்.இ.டி. ஹெட்லைட்கள், அடாப்டிவ் ஃபிரன்ட்லைட் சிஸ்டம், எல்.இ.டி. டேடைம் ரன்னிங் லைட்கள், எலெக்ட்ரிக் டெயில்கேட், 18 இன்ச் அலாய் வீல் மற்றும் ஆட்டோமேடிக் வைப்பர்கள் வழங்கப்பட்டுள்ளது.



    உள்புறம் டூயல்-டோன் தீம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 8-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10-ஸ்பீக்கர் கான்டன் ஆடியோ சிஸ்டம், பானரோமிக் சன்ரூஃப் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    கோடியக் எஸ்.யு.வி. 2.0 லிட்டர் TDI டீசல் இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 143bhp மற்றும் 320Nm டார்கியூ கொண்டுள்ளது. இதன் பெட்ரோல் மாடல் தற்சமயம் அறிமுகம் செய்யப்படாது என்றே கூறப்படுகிறது. ஆக்டேவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் போன்ற மாடல்களிலும் இதே போன்ற இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் கொண்டுள்ள எஸ்.யு.வி. மாடலில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் கொண்டுள்ளது. இத்துடன் ஆக்டேவியா மாடலில் வழங்கப்பட்டுள்ளதை போன்ற பார்கிகிங் சிஸ்டம் கொண்டுள்ளது.
    Next Story
    ×