search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Skin Problem"

    • உடற்பயிற்சி செய்த பிறகு ஒரு சில விஷயங்களை கவனமாக பின்பற்றுவது சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.
    • சூரிய கதிர்வீச்சுகளிடம் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு சன்ஸ்கிரீன் முக்கியமானது.

    உடல் எடையை குறைப்பதற்கும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கும் நிறைய பேர் உடற்பயிற்சியை நாடுகிறார்கள். உடற்பயிற்சி உடலுக்கு மட்டும் நன்மை சேர்ப்பதில்லை. உள் உறுப்புகளுக்கும், சருமத்திற்கும் நலம் பயக்கும். உடற்பயிற்சி செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். அதன் மூலம் ஆக்சிஜனை பரப்பி சருமத்தையும் வளப்படுத்தும். அதாவது உடற்பயிற்சியின் மூலம் சருமத்தின் தரத்தையும் மேம்படுத்தமுடியும். அதேவேளையில் உடற்பயிற்சி செய்த பிறகு ஒரு சில விஷயங்களை கவனமாக பின்பற்றுவது சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.

    உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது செய்து முடித்த பிறகோ கைகளை கொண்டு முகத்தை தொடக்கூடாது. குறிப்பாக உடற்பயிற்சி கருவிகளை பயன்படுத்தி பயிற்சி செய்யும்போது கைகளில் அழுக்குகள் படிந்திருக்கும். அந்த கைகளால் முகத்தை தொடும்போது சருமத்தில் பாக்டீரியாக்கள் பரவுவதற்கு அடிகோலிடும். ஜிம் கருவிகளில் இருக்கும் பாக்டீரியாக்கள் முகத்தில் படர்ந்தால் முகப்பருக்கள் எளிதாக தோன்றிவிடும். அதனால் எப்போதும் டவல் வைத்துக்கொள்ளுங்கள். வியர்வை வழியும்போது கைகளால் துடைப்பதற்கு பதிலாக டவலை பயன்படுத்துங்கள்.

    சரும பராமரிப்பில் முக்கியமான அம்சம், முகத்தை சுத்தப்படுத்துவதாகும். வியர்வை, அழுக்கு, தூசு, இறந்த சரும செல்கள், பாக்டீரியாக்கள் போன்றவை சருமத்திற்கு தொல்லை தருபவை. இத்தகைய பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு சருமத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அடிக்கடி முகத்தை கழுவி வரலாம். சருமத்தின் தன்மையை பொறுத்து ஆயில் மற்றும் ஜெல் அடிப்படையிலான கிளீனர்களை பயன்படுத்தலாம். வியர்வை, சூரிய ஒளிக்கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு ஆயில் அடிப்படையிலான கிளீன்சர்களை பயன்படுத்தலாம். சாலிசிலிக் அமிலம் கொண்ட ஜெல் அடிப்படையிலான கிளீன்சர், பாக்டீரியாக்களை அகற்றவும், சரும துளைகளை சுத்தம் செய்யவும் உதவும்.

    சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ள உதவும் சிறந்த நண்பனாக மாய்ஸ்சுரைசர் விளங்குகிறது. சருமத்தை அமைதியாக உணர வைப்பதற்கான திறவுகோலாகவும் அமைந்திருக்கிறது. உடற்பயிற்சி செய்த பிறகு சருமத்தில் உண்டாகும் அரிப்பு, சிவத்தல் போன்ற பிரச்சினைகளை குறைக்கவும் உதவுகிறது. மாய்ஸ்சுரைசர்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது என்பதால் கடுமையான உடற்பயிற்சிக்கு பிறகு தாராளமாக உபயோகிக்கலாம். சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்வதும், உடற்பயிற்சியின்போது வெளியேறும் வியர் வையை ஈடு செய்ய நீர்ச்சத்தை பராமரிப்பதும் முக்கியம்.

    சூரிய கதிர்வீச்சுகளிடம் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு சன்ஸ்கிரீன் முக்கியமானது. சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் தோல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கலாம். சரும வீக்கம், சிவத்தல் போன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். சுருக்கங்கள், வயதான தோற்ற அறிகுறிகளில் இருந்தும் சருமத்தை பாதுகாக்கலாம். கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்ட பிறகு சருமத்திற்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படும். கடுமையான புற ஊதாக்கதிர்வீச்சுகளிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க எஸ்.பி.எப். தன்மை கொண்ட பொருத்தமான சன்ஸ்கிரீனை தேர்வு செய்வது முக்கியம்.

    தண்ணீர் பருகுவது தாகத்தை மட்டும் தணிக்க உதவுவதில்லை. உடலை சுத்தப்படுத்தும். மூளையின் செயல்பாட்டை துரிதப்படுத்தும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தண்ணீர் குடிக்கும்போது உடல் மட்டுமல்ல சருமமும் பயனடைகிறது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும், உடலில் நீர்ச்சத்தை பேணுவதும் சருமத்தை மிருதுவாக வைத்திருக்க உதவும். உடற்பயிற்சியின்போது வியர்வை மூலம் வெளியேறும் நீர்ச்சத்தை ஈடு செய்வது அவசியம். அதனால் உடற்பயிற்சி செய்தபிறகு குறைந்தபட்சம் ஒரு டம்ளர் தண்ணீராவது பருகுவது அவசியமானது.

    • கோடை காலத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியமானது.
    • சன்ஸ்கிரீன் உபயோகப்படுத்துவது சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்.

