search icon
என் மலர்tooltip icon

    அழகுக் குறிப்புகள்

    குளிர்காலத்தில் சரும பாதிப்புக்கு காரணமும்... பராமரிப்பும்...
    X

    குளிர்காலத்தில் சரும பாதிப்புக்கு காரணமும்... பராமரிப்பும்...

    • குளிர்காலத்தில் இந்த அரிப்பு உடலில் பல பகுதிகளில் பரவுகிறது.
    • தோளில் தடுப்புகள் மற்றும் முகப்பரு போன்ற சிறிய சிவப்பு புடைப்புகளை ஏற்படுத்தும்.

    சருமத்தில் உள்ளநீர் மற்றும் இயற்கை எண்ணெய்களின் ஈரப்பதம் குறையும் போது அரிப்பு ஏற்படுகிறது. குளிர்ந்த வறண்ட காற்று மற்றும் வெப்பமாக்கல் போன்றவை சருமத்தின் ஈரப்பதம் குறைய முக்கிய காரணமாகும்.

    பிற சுற்றுச்சூழல் காரணிகள், வாழ்க்கை முறை காரணிகள் மற்றும் சில மருத்துவ நிலைமைகள் ஆகியவற்றாலும் வறண்ட சருமத்தை உண்டாக்கி சருமத்தில் தடிப்புகளை ஏற்படுத்தும்.

    தோல் அலர்ஜி:

    வறண்ட தோல் ஆனது உலர்ந்த அரிப்பு மற்றும் திட்டுகளை ஏற்படுத்தும். இது முறையற்ற செல் சுழற்சி (Inproper cell Turn over) அல்லது கடுமையான இரசாயனங்கள், ஒவ்வாமை அல்லது கிருமி தொற்று ஆகியவற்றால் ஏற்படலாம்.

    ரோசாசியா இது ஒரு பாக்டீரியா தொற்று ஆகும். இது தோளில் தடுப்புகள் மற்றும் முகப்பரு போன்ற சிறிய சிவப்பு புடைப்புகளை ஏற்படுத்தும்.

    குளிர் அர்டிகேரியா

    Cold Urticaria

    குளிர்ச்சியின் வெளிப்பாட்டிற்கு பிறகு சருமத்தில் வீக்கம், அரிப்பு மற்றும் புடைப்புகள் உண்டாக்குகின்றது. சிலருக்கு குளிர்ந்த நீரில் நீந்திய பிறகு ஏற்படுகிறது. மேலும் சிலருக்கு குளிர்ந்த காற்றால் உண்டாகலாம். இதனால் ஏற்படும் அரிக்கும் உணர்வானது தற்காலிகமானது. ஒன்று முதல் இரண்டு மணி நேரம் நீட்டிக்கும்.

    சொரியாசிஸ்:

    இது ஒரு தன்னுடல் எதிர்ப்பு சக்தியால் ஏற்படுவதாகும். (Auto Immuno Disease) தடி மனான சிவப்பு செதில் போன்ற சரும திட்டுகளை ஏற்படுத்தும். மேலும் சருமத்தில் வெடிப்பு, எரிச்சல் மற்றும் மூட்டுகளில் விரைப்பு ஆகிய வற்றையும் ஏற்படுத்தும்.

    Dermatitis / Eczema:

    குளிர்காலத்தில் இந்த அரிப்பு உடலில் பல பகுதிகளில் பரவுகிறது. குளிர்ந்த வெப்பநிலைக்கு அதிகம் வெளிப்படும் கைகள் மற்றும் கால்களில் அதிகம் பாதிக்கலாம். இது சருமத்தில் சிவப்பு, அரிப்பு, கரடு முரடான செதில் திட்டுகள் அல்லது கொப்புளங்கள் வீக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

    Wind burn / Winter itch

    குளிர்ந்த காற்றால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை குறைக்கும் குளிர்காற்றில் வெளியில் செல்ல நேரும் போது கையுறை மற்றும் துணிகளால் கைகளை மற்றும் வெளிப்படும் தோலை மூடும் போது இந்த பாதிப்புகளை குறைக்கலாம்.

    உலர்ந்த/வெடித்த உதடுகள்:

    குளிர்ந்த காலத்தில் பெரும்பான்மையானோர் எதிர் கொள்ளும் ஒரு பிரச்சனை உலர்ந்த மற்றும் வெடித்து ரத்தம் வரும் உதடுகள் ஆகும். Lip balms with SPF கொண்ட களிம்புகளை உபயோகிக்கும் போது இதனை குறைக்கலாம்.

    குளிர்காலத்தில் தோல் சிகிச்சையில் சருமத்தை மீண்டும் ஈரமாக்குவதிலும் எரிச்சலை தணிப்பதிலும் கவனம் செலுத்தவேண்டும். சருமத்துக்கு மாய்ஸ்ரைஸர்கள், எண்ணைகள் மற்றும் கிரீம்களை பயன்படுத்தலாம்.

    அதே நேரம் ரோசாசியா, சொரியாசிஸ், எக்ஸிமா, தெர்மோடைடுஸ் போன்ற சரும பாதிப்பை கொண்டவர்கள் தோல் மருத்துவரை அணுகுவது நல்லது.

    Dr. TAMILARASISHANMUGANATHANMBBS., MD (Derm), Aesthetic medicine (AAAM-USA) Consultant Dermatologist.

    Next Story
    ×