search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "satellite"

    இந்தியாவில் அதிவேக இணைய சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜிசாட்-11 என்ற செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. #ISRO #GSAT11 #FrenchGuiana
    புதுடெல்லி:

    இந்தியாவில் அதிவேக இணைய சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜிசாட்-11 என்ற செயற்கைக்கோளை 'இஸ்ரோ' வடிவமைத்துள்ளது. பிரான்சில் உள்ள கயானாவில் இருந்து 'ஏரைன் - 5' என்ற ராக்கெட் மூலம் 'ஜிசாட்-11' செயற்கைக்கோள் இந்திய நேரப்படி அதிகாலை 2 மணி அளவில் விண்ணுக்கு செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோளுடன் தென்கொரியாவின் ஜியோ செயற்கைக்கோளும் ஏவப்பட்டது.



    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 4 ஆயிரம் கிலோ எடை வரையிலான செயற்கை கோள்களை மட்டும் அனுப்ப முடியும் என்பதால் பிரான்சில் இருந்து இந்த செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.

    5 ஆயிரத்து 894 கிலோ எடை கொண்ட ஜிசாட்-11 செயற்கைக்கோளை, 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 'இஸ்ரோ' தயாரித்துள்ளது. #ISRO #GSAT11 #FrenchGuiana
    சந்திரனுக்கு முதன்முறையாக சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல இருப்பதாக அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.#Moon #satellite

    லாஸ்ஏஞ்சல்ஸ்:

    சந்திரனுக்கு முதன் முறையாக அமெரிக்கா ஆட்களை அனுப்பியது. விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் முதன் முறையாக அங்கு கால்பதித்து சரித்திர சாதனை படைத்தார். அமெரிக்காவை தொடர்ந்து சந்திரனில் பல்வேறு நாடுகள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றன.

    இதற்கிடையே சந்திரனில் மீண்டும் ஆய்வு மேற்கொள்ளும்படி ‘நாசா’ மையத்திடம் அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். எனவே சந்திரனின் உட்புறத்தில் மிக தீவிரமான ஆய்வு மேற்கொள்ள நாசா திட்டமிட்டுள்ளது.

    இந்தநிலையில், சந்திரனுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல இருப்பதாக அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.


    அதற்காக ‘பிக் பால்கன்’ என்ற மிகப்பெரிய ராக்கெட் தயாரிக்கப்படுகிறது. இந்த தகவலை அந்த நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது.

    இதன்மூலம் சந்திரனுக்கு முதன்முறையாக சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் நிறுவனம் என்ற பெருமை பெறுகிறது. அதே நேரத்தில் நிலவுக்கு சென்று வர வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவும் நனவாகப் போகிறது.

    சந்திரனுக்கு 2 சுற்றுலா பயணிகளை அனுப்பி வைக்க போவதாக கடந்த ஆண்டு (2017) பிப்ரவரி மாதத்தில் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் அறிவித்து இருந்தது. #Moon #satellite

    சந்திரனை ஆய்வு செய்ய வரும் அக்டோபர் மாதம் இஸ்ரோ அனுப்ப திட்டமிட்டிருந்த சந்திராயன்-2 செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் திட்டத்தில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது. #Chandrayaan2postponed
    புதுடெல்லி:

    தகவல் தொழில்நுட்பத்தில் நாளுக்கு நாள் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. பலவிதமான செயற்கைகோள்களை விண்ணில் அனுப்பி தகவல்களை சேகரித்து வருகிறோம்.

    சந்திரனை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008-ம் ஆண்டு சந்திராயன்-1 என்ற செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

    இது நிலவில் இருக்கும் நிலப்பரப்பை ஆய்வு செய்து தகவல் அனுப்பும் திறன் கொண்டது. இதன் மற்றுமொரு பாகம் 2017-2018 ஆண்டுகளில் விண்ணில் செலுத்தப்படும் என முன்னரே இஸ்ரோ அறிவித்திருந்தது.

    அதன்படி அதற்கான ஆராய்ச்சிகள் மற்றும் சோதனைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன. தற்போது ஓரளவு இந்த ஆராய்ச்சிகள் முடிவடைந்த நிலையில் 2018 ஏப்ரல் மாதத்தில் சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்திருந்தனர்.

    நிலவின் பரப்பு, சந்திரகிரகணம் உள்ளிட்டவை குறித்த தகவல்களைச் சேகரிக்க முற்றிலும் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சந்திராயன்-2 ஏவுகணை சுமார் 3,290 கிலோ எடை கொண்டது. நிலவின் சுற்றுப்பாதையில் இதை நிலைநிறுத்தி ஆய்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

    அதிநவீன தொலைத் தொடர்பு சேவைக்காக கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி ஜி.எஸ்.எல்.வி. எப்-08 ராக் கெட் மூலம் இஸ்ரோ தயாரித்த ஜிசாட் 6ஏ செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைகோளின் தொடர்புகள் 2 நாட்களிலேயே துண்டிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்த IRNSS-1H செயற்கைகோள் முயற்சியும் சற்று பின்னடைவை சந்தித்தது.