    வெளி இடங்களுக்கு செல்லும்போது சன்ஸ்கிரீன் உபயோகப்படுத்துவது சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும். சூரிய கதிர்வீச்சுகளிடம் இருந்து செல்களை சேதம் அடையாமல் காக்கும். கோடை காலத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியமானது. வெளியே செல்லும்போது தான் அதனை பயன்படுத்த வேண்டும் என்றில்லை. வீட்டிற்குள் இருக்கும்போதும் சன்ஸ்கிரீனை சருமத்திற்கு பூசி வரலாம். அதனை ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்கள்:

    நீல ஒளியில் இருந்து காக்கும்:

    ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், கணினிகள் மற்றும் டி.வி.கள் போன்ற எலெக்ட்ரிக் சாதனங்களின் டிஜிட்டல் திரைகள் நீல ஒளியை வெளியிடுகின்றன. அவை சருமத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. நீல ஒளி மூலம் உற்பத்தி செய்யப்படும் ப்ரீ ரேடிக்கல்கள் வயதாகும் செயல்முறையை விரைவுபடுத்தும். மெலனின் உற்பத்தியையும் ஊக்குவித்து சரும புள்ளிகளை விரைவாக வயதான தோற்றத்திற்கு வித்திடும்.

    நீல ஒளியின் வீரியம் சருமத்தை எளிதில் பாதிப்புக்குள்ளாக்குவதுதான் அதற்கு காரணம். அதனை தவிர்க்க தினமும் சன்ஸ்கிரீன் அணிவது நல்லது. குறிப்பாக டிஜிட்டல் திரை சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துபவர்கள் மறக்காமல் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்வது சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்.

    புற்றுநோயை தடுக்கும்:

    வீட்டுக்குள் இருக்கும் சமயங்களில் சூரிய கதிர்வீச்சுக்களால் தீங்கு ஏற்படாது என்று பலர் நினைக்கிறார்கள். அதனால் சன்ஸ்கிரீன் உபயோகிக்க தேவையில்லை என்று கருதுகிறார்கள். ஆனால் சூரியனால் உமிழப்படும் புற ஊதாக்கதிர்வீச்சுகளின் வீரியம் எல்லா இடங்களிலும் பரவி இருக்கும்.

    ஆரம்பத்தில் சருமத்திற்கு லேசான பாதிப்பை ஏற்படுத்தும். காலப்போக்கில் செல்கள் சேதமடைவதற்கு அதிக வாய்ப்புள்ளது. புற ஊதாக்கதிர்களால் சருமம் பாதிப்புக்குள்ளாகுவதை கவனிக்காவிட்டால் சரும புற்றுநோய் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.

    சருமத்தை பாதுகாக்கும்:

    சருமத்துக்கு ஈரப்பதமூட்டும் பொருட்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களில் சேர்க்கப்படும் சன்ஸ்கிரீன் மூலக்கூறுகள் கொண்ட அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவது சிறப்பானது. நவீன சன்ஸ்கிரீன்கள் சருமத்திற்கு ஊட்டமளிக்கும் கூறுகளை கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அவற்றை பயன்படுத்தியும் சருமத்தை பாதுகாக்கலாம்.

    வயது முதிர்ச்சியை தடுக்கும்:

    சருமம் விரைவில் முதிர்ச்சி அடைவதற்கான அறிகுறிகள் எட்டிப்பார்ப்பதை தவிர்ப்பதில் சன்ஸ்கிரீனுக்கு முக்கிய பங்கு உண்டு. சன்ஸ்கிரீனிலும் எஸ்.பி.எப். 30-க்கும் அதிகமாக இருக்கும் கிரீமை பயன்படுத்துவது சருமத்திற்கு இதமளிக்கும்.

    சன்ஸ்கிரீனை அறவே தவிர்ப்பது, மற்ற சரும பொருட்களின் செயல்திறனைக் குறைப்பதுடன், சூரிய ஒளி அதிகம்படும் பகுதியில் செல்லும்போது சருமத்துக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

    • ஆரஞ்சு தோலில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்திற்கு உடனடியான மினுமினுப்பைத் தரக்கூடியது.
    • மாசு, வெயிலால் ஏற்படும் கருமையை இயற்கை பொருட்களைக்கொண்டு நீக்கும் முறையே ‘பிளீச்சிங்’.

    அதிகப்படியான வெயில், மாசு போன்றவற்றால் சருமம் கருத்து பொலிவு இழந்து போகும். இந்தக் கருமையை, சில பொருட்களைக்கொண்டு நீக்கும் பராமரிப்பு முறையே 'பிளீச்சிங்' எனப்படுகிறது. எந்த விதமான ரசாயனமும் பயன்படுத்தாமல், எளிதாக கிடைக்கும் இயற்கையானப் பொருட்களைப் பயன்படுத்தி கருமையை நீக்கி, சரும நிறத்தை பழையபடி கொண்டு வர முடியும். அதைப்பற்றி பார்க்கலாம்.

    கடலை மாவு பிளீச்

    கடலை மாவு - 2 தேக்கரண்டி

    கோதுமை மாவு - 1 தேக்கரண்டி

    தயிர் - 2 தேக்கரண்டி

    பாதாம் - 5

    எலுமிச்சம் பழச்சாறு - 2 தேக்கரண்டி

    சிறிய பாத்திரத்தில் கடலை மாவு, கோதுமை மாவு, பொடியாக்கப்பட்ட பாதாம், தயிர், எலுமிச்சம் பழச்சாறு இவை அனைத்தையும் கலந்து 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். சிறிது பஞ்சை காய்ச்சாத பாலில் நனைத்து முகம் முழுவதும் சுத்தப்படுத்தவும். பின்பு ஊறவைத்த கடலை மாவு கலவையை பூசி மென்மையாக மசாஜ் செய்து, 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். வாரம் 3 முறை இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளபளப்பாக இருக்கும்.

