என் மலர்

  நீங்கள் தேடியது "Skoda Scala"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்கோடா நிறுவனம் அறிமுகம் செய்த ஸ்கேலா ஹேட்ச்பாக் கார் சிறப்பம்சங்கள் மற்றும் முழு விவரங்களை பார்ப்போம். #skodascala  ஸ்கோடா நிறுவனம் ஹேட்ச்பேக் மாடலில் ‘ஸ்கேலா’ என்ற பெயரில் ஒரு புதிய காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் பிரபல மாடலான ரேபிட் கார் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது.

  புதிய கேபின், மைக்ரோ ஃபைபர் ஃபேப்ரிக்கால் ஆன இருக்கைகள், டேஷ்போர்டில் மென்மையான ஃபோம், தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 இன்ச் காக்பிட் டிஸ்ப்ளே ஆகியன இது சொகுசான வாகனம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

  5 பேர் சவுகரியமாக பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கார் 4,362 மி.மீ. நீளம் கொண்டது. இதன் சக்கரம் 2,649 மி.மீ. அகலம் கொண்டது. டிக்கியை திறக்கவும், மூடவும் ஆட்டோமேடிக் வசதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் டிக்கியின் இடவசதியும் அதிகமாக (467 லிட்டர்) வழங்கப்பட்டுள்ளது.

  சர்வதேச சந்தையைக் கருத்தில் கொண்டு நான்கு வகையான என்ஜினைக் கொண்டதாக இந்தக் காரை ஸ்கோடா நிறுவனம் உருவாக்கியுள்ளது. 1.0 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 99 ஹெச்.பி. திறன், 115 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. மற்றொரு ரகம் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 1.5 லிட்டர் அளவிலான இது 115 ஹெச்.பி. திறன் கொண்டது.  இது தவிர 1.6 லிட்டர் டீசல் என்ஜின் மாடலையும் இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. இவை அனைத்தும் 5 அல்லது 6 கியர்களைக் கொண்டவை. இது தவிர 7 கியர் கொண்ட மாடல் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் ரகமும் அடங்கும்.

  எஸ், எஸ்.இ. மற்றும் எஸ்.இ.எல். என மூன்று மாடல்களில் இவை வந்துள்ளன. அனைத்து மாடலிலும் டிரைவர் அசிஸ்ட் வசதி இடம்பெற்றுள்ளது. அதேபோல அவசரகால பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட் ஆகியனவும் அனைத்து மாடலிலும் இடம்பெற்றுள்ளன. அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ரியர் வியூ கேமரா, ஆட்டோமேடிக் பார்க் அசிஸ்ட் ஆகியன வாடிக்கையாளர் விருப்பத்தின் பேரில் தேர்வு செய்து கொள்ளலாம்.

  இது தவிர பிரீமியம் மாடலில் வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், கீலெஸ் என்ட்ரி (சாவி தேவைப்படாத வசதி), மொபைல் ஆப் உதவியோடு ரிமோட் டோர் அன்லாக்கிங் வசதியும் இடம்பெற்றுள்ளது.

  ஸ்கேலா என்பது லத்தீன் மொழி பெயர். இதற்கு தமிழில் ஏணி என்று அர்த்தம். இந்தக் கார் அறிமுகம் மூலம் முன்னோக்கி செல்வோம் என்ற நம்பிக்கையில் இப்பெயரை இந்நிறுவனம் சூட்டியுள்ளது.
  ×