    இதற்கிடையில், நிறைய சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதால், சந்திராயன்-2 திட்டம் ஒத்திவைக்கப்பட்டுவதாகவும் ஏப்ரல் மாதத்துக்கு பதிலாக அக்டோபர் மாதம் விண்ணில் செலுத்த முடிவு செய்துள்ளோம் என இஸ்ரோ தலைவர் கே.சிவன் கடந்த மார்ச் மாதம் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், வெற்றிகரமான சந்திராயன்-1, மங்கள்யான்-1 திட்டத்துக்கு பின்னர் இரண்டுமுறை சிறிய பின்னடைவை இஸ்ரோ இருமுறை எதிர்கொண்டுள்ளதால் மிகுந்த சரிபார்ப்புக்கு பின்னர் சந்திராயன்-2 ஏவுகணையை விண்ணில் செலுத்தினால் போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே, அக்டோபர் மாதம் சந்திராயன்-2 ஏவுகணையை விண்ணில் ஏவும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அனேகமாக, வரும் ஜனவரி மாதத்துக்குள் சந்திராயன்-2 ஏவுகணை விண்ணில் ஏவப்படும் என தெரிகிறது. #Chandrayaan2launch #Chandrayaan2postponed #Chandrayaan2againpostponed
    உலகம் முழுக்க இணைய வசதியை வழங்கும் நோக்கில் ஃபேஸ்புக் நிறுவனம் செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #Facebook #Athena



    ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் தகவல் பரிமாற்றம் கடந்து நம் வாழ்வில் தவிர்க்க முடியாத டிஜிட்டல் களமாக மாறியிருக்கிறது. பலரும் தங்களது பெரும்பாலான நேரத்தை ஃபேஸ்புக்கில் செலவிடுகின்றனர். இந்நிலையில், ஃபேஸ்புக் நிறுவனம் செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   

    அமெரிக்காவின் ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனிடம் இருந்து கிடைத்திருக்கும் தகவல்களின் படி ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாய் இண்டர்நெட் வசதியை வழங்கும் திறன் கொண்ட செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதெனா (Athena) என்ற பெயரில் உருவாகும் ஃபேஸ்புக்கின் செயற்கைக்கோள் 2019-ம் ஆண்டின் துவக்கத்தில் விண்ணில் ஏவப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    புதிய செயற்கைக்கோள் உலகில் இணைய வசதியில்லாத பகுதிகளில் சீரான இணைய வசதியை வழங்கும் நோக்கில் உருவாக்கப்படுகிறது. இதற்கென ஃஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனிடம் ஃபேஸ்புக் பதிவு செய்திருக்கும் விண்ணப்பத்தில் பாயின்ட் வியூ டெக் எல்.எல்.சி. என்ற பெயர் கொண்டிருக்கிறது. 



    புதிய திட்டத்தின் மூலம் ஃபேஸ்புக் நிறுவனம், எலான் மஸ்க்-இன் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் சாஃப்ட் பேங்க்-இன் ஒபன்வெப் போன்ற  நிறுவனங்களுடன் இணைகிறது. ஜூலை 2016 தேதியிட்ட மின்னஞ்சல் விவரங்கள் மற்றும் ஃபேஸ்புக் சார்ந்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ஃபேஸ்புக் நிறுவனம் புதிய செயற்கைக்கோள் சார்ந்த இண்டர்நெட் திட்டத்தை துவங்க திட்டமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

    இத்துடன் ஜூன் முதல் டிசம்பர் 2017 வரையிலான காலகட்டத்தில் ஃபேஸ்புக் மற்றும் எஃப்.சி.சி. அதிகாரிகளிடையே பல கட்டங்களில் பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக மின்னஞ்சல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தகவல்களின் படி ஃபேஸ்புக் நிறுவனமும் அதெனா திட்டத்தை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருக்கிறது.

    புதிய திட்டம் குறித்து தற்சமயம் எவ்வித தகவல்களையும் வழங்க முடியாது என்றாலும், செயற்கைக்கோள் தொழில்நுட்பம் அடுத்த தலைமுறை பிராட்பேன்ட் உள்கட்டமைப்புகளில் மிகமுக்கிய பங்கு வகிக்கும் என்பதோடு, பிராட்பேண்ட் இணைப்பு முறையாக கிடைக்காத ஊரக பகுதிகளிலும் சீரான இணைய வசதியை வழங்க முடியும் என ஃபேஸ்புக் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். #Facebook #Athena 
    ×