    புளி

    ரசாயனக் கலவை கலந்த பிளீச்சிங் பொருட்களுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக புளி இருக்கிறது. இது சருமத்துக்கு உடனடியான பொலிவைத் தரக்கூடியது.

    புளி - ஒரு எலுமிச்சை அளவு

    மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி

    அரிசி மாவு - 1 தேக்கரண்டி

    தேன் - 1 தேக்கரண்டி

    எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி

    ரோஜா பன்னீர், தண்ணீர் - தேவையான அளவு

    வெந்நீரில் புளியை ஊறவைத்து அதன் சாற்றை கெட்டியாக பிழிந்தெடுத்துக்கொள்ளவும். பிழிந்த சாறில் அரிசி மாவு, மஞ்சள் தூள், எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தேன் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். முகத்தை ரோஜா பன்னீர் கொண்டு நன்றாகத் துடைத்த பின்பு, புளி கலவையை முகம் முழுவதும் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்யலாம்.

    ஆரஞ்சு தோல்

    ஆரஞ்சு தோலில் உள்ள 'வைட்டமின் சி' சருமத்தில் உள்ள கரும்புள்ளி, சீரற்ற நிறத்தை நீக்கி பொலிவுடன் வைக்க உதவுகிறது. மேலும் இதிலுள்ள சிட்ரிக் அமிலம் சருமத்திற்கு உடனடியான மினுமினுப்பைத் தரக்கூடியது.

    ஆரஞ்சு தோல் பொடி - 2 தேக்கரண்டி

    வால்நட் பொடி - 1 தேக்கரண்டி

    சந்தனத் தூள் - 1 தேக்கரண்டி

    வெள்ளரிச் சாறு - 5 தேக்கரண்டி

    சிறிய பாத்திரத்தில் ஆரஞ்சு தோல் பொடி, வால்நட் பொடி, சந்தனத் தூள் மற்றும் வெள்ளரிச் சாறு என அனைத்தையும் நன்றாகக் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். முகத்தை வெள்ளரிச் சாறு கொண்டு துடைத்த பின்பு, ஆரஞ்சு தோல் பிளீச்சிங் கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். இவ்வாறு வாரம் இரண்டு முறை ஆரஞ்சு தோல் பிளீச்சிங் செய்யலாம்.

    • அழகுசாதனப் பொருட்களில் முக்கியமாக சேர்க்கப்படுவது 'கோகோ பட்டர்'.
    • கோகோ பட்டர் சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாத்து அதை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகின்றன.

    சருமப் பராமரிப்புக்கான கிரீம்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களில் முக்கியமாக சேர்க்கப்படுவது 'கோகோ பட்டர்'. கோகோ விதைகளில் இருந்து எடுக்கப்படும் கொழுப்பு நிறைந்த மஞ்சள் நிறப் பொருளே 'கோகோ பட்டர்' என அழைக்கப்படுகிறது. இதில் நன்மை தரும் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ ஆகிய சத்துக்கள் அதிகமாக உள்ளன. பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மெக்னீசியம், இரும்பு, காப்பர் மற்றும் பல தாதுப்பொருட்கள் நிறைந்துள்ளன. இதைப் பற்றிய மேலும் பல தகவல்கள் இதோ…

    கோகோ பட்டரில் உள்ள கொழுப்பு அமிலங்கள், சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாத்து அதை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகின்றன. சருமத்துக்குத் தேவையான ஊட்டச்சத்தை அளித்து அதன் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கின்றன. இதில் இருக்கும் 'பைட்டோ கெமிக்கல்கள்' எனப்படும் இயற்கை தாவர மூலக்கூறுகள், சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களிடம் இருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன.

    எக்ஸிமா மற்றும் தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கோகோ பட்டரை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் கிரீம்களை உபயோகப்படுத்தினால் எளிதாக குணம் அடையலாம். சருமத்தின் மீது கோகோ பட்டரை நேரடியாகப் பயன்படுத்தும்போது, சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாறும்.

    கோகோ பட்டரில் ஒலிக், பால்மிடிக், லினோலிக் மற்றும் ஸ்டீரிக் அமிலங்கள் உள்ளன. இவை சேதமடைந்த செல்களை சருமத்தில் இருந்து நீக்கி, புதிய சரும அடுக்குகளை உருவாக்குகின்றன.

    சருமத்தில் உள்ள வடுக்கள், தழும்புகள் போன்றவற்றை மென்மையாக்கி மறைக்கும் தன்மை கோகோ பட்டரில் உள்ள மூலக்கூறுகளுக்கு உண்டு. கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்கு பின்பும், பெண்கள் கோகோ பட்டரை உபயோகப்படுத்தினால் ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வராமல் தடுக்கலாம்.

    கோகோ பட்டர் ஸ்கிரப்

    தேவையான பொருட்கள்:

    கோகோ பட்டர் - 1 டேபிள் ஸ்பூன்

    தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்

    லவங்கப்பட்டை பொடி - 1 டீஸ்பூன்

    செய்முறை: கோகோ பட்டர் மற்றும் தேங்காய் எண்ணெய்யை மிதமான சூட்டில் உருக்கவும். பின்பு அதில் சர்க்கரை மற்றும் லவங்கப்பட்டை பொடியை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை காற்று புகாத கண்ணாடி ஜாடியில் சேமித்து பயன்படுத்தவும்.

