என் மலர்

  ஆட்டோமொபைல்

  2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ இந்தியாவில் வெளியானது
  X

  2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ இந்தியாவில் வெளியானது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்கோடா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2019 ரேபிட் மான்ட் கார்லோ கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #Skoda #RapidMonteCarlo  ஸ்கோடா நிறுவனம் 2019 ரேபிட் மான்ட் கார்லோ எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் புதிய மான்ட் கால்ரோ ரேபிட் கார் விலை ரூ.11.16 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  மான்ட் கார்லோ எடிஷன் காரில் பல்வேறு பிரத்யேக அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படுகிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் கார் மான்ட் கார்லோ பாரம்பரியத்தை பரைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்கோடா நிறுவனம் மான்ட் கார்லோ மார்க்யூ மாடலின் பல்வேறு வேரியண்ட்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ எடிஷன் தற்சமயம் ஃபிளாஷ் ரெட் எனும் ஒற்றை நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. ஸ்பெஷல் எடிஷன் செடான் மாடல் நாட்டின் அனைத்து ஸ்கோடா அதிகாரப்பூர்வ விற்பனையகங்களிலும் கிடைக்கும். ரேபிட் மான்ட் கார்லோ எடிஷன் பிராண்டின் எமோட்டிவ் வடிவமைப்பு, வெளிப்புறம், பாதுகாப்பு மற்றும் அதிநவீன கனெக்டிவிட்டி அம்சங்களை வழங்குகிறது.  2019 ரேபிட் மான்ட் கார்லோ எடிஷன் கார் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் TDI டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 153 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. டீசல் என்ஜின் 110 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது DSG டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது.

  வடிவமைப்பை பொருத்தவரை 2019 ஸ்கோடா ரேபிட் மான்ட் கார்லோ எடிஷன் ஸ்போர்ட் பிளாக் மற்றும் ரேசிங் சார்ந்த அக்சென்ட்கள் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய ஸ்பெஷல் எடிஷன் காரில் ஸ்கோடாவின் பிரபல கிரில், குவாட்ஸ் கட் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், 16-இன்ச் கிளபர் அலாய் வீல்கள் மற்றும் கிளாஸ் பிளாக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.

  புதிய ஸ்கோடா காரின் உள்புறம் 6.5 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட டிஸ்ப்ளே, ஸ்மார்ட் லின்க், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, மிரர் லிண்க் உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது. 

  பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை இன்டெலிஜண்ட் ரெயின் சென்சிங் வைப்பர்கள், ரியர் பார்க்கிங் கேமரா, க்ரூஸ் கண்ட்ரோல், டூயல் ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., எலெக்டிராணிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், ஹில்-ஹோல்டு அசிஸ்ட் மற்றும் 3-பாயிண்ட் சீட் பெல்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.
  Next Story
  ×