என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூரில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
    X

    குடியரசு தினத்தையொட்டி வேலூர் கோட்டை கொத்தளத்தில் கலெக்டர்

    குமாரவேல் பாண்டியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்த காட்சி.

    வேலூரில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

    • கலெக்டர் கொடியேற்றி நலத்திட்ட உதவி வழங்கினார்
    • 46 போலீசாருக்கு பதக்கம் வழங்கினார்

    வேலூர்:

    குடியரசு தின விழாவையொட்டி வேலூர் கோட்டை காந்தி சிலைக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

    இதனைத் தொடர்ந்து நேதாஜி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

    இதில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீஸ் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார்.

    விழாவில் தியாகிகள் மற்றும் அவரது வாரிசுகள் கவுரவிக்கப்பட்டனர்.தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.34 லட்சத்து 94,805 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மேலும் 46 போலீசாருக்கு பதக்கம் வழங்கினார்.

    சிறப்பாக பணியாற்றிய 271 அரசு அதிகாரிகள் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விழா முடிவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    Next Story
    ×