    பயன்படுத்தும் முறை: வெதுவெதுப்பான தண்ணீரில் சருமத்தை கழுவ வும். பின்னர் இந்த ஸ்கிரப்பை சருமத்தின் மீது வட்ட இயக்கத்தில் பூசவும். ஸ்கிரப் செய்தபடியே மென்மையாக மசாஜ் செய்யவும். பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் சருமத்தை சுத்தம் செய்து மென்மையான துண்டால் துடைக்கவும். கோகோ பட்டருடன், ஷியா பட்டர், தேன் மெழுகு, வைட்டமின் ஈ எண்ணெய் ஆகியவற்றை கலந்து மாய்ஸ்சுரைசராகவும் உபயோகிக்கலாம்.

    • முன்பெல்லாம் 40 வயதைக் கடந்தவர்களுக்கு தான் சருமத்தில் கருந்திட்டு பிரச்சினை ஏற்படும்.
    • இப்போது 20 வயதிலேயே பலர் பாதிக்கப்படுகிறார்கள்.

    பெண்களின் அழகை பாதிக்கும் சரும பிரச்சினைகளில் ஒன்று பிக்மென்டேஷன். இதை 'கருந்திட்டு' அல்லது 'மங்கு' என்றும் கூறுவார்கள். இது கன்னம், நெற்றி, மூக்கின் மேல் பகுதி, கழுத்தின் பின் பகுதியில் காணப்படும் ஒரு வகையான கருப்பு நிற படையாகும். தோலின் நிறத்தைப் பொறுத்து இதன் அடர்த்தி வேறுபடும். பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன? என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.

    பிக்மென்டேஷன் ஏற்பட காரணம் என்ன?

    முன்பெல்லாம் 40 வயதைக் கடந்தவர்களுக்கு தான் சருமத்தில் கருந்திட்டு பிரச்சினை ஏற்படும். ஆனால் இப்போது 20 வயதிலேயே பலர் பாதிக்கப்படுகிறார்கள். கழிவுகள் மற்றும் நச்சுப்பொருட்கள் உடலில் இருந்து சரியாக வெளியேறாமல் இருப்பது, ஊட்டச்சத்து பற்றாக்குறை, சருமத்தில் படியும் இறந்த செல்களை அவ்வப்போது நீக்காமல் இருப்பது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பல காரணங்களால் பிக்மென்டேஷன் பிரச்சினை ஏற்படுகிறது.

    ஹார்மோன் சமநிலையில் மாற்றம் ஏற்படுவதாலும் முகத்தில் ஆங்காங்கே கருந்திட்டு மற்றும் சிவப்பு நிற புள்ளி வருகிறது.

    குழந்தைப்பேறுக்கும், பிக்மென்டேஷனுக்கும் சம்பந்தம் உண்டா?

    குழந்தைப்பேறின்போது அதிக ரத்த இழப்பு உண்டாகும். பால் ஊட்டும்போது உடலில் சத்து குறைபாடு ஏற்படும். இதனால்தான், கர்ப்ப காலத்திலும், குழந்தை பெற்ற பிறகும், தாய் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சமச்சீரான உணவுகளை சாப்பிடவேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு, தாயின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம், சத்துக்குறைபாடு போன்ற காரணங்களால் பிக்மென்டேஷன் பிரச்சினை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரித்தால், இந்தப் பிரச்சினை ஏற்படாது. காலநிலை மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தாலும் பிக்மென்டேஷன் பிரச்சினை வரலாம். இதற்கு வெளிப்பூச்சு கிரீம்கள் தீர்வு தராது.

    எத்தகைய உணவுகள் பிக்மென்டேஷனை தடுக்கும்?

    கடல் உணவுகளான மீன், இறால், நண்டு, மீன் எண்ணெய் போன்றவையும், பாதாம், பூசணி விதை, ஆளி விதை, நெல்லிக்காய், வில்வ இலை, திரிபலா சூரணம், கருஞ்சீரகம், சோற்றுக் கற்றாழை ஆகியவையும் பிக்மென்டேஷனைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை.

    பிக்மென்டேஷன் பிரச்சினைக்கு தீர்வு என்ன?

    சமச்சீரான உணவு, நேரம் தவறாத தூக்கம், போதுமான தண்ணீர், உடற்பயிற்சி, அமைதியான மனநிலை போன்றவை பிக்மென்டேஷன் பிரச்சினைக்கு தீர்வாகும். மருத்துவரின் ஆலோசனைப்படி தகுந்த மருந்துகளை சாப்பிட்டு உடலில் தங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றுதல், தோலில் ஏற்பட்டுள்ள பாதிப்பை பொறுத்து சிகிச்சை பெறுதல் போன்றவையும் பிக்மென்டேஷன் பிரச்சினையை குணமாக்கும். குப்பைமேனி இலை, வேப்ப இலை, அருகம்புல் ஆகியவற்றை சம அளவு எடுத்து பசை போல அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் பிக்மென்டேஷன் குணமாகும்.

    • துளசியில் அதிக நன்மைகள் உண்டு என்று அனைவருக்கும் தெரியும்.
    • வயதாவதை தள்ளிபோடும் குணம் துளசியில் உள்ளது.

