என் மலர்

  நீங்கள் தேடியது "Rajapakse"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து விட்டு மீண்டும் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என ராஜபக்சே வலியுறுத்தி உள்ளார். #Rajapakse #srilankaparliament
  கொழும்பு:

  இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை நீக்கி விட்டு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா நியமித்தார். இதனால் அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

  சிறிசேனாவின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ராஜபக்சேவுக்கு பாராளுமன்றத்தில் போதிய மெஜாரிட்டி இல்லை. அதனால் அவர் மீது 2 தடவை கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இருந்தும் ரனில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக நியமிக்க அதிபர் சிறிசேனா மறுத்து வருகிறார்.

  இந்த நிலையில் தற்போது பிரதமராக பதவி வகிக்கும் ராஜபக்சே முதன் முறையாக டி.வி.யில் பேசினார். அப்போது அதிபர் சிறிசேனா நேர்மையான மற்றும் உண்மையான அரசை நடத்தி வருகிறார். ஆனால் இது இடைக்கால அரசுதான்.

  எனவே நிலையான அரசு அமைய வேண்டியது அவசியம். ஆகவே பாராளுமன்றத்தை கலைத்து விட்டு மீண்டும் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும்” என்றார்.

  இதற்கிடையே அதிபர் சிறிசேனா வெளிநாட்டு பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். அப்போது பிரதமர் பதவியில் ராஜபக்சேவை நியமித்தது ஏன் என விளக்கம் அளித்தார்.  அவர் கூறும்போது, “ரனில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கியவுடன் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகிய 2 பேரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

  ஆனால் பிரதமர் பதவி ஏற்க இருவரும் மறுத்து விட்டனர். எனவேதான் 3-வது நபரான மகிந்த ராஜபக்சேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது” என்றார். #Rajapakse #srilankaparliament
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இலங்கையில் அரசுக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கும் இடையே போர் நடந்த முன்னாள் போர்க்களத்தில் இருந்து சுமார் 38 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. #SriLanka
  கொழும்பு:

  இலங்கையின் மன்னார் பகுதியில் உள்ள முன்னாள் போர்க்களத்தில் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டுவதற்காக குழி தோண்டப்பட்ட போது அங்கு எலும்புக்கூடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கட்டிட வேலை நிறுத்தப்பட்டு அந்த இடம் மாஜிஸ்திரேட் பிரபாகரனின் மேற்பார்வைக்குள் கொண்டுவரப்பட்டு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

  தற்போது, அந்த பகுதியில் இருந்து சுமார் 38 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த எலும்புக்கூடுகள் தற்போது மன்னார் மருத்துவமனையில் வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்ட இலங்கையின் முன்னாள் போர்க்களமானது, கடந்த 1983-ம் ஆண்டு முதல் 2009 வரை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் அரசுப்படைக்கும் இடையே போர் நடைபெற்ற இடம் ஆகும். விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் மன்னார் பகுதியை கைப்பற்றியபோது, இலங்கை அதிபர் ராஜபக்சே தலைமையிலான படைகளுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையே இங்கு போர் நடைபெற்றது.

  இலங்கையில் தமிழர்களின் உரிமை மறுக்கப்பட்டதோடு சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் ராஜபக்சே அரசால் கொல்லப்பட்டதாக சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் இலங்கை மீது குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. #SriLanka
  ×