search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Republic Day Celebration"

    • கே. எஸ். என் .வேணுகோபாலு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
    • விளையாட்டு மற்றும் கல்வியில் சாதனை படைத்தவர்களுக்கு பதக்கங்கள்- பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    தாராபுரம் :

    தாராபுரம் ராமகிருஷ்ணா நல்லம்மை பாலிடெக்னிக் கல்லூரியில் குடியரசு தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பழனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் கல்லூரி தாளாளருமான கே. எஸ். என் .வேணுகோபாலு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அறக்கட்டளை உறுப்பினர்கள் சௌந்தரராஜன், முத்துக்குமார் ,செயலாளர் விஷ்ணு செந்தூரன், கல்லூரி முதல்வர் முரளி கலந்து கொண்டனர். தேசியக்கொடியை ஏற்றி வைத்த பின்னர் விளையாட்டு மற்றும் கல்வியில் சாதனை படைத்தவர்களுக்கு பதக்கங்கள்- பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • கறம்பக்குடி ஒன்றியத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டபட்டது
    • விழாவில் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளிலும் குடியரசு தின விழா மற்றும் கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதன்படி கறம்பக்குடி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் முருகேசன், துணைத்தலைவர் நைனா, முகமது வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


    • போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசும் தேசிய கொடியேற்றி வைத்தனர்.
    • வருவாய் துறை, உள்ளிட்ட அலுவலகங்கள்,மற்றும் தனியார் நிறுவனங்கள்,ஆகியவற்றில் தேசியக்கொடியேற்றி வைத்து குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடத்தில் 74 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில், தேசியகொடியேற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் தேன்மொழி தேசிய கொடியேற்றினார்.

    விழாவில் ஆணையாளர் ரமேஷ் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அலுவலர்கள்,பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர், பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தில், துணை சூப்பிரண்டு சவுமியா தேசிய கொடியேற்றினார்.

    பல்லடம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர்மணிகண்டனும், போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசும் தேசிய கொடியேற்றி வைத்தனர்.

    பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் நகராட்சி தலைவர் கவிதாமணி தேசிய கொடியேற்றினார். விழாவில் ஆணையாளர் விநாயகம், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், சுகாதார ஆய்வாளர் சங்கர், நகர்மன்ற உறுப்பினர்கள், மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    இதேபோல பல்லடம் அரசு கல்லூரி, பல்லடம் அரசு ஆண்கள் பள்ளி,அரசு பெண்கள்பள்ளி,மற்றும் அரசு துவக்க, நடுநிலைப்பள்ளிகள்,தனியார் பள்ளிகள், அரசு ஆஸ்பத்திரி, நெடுஞ்சாலைதுறை,வருவாய் துறை, உள்ளிட்ட அலுவலகங்கள்,மற்றும் தனியார் நிறுவனங்கள்,ஆகியவற்றில் தேசியக்கொடியேற்றி வைத்து குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    • கலெக்டர் கொடியேற்றி நலத்திட்ட உதவி வழங்கினார்
    • மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது

    திருப்பத்தூர்

    திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜோலார்பேட்டையில் உள்ள மைதானத்தில் குடியரசு தின விழா கோலாகலமாக நடந்தது.இதில் கலெக்டர் அமர்குஷ்வாஹா கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

    விழாவில் சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் பதக்கம் வழங்கினார். பல்வேறு துறைகளின் சார்பில் 129 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி 44 லட்சத்து,31,418 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் போலீஸ் பிரிண்டர் பாலகிருஷ்ணன் அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • கலெக்டர் கொடியேற்றினார்
    • 826 பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் குடியரசு தினவிழாகலெக்டர் பாஸ்கர பாண்டியன் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்.

    தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.இதனைத் தொடர்ந்து 221 பயனாளிகளுக்கு ரூ.1கோடியே14லட்சத்து 30ஆயிரத்து 190 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

    பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 826 பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

    21 காவலர்களுக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். பள்ளி மாணவ- மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம் ராணிப்பேட்டை கோட்டாட்சியர்கள் வினோத்குமார், பாத்திமா, தனித்துணை கலெக்டர் தாரகேஸ்வரி, ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் லோகநாயகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் திருஉருவ சிலைக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • கலெக்டர் கொடியேற்றி நலத்திட்ட உதவி வழங்கினார்
    • 46 போலீசாருக்கு பதக்கம் வழங்கினார்

    வேலூர்:

    குடியரசு தின விழாவையொட்டி வேலூர் கோட்டை காந்தி சிலைக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து நேதாஜி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

    இதில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீஸ் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.