    துளசியில் அதிக நன்மைகள் உண்டு என்று அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் நமது சருமத்தை பொலிவாக்கவும் இது உதவுகிறது.

    துளசி சருமத்திற்கு மிகவும் நல்லது. இந்நிலையில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே, மான்கனீஸ், காப்பர், கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், ஓமேக் 3 பேட்டி ஆசிட் இதில் இருக்கிறது.

    வயதாவதை தள்ளிபோடும் குணம் துளசியில் உள்ளது. இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட் உள்ளதால், வயதாவதை தள்ளிப்போடும்.மேலும் நமது சருமத்தை பாதிக்காமல் பார்த்துக்கொள்கிறது. தோல் சிவப்பாவதும், எரிச்சலும், தோல் சுருக்கத்தையும் குறைக்க துளசி உதவும்.

    பங்கஸ் ( fungs) தொற்று மற்றும் பாக்ட்ரீயா ஆகியவற்றிற்கு எதிரான பண்புகளை துளசி வழங்குகிறது. முகப்பருக்களுக்கு காரணமான கிருமிகளை, இது பரவாமல் தடுக்கும். நமது முகத்தில் உள்ள துளைகள் அடைபடும்போது முகப்பரு ஏற்படும் . இந்நிலையில் இதை தடுப்பதால், முகப்பரு ஏற்படாது.

    இந்நிலையில் துளசி, வேப்ப மரத்தின் இலைகள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து, அத்துடன் தேன் கலந்து நமது முகத்திற்கு பயன்படுத்தினால், இது முகப்பரு வராமல் தடுக்கும்.

    வெயிலில் வெளியே சென்றால் சருமம் கருத்துவிடும். இந்நிலையில் துளசியில் வைட்டமின் சி இருக்கிறது. இந்த வைட்டமின் சி, சருமம் இழந்த நிறத்தை மீண்டும் பெற உதவும். இதுபோல கரும் புள்ளிகளை சரியாக்க துளசியை பயன்படுத்தலாம்.

    துளசி பொடி, எலுமிச்சை சாறு, தேன் ஆகியவற்றை கலந்து சருமத்தில் பயன்படுத்தினால், சருமம் மிருதுவாக மாறும்.

    நீரின்றி வறண்டுபோன சருமத்தை, மிருதுவாகவும், பொலிவாகவும் மாற்றும். துளசியில் இயற்கையான எண்ணெய் இருப்பதால், நமது சருமத்தின் தண்ணீர் பதத்தை இழக்காமல் பாதுகாக்கும்.

    இந்நிலையில் சுற்றுப்புற சூழலில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். துளசி இலைகளை நன்றாக கழுவி, தயிர் அல்லது யோகர்டில் சேர்த்து பயன்படுத்தலாம். இது சருமத்தை சுத்திகரிக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • முகத்திலுள்ள இறந்த செல்களை முற்றிலும் அகற்றுகிறது.
    • சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறும்.

    தக்காளிச்சாறு முக அழகிற்கு ஏராளமான நன்மைகளைத் தருகின்றது. தக்காளிச்சாறு சருமத்தின் PH சமநிலையை பராமரித்து முகத்தில் பருக்கள் உருவாவதைத் தடுக்கிறது.மேலும் முகத்திலுள்ள இறந்த செல்களை முற்றிலும் அகற்றுகிறது.இதனால் முக அழகு தெளிவடைகிறது. சருமத் துளைகளையும் சுருக்கி, தூசிகள் மற்றும் அழுக்குகள் உட்புகாதவாறு தடுக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை கொண்ட தக்காளி சாறு, சருமத்தின் செல்களை புதுப்பித்து பொலிவடையச் செய்கிறது. தக்காளி சாறு முகத்திற்கு பிளீச்சிங் போல் செயல்பட்டு, பளபளப்பை அளிக்கிறது. கரும்புள்ளிகளை நீக்குகிறது.

    முகப்பரு பருக்களால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் தக்காளியை பயன்படுத்தினால் முகப்பரு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இதற்கு தக்காளியிலுள்ள விட்டமின் ஏ மற்றும் சி தான் காரணம். சருமத்துளைகள் சுருங்கும் சிலருக்கு முகத்தில் மேடு பள்ளங்கள் அதிகம் இருக்கும்.

    தயிர் மற்றும் தக்காளி சாறு இரண்டையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவ, தழும்புகள் மறைந்து சருமம் பிரகாசமாக மின்னும்.

    தேனில் தக்காளித் துண்டை நனைத்து, முகத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும். பருக்களால் ஏற்படும் தோல் சிவந்து போவதையும் இது குறைக்கிறது.

    கிளிசரின் உடன் தக்காளி சாற்றை கலந்து கைகளுக்கு தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் இறந்த செல்களை நீக்கி பளபளக்கச் செய்யும்.

    அதிக நேரம் வெயிலில் சுற்றி முகம் கருமையடைந்து இருப்பின், தினமும் இரவில் படுக்கும் முன் தக்காளி துண்டுகளால் முகத்தை தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். கருமை விரைவில் அகன்றுவிடும்.

    முகப்பொலிவை அதிகரிக்க தக்காளியை துண்டாக்கி தேனில் நனைத்து, முகத்தில் தேய்த்து விடுங்கள். பின் 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவுங்கள். இதனால் முகம் பொலிவுடன் காணப்படும்.

    முகத்தில் எண்ணெய் அதிகம் வழிந்தால், அதனைத் தவிர்க்க தக்காளியை தினமும் முகத்தில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் முகத்தில் உள்ள எண்ணெய்பசை அகன்றுவிடும்.

