search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SK12"

    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ‘சீமராஜா’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், தற்போது டப்பிங் பணிகள் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Seemaraja
    பொன்ராம் - சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘சீமராஜா’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், சமந்தா மற்றும் சூரியுடன் படத்தின் டப்பிங் பணிகள் முடிவுக்கு வந்ததாக இயக்குநர் பொன்ராம் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    கிராமப் பின்னணியில் காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். படத்தில் மிரட்டும் வில்லியாக சிம்ரனும், சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். 
    24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. #Seemaraja #Sivakarthikeyan #Samantha

    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ‘சீமராஜா’ படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைவதாக படக்குழு அறிவித்துள்ளது #Sivakarthikeyan #Seemaraja
    பொன்ராம் - சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘சீமராஜா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், இன்றுடன் படப்பிடிப்பு நிறைவு பெறுவதாக படக்குழு அறிவித்துள்ளது. 

    இதுகுறித்து படத் தயாரிப்பு நிறுவனமான 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது, 


    கிராமப் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். படத்தில் மிரட்டும் வில்லியாக சிம்ரனும், சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். 

    24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #Sivakarthikeyan #Seemaraja

    பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ‘சீமராஜா’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் நாளை துவங்க இருக்கிறது. #Sivakarthikeyan #Seemaraja
    சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் நடிப்பில் உருவாகும் படம் ‘சீமராஜா’. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் வளர்ந்த ‘சீமராஜா’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. வருகிற மே 24-ஆம் தேதி தலக்கோணத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்கி ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    இந்தநிலையில், படத்தின் டப்பிங் பணிகள் மே 15-ந் தேதி (நாளை) துவங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் நடிகை சிம்ரன் வில்லியாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், முக்கிய கதாபாத்திரத்தில் சூரியும் நடிக்கின்றனர்.

     

    24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தை செப்டம்பரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #Sivakarthikeyan #Seemaraja

    பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அந்த படத்திற்காக இதுவரை இல்லாத புதிய தோற்றத்தில் நடிக்கிறார். #Sivakarthikeyan #Seemaraja
    சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் நடிப்பில் உருவாகும் படம் ‘சீமராஜா’. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் வளர்ந்த ‘சீமராஜா’ படம் தமிழ் சினிமாவின் 48 நாட்கள் வேலை நிறுத்தம் காரணமாக இடையில் நின்றது. வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததால் மீண்டும் படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறது ‘சீமராஜா’ படக்குழு. மே 24-ஆம் தேதி தலக்கோணத்தில் படப்பிடிப்பை தொடரவிருக்கிறார்கள்.

    இந்த காட்சிகளுக்காக சிவகார்த்திகேயன் இதுவரை நடிக்காத புதிய தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்த தோற்றத்துக்காக தாடி வளர்த்து வருகிறார். ப்ளாஷ்பேக்கில் இடம்பெறவுள்ள இந்த தோற்றம் இன்னொரு கதாபாத்திரமாக இருக்கலாம் என்கிறார்கள். ஸ்டன்ட் இயக்குநர் அனல் அரசு சிவகார்த்திகேயன் பங்குபெறும் சண்டைக்காட்சியை படம் பிடிக்கவுள்ளார்.



    இதற்கிடையே இன்று படத்தின் இயக்குநர் பொன்ராமின் பிறந்தநாளை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். 

    அதன் பிறகு 10 நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இதற்காக பிரமாண்டமான செட் ஒன்று பின்னி மில்லில் போடப்பட்டு வருகிறது. மே 15-ந் தேதி டப்பிங் வேலையைத் தொடங்கி ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். #Sivakarthikeyan #Seemaraja

    ×