    விழாவில் தியாகிகள் மற்றும் அவரது வாரிசுகள் கவுரவிக்கப்பட்டனர்.தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.34 லட்சத்து 94,805 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மேலும் 46 போலீசாருக்கு பதக்கம் வழங்கினார்.

    சிறப்பாக பணியாற்றிய 271 அரசு அதிகாரிகள் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விழா முடிவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    • கலெக்டர் மா.பிரதீப் குமார் தேசியக்கொடியேற்றினார்
    • ரூ.32 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

    திருச்சி:

    திருச்சி மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று (26.01.2023) நடைபெற்ற குடியரசுதின விழாவில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் தேசி–யக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, மூவர் ணத்திலான பலூன்க–ளைப் பறக்கவிட்டார். இதனைத் தொடர்ந்து காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையினை ஏற் றுக்கொண்டார்.

    பின்னர் காவல் துறையில் மாநகர் மற்றும் மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 98 காவலர்களுக்கு முதல–மைச்சர் பதக்கத்தினை கலெக்டர் வழங்கி பாராட்டி–னார். தொடர்ந்து வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மாநகராட்சி, பேரூராட்சிகள், நகராட்சிகள், மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை, பள்ளிக் கல்வித் துறை, வேளாண்மைத்துறை, காவல் துறை, போக்குவ–ரத்துத்துறை, ஆவின், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைக ளில் சிறப்பாகப் பணி–யாற்றிய 52 அலுவலர்கள் மற்றும் பணி யாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி பாராட்டி–னார்.

    விழாவில் வருவாய்த் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் 31 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சத்து 68 ஆயிரத்து 55 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். முன்னதாக குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட கலெக்டர் திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    நாட்டின் விடுதலைக் காகப் பாடுபட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் குடும் பத்தினரை அவர்க–ளின் வீடுகளுக்குச் சென்று மாவட்ட நிர்வா–கத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து கௌர–விக்கப் பட்டனர். விழாவில், திருச்சி மாநகர போலீஸ் கமிஷ–னர் சத்தியபிரியா, மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்தி–கேயன், திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, ஆவின் பொது மேலாளர் அபிராமி, திருச்சி வருவாய் கோட்டாட் சியர் தவச்செல்வம் மற்றும் அனைத்துத் துறை அலுவ–லர்கள் கலந்து கொண்டனர்.

    • கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது.
    • போலீஸ் அணிவகுப்பை கலெக்டர் பார்வையிட்டு மரியா தையை ஏற்றுக்கொண்டார்.

    கடலூர்:

    குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடலூர் அண்ணா விளையாட்டு மைதானம் சுத்தம் செய்யப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை செய்து போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் காரில் வந்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் காலை 8.05 மணிக்கு தேசிய கொடியை ஏற்றினார். அப்போது போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் திறந்த ஜீப்பில் சென்று போலீஸ் அணிவகுப்பை கலெக்டர் பார்வையிட்டு மரியா தையை ஏற்றுக்கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருட்செ ல்வன் தலைமையில் அணி வகுப்பு நடைபெற்றது. இதில் காவல்துறை, தீயணைப்பு துறை, ஊர்காவல்படை, தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித்திட்ட, சாரண-சாரணிய, செஞ்சிலுவை சங்க மாணவ- மாணவிகள் அணிவகுத்து வந்தனர். பின்னர் காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 90 போலீஸ்காரர்களுக்கு முதல்-அமைச்சரின் காவலர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் பாலசுப்பிரமணியம் வழங்கினார். பின்னர் தியாகிகளுக்கும், மறைந்த தியாகிகளின் மனைவிகளுக்கும் கலெக்டர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

    இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை, மருத்துவம், வேளாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 183 பேருக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து வருவாய்த்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட தொழில் மைய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 35 பயனாளிகளுக்கு 2 கோடி 86 லட்சம் 35 ஆயிரம் 185 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாலசுப்பிரமணியம் வழங்கினார்.

    விழாவில் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், கூடுதல் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன், வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
    • கலெக்டர் தேசிய கொடியேற்றினார்

    கரூர்,

    குடியரசு தினவிழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் டாக்டர். த.பிரபுசங்கர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணி–வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.பின்னர் சமாதானப்புறாக் களையும், தேசியக்கொடி வண்ணத்திலான பலூன்க–ளையும் பறக்க விட்டார். மாவட்ட காவல் கண்கா–ணிப்பாளர் சுந்தர–வதனம் முன்னிலை வகித்தார்.