    தினமும் முகத்தைக் கழுவும் போது சோப்பைப் பயன்படுத்தாமல், 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் உடன், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறும்.

    தக்காளியைக் கொண்டு ஃபேஸ் பேக் போட நினைத்தால், தக்காளி சாற்றுடன், சிறிது தயிர், தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இந்த ஃபேஸ் பேக்கை (Face pack) வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், முகத்தில் அழகு ஜொலிக்கும்.

    • சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை இயற்கையாக குணமாக்கும் தன்மை தேனில் உள்ளது.
    • தேனில் இயற்கையாகவே ஈரப்பதம் அளிக்கும் மூலப்பொருட்கள் அதிகம் உள்ளது.

    தவறான உணவு பழக்கம்,அதிக காற்று மாசு, இரவு நேரத்தில் தாமதமாக உறங்குதல், அதிக கெமிக்கல் கொண்ட கிரீம்களை பயன்படுத்துதல் இப்படிபட்ட வாழ்க்கை முறை மாற்றத்தால் முகத்தின் ஆரோக்கியம் கெட்டு பல வித பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள், கரு வளையங்கள், தழும்புகள் ஆகியவை உண்டாகுகின்றன. இது போன்ற பாதிப்புகள் அனைத்தையும் எளிதில் குணமாக்க ஆயுர்வேத மருத்துவ குணம்கொண்ட தேன் உதவுகிறது என அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை இயற்கையாக குணமாக்கும் தன்மை தேனில் உள்ளது. இதில் உள்ள என்சைம்கள், தாவரங்களின் மூலப்பொருட்கள் மற்றும் இதிலுள்ள நல்ல பாக்டீரியா ஆகியவை ஒன்று சேர்ந்து உங்களுக்கு சிறந்த முக அழகை தரும். தூய்மையான, பதப்படுத்தப்படாத தேன் உங்கள் முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகளை நீக்கி பளபளப்பான சரும அழகை உண்டாக்கும். மேலும் இதன் இயற்கை தன்மை தோல் நோய்கள் மற்றும் அரிப்புகள் வராமல் தடுத்து உங்களை எப்போதும் இளமையாக வைக்கும்.

    தேனில் இயற்கையாகவே ஈரப்பதம் அளிக்கும் மூலப்பொருட்கள் அதிகம் உள்ளது. எனவே முகத்திற்கு தேனை பயன்படுத்தினால் மிக விரைவிலே மங்கலான உங்கள் முக அழகு பொலிவாக மாறிவிடும். சிறிது எலுமிச்சை சாற்றுடன் தேனை கலந்து முகத்தில் தடவி வருவதால் கரும்புள்ளிகளை எளிதில் விரட்டலாம். அத்துடன் உங்கள் சருமத்தின் நிறத்தை கூட்டும், முகத்தை மென்மையாக்கும், முகத்தின் நிறத்தை பளபளப்பாக்கும், என்றென்றும் இளமையான தோற்றத்தை தரும். தேனில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைட் முகத்தில் உள்ள தழும்புகளை மறைய வைக்க உதவும் என அழகியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

    இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் அதிகமான பருக்களால் அவதிப்பட்டு வருகின்றனர். பருக்கள் உருவாகி மறைந்து விடாமல், அந்த இடத்தில் பெரிய தழும்புகளையும் உருவாக்கி விடுகிறது. பருக்களையும் அதனால் ஏற்படும் தழும்புகளையும் மிக சுலபமாக நீக்க சிறிது நெய்யுடன் தேன் கலந்து தடவி வாருங்கள். இப்படி செய்வதால் முகத்தில் உள்ள புண்கள், வீக்கம், வடுக்கள் போன்றவை எளிதில் குணமாகும்.

    கடைகளில் விற்கும் பதப்படுத்தட்ட தேனை முகத்திற்கு பயன்படுத்த கூடாது. காரணம், கடைகளில் விற்கப்படும் தேனை முழுவதுமாக சூடு படுத்துகின்றனர். எனவே அதில் உள்ள இயற்கை பாக்டீரியா, என்சைம்கள் குறைந்து விடுகிறது. எனவே சரும பாதுகாப்பிற்கு சுத்தமான, பதப்படுத்தபடாத தேனை பயன்படுத்த வேண்டும்.

    • பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு கழுத்தை சுற்றி கருமை நிறம் படர்ந்து இருப்பதை காணலாம்.
    • இந்த பிரச்சினையை மிக எளிமையாக வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே போக்கி விடலாம்.

    பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு கழுத்தை சுற்றி கருமை நிறம் படர்ந்து காணப்படுவதை கண்கூடாகப் பார்க்க முடியும். நகைகள் அணிவது, உடல் சூடு, அலர்ஜி இவையே இதற்கான அடிப்படைக் காரணங்கள். இந்த பிரச்சினையை மிக எளிமையாக வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே போக்கி விடலாம்.

    உருளைக்கிழங்கை தோல் சீவி சிறுசிறு துண்டுகளாக அரிந்து அரைத்து, சாறு எடுத்து, கழுத்தை சுற்றி தேய்த்து வர நாளடைவில் கருமை மறைந்து தோலின் உண்மையான நிறம் தெரியத் தொடங்கும்.

    இதேபோல் பாதி எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், கழுத்தில் உள்ள கருமை அகலும்.

    வெள்ளரிக்காய் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும். எனவே வெள்ளரிக்காய் சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.

    பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் - இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.

