search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா கோலாகலம்
    X

    திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழா கோலாகலம்

    • கலெக்டர் மா.பிரதீப் குமார் தேசியக்கொடியேற்றினார்
    • ரூ.32 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

    திருச்சி:

    திருச்சி மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று (26.01.2023) நடைபெற்ற குடியரசுதின விழாவில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் தேசி–யக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, மூவர் ணத்திலான பலூன்க–ளைப் பறக்கவிட்டார். இதனைத் தொடர்ந்து காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையினை ஏற் றுக்கொண்டார்.

    பின்னர் காவல் துறையில் மாநகர் மற்றும் மாவட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றிய 98 காவலர்களுக்கு முதல–மைச்சர் பதக்கத்தினை கலெக்டர் வழங்கி பாராட்டி–னார். தொடர்ந்து வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மாநகராட்சி, பேரூராட்சிகள், நகராட்சிகள், மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை, பள்ளிக் கல்வித் துறை, வேளாண்மைத்துறை, காவல் துறை, போக்குவ–ரத்துத்துறை, ஆவின், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைக ளில் சிறப்பாகப் பணி–யாற்றிய 52 அலுவலர்கள் மற்றும் பணி யாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி பாராட்டி–னார்.

    விழாவில் வருவாய்த் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம் பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் 31 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சத்து 68 ஆயிரத்து 55 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். முன்னதாக குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட கலெக்டர் திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    நாட்டின் விடுதலைக் காகப் பாடுபட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் குடும் பத்தினரை அவர்க–ளின் வீடுகளுக்குச் சென்று மாவட்ட நிர்வா–கத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து கௌர–விக்கப் பட்டனர். விழாவில், திருச்சி மாநகர போலீஸ் கமிஷ–னர் சத்தியபிரியா, மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்தி–கேயன், திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, ஆவின் பொது மேலாளர் அபிராமி, திருச்சி வருவாய் கோட்டாட் சியர் தவச்செல்வம் மற்றும் அனைத்துத் துறை அலுவ–லர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×