    அதனைத்தொடர்ந்து கலெக்டர் த.பிரபுசங்கர், சிறப்பாக பணியாற்றிய பல்வேறு அரசு துறைகளை சார்ந்த நபர்களை பாராட்டி நற்சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். விழாவில் 55 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் குடியரசு தின விழாவில் தேசியக்கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • பள்ளி மாணவ, மாணவி்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிலம்பாட்டம், யோகா மற்றும் கராத்தே உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக விளையாட்டு மைதானத்தில், இன்று குடியரசு தினவிழா நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்ததுடன், காவல்துறையில் சிறப்பாக பணி புரிந்தமைக்காக 56 காவலர்களுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் பதக்கம் வழங்கினார்.

    விழாவில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 057 மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்த்து றையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 62 ஆயிரத்து 500 மதிப்பீட்டிலும், தொழில் வணிகத்துறையின் (மாவட்ட தொழில் மையம்) சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 91 ஆயிரத்து 576 மதிப்பீட்டிலும் என மொத்தம் 12 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 78 ஆயிரத்து 133 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    மேலும், 59 காவல் துறையைச் சேர்ந்த காவலர்களுக்கும், பல்வேறுத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 388 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நற்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை கலெக்டர் வழங்கினார்.

    பின்னர், பள்ளி மாணவ, மாணவி்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிலம்பாட்டம், யோகா மற்றும் கராத்தே உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது.

    விழாவில் சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணகி, வருவாய் கோட்டாட்சியர்கள் கு.சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) சுதந்திரப் போராட்டத் தியாகிகள், அரசு அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டப்பட்டது.
    • இதில் மாவட்ட கலெக்டர் தேசியக்கொடி ஏற்றினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக சமாதான புறாக்களை பறக்க விட்டு, குடியரசின் பெருமையை வலியுறுத்தும் விதமாக மூவர்ண பலூன்களை பறக்க விட்டார். இதை தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறையை சேர்ந்த 61 பேருக்கு முதல்-அமைச்சர் பதக்கம், 63 பேருக்கு சான்றிதழ்கள், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், பொதுச் சேவையில் சிறந்து விளங்கிய தன்னார்வலர்கள் உட்பட மொத்தம் 190 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி னார்.

    வருவாய் நிர்வாகம் பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை , மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், வாழ்ந்து காட்டு வோம் திட்டம், மீன்வளத்துறை, தாட்கோ, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை துறை களின் சார்பில் முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, விலை யில்லா தையல் எந்திரங்கள், சலவை பெட்டிகள், முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை என மொத்தம் 48 பயனாளி களுக்கு ரூ. 96 லட்சத்து88 ஆயிரத்து 986 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

    விழாவில், ராமநாதபுரம் சரக காவல்துறை துணை தலைவர் துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை) பிரதீப்குமார். மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன்,வன உயிரின காப்பாளர் ஜெகதீஸ் பகன் சுதாகர் உள்பட போலீஸ் அதிகாரிகள், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • முதல் இரண்டு வருடங்கள் புதுடில்லியில் நடைபெறும் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
    • திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தேர்வான ஒரே அரசு கல்லூரி மாணவன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி துவங்கி 56 வருடங்கள் ஆகிறது. நாட்டு நலப்பணித் திட்டத்தில் இருந்து யாரும் புதுடில்லி மற்றும் சென்னையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பிற்கு தேர்வாகவில்லை. ஆனால் தற்போது கடந்த 2 ஆண்டுகளாக நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2வில் இருந்து குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள தேர்வாகி வருகிறார்கள். முதல் இரண்டு வருடங்கள் புதுடில்லியில் நடைபெறும் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.

    இந்த வருடம் (2023) சென்னையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைகழகத்திற்கு கீழ் உள்ள கல்லூரிகளிலிருந்து 120 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பாரதியார் பல்கலைக்கழகத்திலிருந்து 9 மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    அதில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 மாணவன் அரவிந்தன் (மூன்றாமாண்டு விலங்கியல்) தேர்வாகி உள்ளார். இது ஹாட்ரிக் சாதனையாக உள்ளது. மேலும் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தேர்வான ஒரே அரசு கல்லூரி மாணவன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

    ×