    முட்டைக்கோஸை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம்.

    இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.

    கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு - இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.

    கழுத்து கருமையை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து நிறம் படிப்படியாக மாறுவதை காணலாம்.

    • லேசர் சிகிச்சை என்பது என்னவென்று பலருக்கு தெரியவில்லை.
    • நமது வாழ்க்கை முறையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

    நமது தினசரி உணவு பழக்க வழக்கம், வாழ்க்கை முறை, நவீன தொழில்நுட்பங்கள் முதலியவை பலவிதமான தீமைகளை விளைவிக்கின்றது. இன்று பெரும்பாலான பெண்களின் முகம் மற்றும் சருமத்தில் அதிக முடிவளர்ச்சியோடு காணப்படுவதால், சமுதாயத்தில் தன்னம்பிக்கையை அவர்கள் இழந்து தங்களது சுயதிறமைகளை வெளியுலகத்திற்கு வெளிப்படுத்த இயலாமல் பின்னிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இத்தகைய முடிவளர்ச்சி ஹார்மோன் ஏற்றத்தாழ்வினால் தேவையற்ற முடிவளர்ச்சி பெண்களுக்கு ஏற்படுகிறது. இதனை தடுக்கலாமா?, குறைக்கலாமா? என்று சந்தேகமும், அச்சமும் பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆம்! நிச்சயமாக இதிலிருந்து ஒரு விடுதலை பெறமுடியும். டயோட் லேசர் சிகிச்சை எனப்படும் நவீன தொழில்நுட்பம் வாயிலாக தேவையற்ற முடியை அகற்ற முடியும்.

    லேசர் சிகிச்சை என்பது என்னவென்று பலருக்கு தெரியவில்லை. இந்த லேசர் கதிர் என்பது சருமத்தில் உள்ள மெலானின் எனப்படும் குறிப்பிட்ட க்ரோமாபோரிளை தாக்கி அதனை செயலிழக்க செய்கிறது. இதனால் முடிவளர்ச்சி மற்றும் புதிய முடி வளர்வதில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் சாதாரண திசுக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

    இதனை எத்தனை அமர்வுகளில் சரி செய்யலாம் என பலருக்கு சந்தேகங்கள் இருக்கலாம். அது ஒவ்வொருவருக்கும் முடியின் தடிமனை பொருத்து வேறுபடலாம். சிலருக்கு 6 அமர்வுகளும், சிலருக்கு அதற்கு மேலும் மாறுபடலாம். சிகிச்சையின் நிறைவில் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு நம் முடி வளர்ச்சியை கட்டுப்படுத்த நிச்சயமாக இயலும்.

    அதே சமயம் நமது ஹார்மோன் குறைபாடுகளை மருத்துவ நிபுணர்களை அணுகி சிகிச்சை பெற்று சீராக கொண்டு செல்வது மிக இன்றியமையாதது. நமது வாழ்க்கை முறையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். அதுவே உடல் நலத்திற்கு சிறந்தது என ஜெருஷ் மருத்துவமனை டாக்டர் பிளாட்பின் தெரிவித்தார்.

    டாக்டர் பிளாட்பின், பெனிலா பிளாட்பின்

    • குளிர்காலத்தில் இந்த அரிப்பு உடலில் பல பகுதிகளில் பரவுகிறது.
    • தோளில் தடுப்புகள் மற்றும் முகப்பரு போன்ற சிறிய சிவப்பு புடைப்புகளை ஏற்படுத்தும்.

    சருமத்தில் உள்ளநீர் மற்றும் இயற்கை எண்ணெய்களின் ஈரப்பதம் குறையும் போது அரிப்பு ஏற்படுகிறது. குளிர்ந்த வறண்ட காற்று மற்றும் வெப்பமாக்கல் போன்றவை சருமத்தின் ஈரப்பதம் குறைய முக்கிய காரணமாகும்.

    பிற சுற்றுச்சூழல் காரணிகள், வாழ்க்கை முறை காரணிகள் மற்றும் சில மருத்துவ நிலைமைகள் ஆகியவற்றாலும் வறண்ட சருமத்தை உண்டாக்கி சருமத்தில் தடிப்புகளை ஏற்படுத்தும்.

    தோல் அலர்ஜி:

    வறண்ட தோல் ஆனது உலர்ந்த அரிப்பு மற்றும் திட்டுகளை ஏற்படுத்தும். இது முறையற்ற செல் சுழற்சி (Inproper cell Turn over) அல்லது கடுமையான இரசாயனங்கள், ஒவ்வாமை அல்லது கிருமி தொற்று ஆகியவற்றால் ஏற்படலாம்.

    ரோசாசியா இது ஒரு பாக்டீரியா தொற்று ஆகும். இது தோளில் தடுப்புகள் மற்றும் முகப்பரு போன்ற சிறிய சிவப்பு புடைப்புகளை ஏற்படுத்தும்.

    குளிர் அர்டிகேரியா

    Cold Urticaria

    குளிர்ச்சியின் வெளிப்பாட்டிற்கு பிறகு சருமத்தில் வீக்கம், அரிப்பு மற்றும் புடைப்புகள் உண்டாக்குகின்றது. சிலருக்கு குளிர்ந்த நீரில் நீந்திய பிறகு ஏற்படுகிறது. மேலும் சிலருக்கு குளிர்ந்த காற்றால் உண்டாகலாம். இதனால் ஏற்படும் அரிக்கும் உணர்வானது தற்காலிகமானது. ஒன்று முதல் இரண்டு மணி நேரம் நீட்டிக்கும்.

