search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் குடியரசு தின விழா:   பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 183 பேருக்கு பாராட்டு சான்றிதழ்: கலெக்டர் பாலசுப்பிரமணியம் வழங்கினார்
    X

    கடலூரில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் தேசியக்கொடி ஏற்றினார். அருகில் அய்யப்பன் எம்.எல்.ஏ, கூடுதல் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன்,மேயர் சுந்தரி ராஜா உள்ளனர்.

    கடலூரில் குடியரசு தின விழா: பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 183 பேருக்கு பாராட்டு சான்றிதழ்: கலெக்டர் பாலசுப்பிரமணியம் வழங்கினார்

    • கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது.
    • போலீஸ் அணிவகுப்பை கலெக்டர் பார்வையிட்டு மரியா தையை ஏற்றுக்கொண்டார்.

    கடலூர்:

    குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடலூர் அண்ணா விளையாட்டு மைதானம் சுத்தம் செய்யப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை செய்து போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் காரில் வந்தார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் காலை 8.05 மணிக்கு தேசிய கொடியை ஏற்றினார். அப்போது போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் தேசிய கீதம் இசைத்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் திறந்த ஜீப்பில் சென்று போலீஸ் அணிவகுப்பை கலெக்டர் பார்வையிட்டு மரியா தையை ஏற்றுக்கொண்டார்.

    இதனைத் தொடர்ந்து ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருட்செ ல்வன் தலைமையில் அணி வகுப்பு நடைபெற்றது. இதில் காவல்துறை, தீயணைப்பு துறை, ஊர்காவல்படை, தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித்திட்ட, சாரண-சாரணிய, செஞ்சிலுவை சங்க மாணவ- மாணவிகள் அணிவகுத்து வந்தனர். பின்னர் காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 90 போலீஸ்காரர்களுக்கு முதல்-அமைச்சரின் காவலர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் பாலசுப்பிரமணியம் வழங்கினார். பின்னர் தியாகிகளுக்கும், மறைந்த தியாகிகளின் மனைவிகளுக்கும் கலெக்டர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

    இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறை, மருத்துவம், வேளாண்மைத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 183 பேருக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து வருவாய்த்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட தொழில் மைய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 35 பயனாளிகளுக்கு 2 கோடி 86 லட்சம் 35 ஆயிரம் 185 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாலசுப்பிரமணியம் வழங்கினார்.

    விழாவில் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், கூடுதல் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன், வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரி சங்கர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×