search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Schools Reopen"

    கேரளாவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8 வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் வகுப்புகளை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவியது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். கேரள மாநிலத்தில் பாதிப்பு மிக அதிக அளவில் இருந்தது. இதனால் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

    கொரோனாவை கட்டுப்படுத்த மாநில சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கொரோனா பரவல் குறைந்துள்ளது. இதையடுத்து கேரளாவில் கொரோனா பாதுகாப்பு விதிகளுடன் பள்ளிகள் திறக்க மாநில அரசு முடிவு செய்தது. பள்ளிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

    மேலும் மாணவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் அமர ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 1-ந்தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரையிலும், 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

    மாணவர்கள்

    ஆனால் 8,9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

    இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சகம் நடத்திய சர்வேயின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளையும் திறக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நாளை மறுநாள் (8-ந்தேதி) முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8 வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு வருகிற 15-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை மாநில கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.


    நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு வந்ததால் முதல் 15 நாட்களுக்கு கதை, பாடல், விளையாட்டு, ஓவியம் வரைந்து வர்ணம் தீட்டுதல், கலந்துரையாடல் போன்ற பல்வேறு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
    சென்னை:

    தமிழகத்தில் 19 மாதங்களுக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் முழுமையாக திறக்கப்பட்டன.

    சுமார் 1½ ஆண்டுகாலத்துக்கு பிறகு மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு வருகை தந்ததால் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டி மடுவங்கரையில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கூடத்துக்கு இன்று காலை நேரில் சென்றார்.

    அவரை பள்ளிக்கூட வாசலில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்றனர்.

    பள்ளிக்கு வந்திருந்த மாணவ- மாணவிகளுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இனிப்பு, பூங்கொத்து கொடுத்து, வாழ்த்து தெரிவித்து உற்சாகமாக வரவேற்றார்.

    பள்ளிக்கூடத்துக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்ததை பார்த்த மாணவ-மாணவிகள் அளவில்லா மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

    மு.க.ஸ்டாலினை பார்த்து “வணக்கம், முதல்-அமைச்சருக்கு எங்களது வணக்கம்” என்று மாணவ-மாணவிகள் இருகை கூப்பி வணங்கினார்கள். பதிலுக்கு மு.க.ஸ்டாலினும் மாணவ- மாணவிகளுக்கு வணக்கம் தெரிவித்தப்படியே வந்தார்.

    “நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கூடத்துக்கு நீங்கள் வருகை தந்துள்ளதால் உங்களை வரவேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று மாணவ-மாணவிகளுடன் முதல்-அமைச்சர் கலந்துரையாடினார்.

    மாணவ-மாணவிகளும் முதல்-அமைச்சரிடம் சகஜமாக பேசினார்கள். அப்போது மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்களையும் வழங்கினார். பள்ளிக்கூடத்தில் இருந்த ஒவ்வொரு வகுப்பறைக்கும் மு.க.ஸ்டாலின் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சுமார் 10 நிமிட நேரம் மாணவ-மாணவிகளுடன் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டு இருந்தார். அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    இதே போல் தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பள்ளிக்கூடங்களுக்கு நேரில் சென்று மாணவ- மாணவிகளுக்கு பிஸ்கெட் பாக்கெட், இனிப்புகள், பேனா, பென்சில், மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    அமைச்சர் மா. சுப்பிரமணியன்

    சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்று 1,650 மாணவ- மாணவிகளுக்கு இனிப்புகள், பேனா, பென்சில், மலர் கொத்துக்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். வகுப்பறையில் மாணவ- மாணவிகளுடன் அமர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துரையாடினார்.

    மாணவர்களின் மன சோர்வை போக்கும் விதமாக அவர்களுடன் சகஜமாக பேசினார்.

    இதே போல் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே வால்டாக்ஸ் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று அங்குள்ள மாணவ- மாணவிகளுக்கு இனிப்பு, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

    பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆவடி டி.எஸ்.பி. அலுவலகம் பின்புறம் உள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு சென்று மாணவ- மாணவிகளை வாழ்த்தி வரவேற்றார். அங்குள்ள காமராஜர் நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கும், அரசு உயர்நிலை பள்ளிக்கும் சென்று மலர் கொத்து, இனிப்புகள் கொடுத்து வரவேற்றார்.

    ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் குன்றத்தூரில் உள்ள கலப்பு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பூங்கொத்து, கடலைமிட்டாய், சீருடைகள் மற்றும் புத்தகங்கள் கொடுத்து இன்முகத்துடன் வரவேற்றார்.

    பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி பல்லாவரம் மறைமலை அடிகளார் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று மாணவ- மாணவிகளுக்கு இனிப்பு, பூங்கொத்து, பேனா, பென்சில் வழங்கி இன்முகத்துடன் வாழ்த்து தெரிவித்து வரவேற்றார்.

    தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா தாம்பரம் நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு சென்று மாணவ- மாணவிகளை வரவேற்றார்.

    செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் சிங்கபெருமாள் கோவில் ஆரம்ப பள்ளிக்கும், கூடுவாஞ்சேரி மற்றும் ஓட்டேரி அரசு பள்ளிக்கூடத்துக்கும் சென்று மாணவ- மாணவிகளை உற்சாகத்துடன் வரவேற்றார். அங்குள்ள மாணவ-மாணவிகளுக்கு இனிப்பு, மலர்கொத்து, பேனா, பென்சில்கள் வழங்கினார்.

    அம்பத்தூர் எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல் அத்திப்பட்டு வானகரம் ரோட்டில் உள்ள அம்பத்தூர் நகராட்சி ஆரம்ப பள்ளிக்கு சென்று மாணவ- மாணவிகளை வரவேற்று இனிப்புகள் வழங்கினார்.

    விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. ஏ.எம்.வி.பிரபாகராஜா கோயம்பேடு அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் விருகம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று மாணவ-மாணவிகளை வரவேற்றார். அங்குள்ள மாணவ-மாணவிகளுக்கு பிஸ்கெட் பாக்கெட், பேனா, பென்சில் வழங்கினார்.

    தியாகராயநகர் எம்.எல்.ஏ. ஜெ.கருணாநிதி கோடம்பாக்கம் ரெங்கராஜபுரம் மாநகராட்சி உயர்நிலை பள்ளிக்கு சென்று மாணவ- மாணவிகளை வரவேற்றார். மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்று மாணவ-மாணவிகளை வரவேற்றார்.

    இதேபோல் அந்தந்த தொகுதி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் பள்ளிக்கூடங்களுக்கு சென்று மாணவ- மாணவிகளை வரவேற்றனர்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு வந்ததால் முதல் 15 நாட்களுக்கு கதை, பாடல், விளையாட்டு, ஓவியம் வரைந்து வர்ணம் தீட்டுதல், கலந்துரையாடல் போன்ற பல்வேறு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    15 நாட்களுக்கு முக்கியமான கருத்துக்களை உள்ளடக்கிய புத்தாக்க பயிற்சிகளை மாணவ- மாணவிகளுக்கு சொல்லி கொடுக்க உள்ளனர். இவற்றை செயல்படுத்திய பிறகு முறையாக பாடத்திட்டத்தை தொடங்க உள்ளனர்.

    மாணவ-மாணவிகள் முககவசம் அணிந்து தனி நபர் இடைவெளியை கடைபிடித்து வகுப்பறையில் அமரவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.


    ×