    சொரியாசிஸ்:

    இது ஒரு தன்னுடல் எதிர்ப்பு சக்தியால் ஏற்படுவதாகும். (Auto Immuno Disease) தடி மனான சிவப்பு செதில் போன்ற சரும திட்டுகளை ஏற்படுத்தும். மேலும் சருமத்தில் வெடிப்பு, எரிச்சல் மற்றும் மூட்டுகளில் விரைப்பு ஆகிய வற்றையும் ஏற்படுத்தும்.

    Dermatitis / Eczema:

    குளிர்காலத்தில் இந்த அரிப்பு உடலில் பல பகுதிகளில் பரவுகிறது. குளிர்ந்த வெப்பநிலைக்கு அதிகம் வெளிப்படும் கைகள் மற்றும் கால்களில் அதிகம் பாதிக்கலாம். இது சருமத்தில் சிவப்பு, அரிப்பு, கரடு முரடான செதில் திட்டுகள் அல்லது கொப்புளங்கள் வீக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

    Wind burn / Winter itch

    குளிர்ந்த காற்றால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை குறைக்கும் குளிர்காற்றில் வெளியில் செல்ல நேரும் போது கையுறை மற்றும் துணிகளால் கைகளை மற்றும் வெளிப்படும் தோலை மூடும் போது இந்த பாதிப்புகளை குறைக்கலாம்.

    உலர்ந்த/வெடித்த உதடுகள்:

    குளிர்ந்த காலத்தில் பெரும்பான்மையானோர் எதிர் கொள்ளும் ஒரு பிரச்சனை உலர்ந்த மற்றும் வெடித்து ரத்தம் வரும் உதடுகள் ஆகும். Lip balms with SPF கொண்ட களிம்புகளை உபயோகிக்கும் போது இதனை குறைக்கலாம்.

    குளிர்காலத்தில் தோல் சிகிச்சையில் சருமத்தை மீண்டும் ஈரமாக்குவதிலும் எரிச்சலை தணிப்பதிலும் கவனம் செலுத்தவேண்டும். சருமத்துக்கு மாய்ஸ்ரைஸர்கள், எண்ணைகள் மற்றும் கிரீம்களை பயன்படுத்தலாம்.

    அதே நேரம் ரோசாசியா, சொரியாசிஸ், எக்ஸிமா, தெர்மோடைடுஸ் போன்ற சரும பாதிப்பை கொண்டவர்கள் தோல் மருத்துவரை அணுகுவது நல்லது.

    Dr. TAMILARASISHANMUGANATHANMBBS., MD (Derm), Aesthetic medicine (AAAM-USA) Consultant Dermatologist.

    • சிலருக்கு நெற்றியில் மட்டும் தழும்புகளும், நிற மாற்றமும் காணப்படுவதுண்டு.
    • இதை ஃபோர்ஹெட் டேனிங் என்று கூறுவார்கள்.

    சிலருக்கு உடலின் சில பாகங்களில் மட்டும் அல்லது முகத்தில் சில இடங்களில் மட்டும் நிறம் மாறுவதுண்டு. இது பார்ப்பதற்கு வித்தியாசமாக இருப்பதோடு முகப்பொலிவையும் கெடுத்து விடுகிறது. மேலும், பல இடங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது இது நமது தன்னம்பிக்கையையும் கெடுத்து விடுகிறது. முகத்தில் இப்படி நிறம் மாறும் பாகங்களில் நெற்றியும் ஒன்றாகும்.

    பல சமயங்களில் நமது கன்னங்களும் முகத்தின் பிற பாகங்களும் பொலிவாக இருக்க, நெற்றியில் மட்டும் தழும்புகளும், நிற மாற்றமும் காணப்படுவதுண்டு. இதை ஃபோர்ஹெட் டேனிங் என்று கூறுவார்கள். டேனிங் காரணமாக, முகம் மற்றும் நெற்றியின் நிறம் வித்தியாசமாக தெரிகிறது. சில வீட்டு வைத்தியங்கள் மூலம் நெற்றியில் உள்ள டேனை எளிதாக சுத்தம் செய்யலாம்.

    மஞ்சள்

    மஞ்சள் அதிக மருத்துவ குணம் கொண்டது. மஞ்சள் பல சரும பிரச்சனைகளை நீக்க பயன்படுகிறது. இதனை பயன்படுத்தினால் நெற்றியில் உள்ள கருமை நீங்கும். பச்சை பாலில் மஞ்சளை கலந்து தோல் பதனிடும் இடத்தில் தடவி சிறிது நேரம் விட்டு பின் தண்ணீரில் கழுவவும். டேனிங் பிரச்சனை நீங்கும்.

    வெள்ளரிக்காய்

    வெள்ளரிக்காயில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வெள்ளரிக்காயை உட்கொள்வதால் பல வித ஆரோக்கிய நன்மைகள் ஏற்படும். இதுமட்டுமின்றி, வெள்ளரிக்காய் அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரிக்காயைப் பயன்படுத்துவதன் மூலம், ஸ்கின் டேனிங் மற்றும் கருவளையம் போன்ற பிரச்சனைகள் நீங்கும். வெள்ளரிக்காய் துண்டுகளை சருமத்தின் நிறம் மாறிய இடத்தில் மசாஜ் செய்யவும். முகத்தை 30 நிமிடம் அப்படியே விட்டு பின்னர் தண்ணீரில் கழுவினால் தோல் சுத்தமாகும்.

    ×